Followers

Wednesday, April 01, 2015

ஆணவம் அழித்தல் - குர்ஆனும் தாயுமானவரும்

1400 வருடங்களுக்கு முன்பு அரபுலகம் பல தெய்வ வழிபாட்டிலும், சாதி வெறியிலும் மிகைத்திருந்த போது தமிழ் நாட்டில் நமது முன்னோர்கள் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மிக உயர்ந்த இடத்திலேயே இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் சில பாடல்களை பார்த்து வருகிறோம்....

நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந்
தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ.

எனக்குள் குடி கொண்ட 'நான்' என்ற அகங்காரம், ஆணவம் போன்ற துர் குணங்கள் நான் அறியாமல் என்னை விட்டு அகல வேண்டும்: அவ்வாறு நீங்கியவுடன் எல்லா உயிர்களுக்கும் எல்லா உலகங்களுக்கும் தனது அருளை நீக்கமற செலுத்தி வரும் பரம் பொருளான அந்த இறைவனை காணும் நாள் எந்நாளோ?

தாயுமானவர் பாடல்கள் 636:7

இறைவனைக் காண வேண்டும்: அவ்வாறு காணும் நேரம் எனக்குள் இருக்கும் அகந்தை அகம்பாவம் அகங்காரம் அனைத்தும் நான் அறியாமலேயே என்னை விட்டு நீங்கி விட வேண்டும் என்கிறார் தாயுமானவர். எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்ற இறைவனுக்கு முன்னால் அற்ப மனிதனாகிய நான் எதற்கு அகங்காரம் கொண்டு அலைய வேண்டும் என்று கேட்கிறார் தாயுமானவர்.

ஆணவம்,அகங்காரம், கர்வம் பற்றி குர்ஆன் கூறும் கருத்தையும் பார்ப்போம்.

மலைகளின் உயரத்தை அடையவே முடியாது!

'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.'

17 : 37 - குர்ஆன்

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ராக்கெட் தொழில் நுட்பத்தால் பூமிக்கு அப்பாலும் மனிதனின் அறிவு விரிகிறது. இன்னும் ஒரு இருபது வருடங்களில் ஏற்படப் போகும் மாற்றங்களை இப்பொழுதே நம்மால் கணித்து விட முடிகிறது. ஆனால் சில விஷயங்களில் உன்னால் முடியாது என்று இறைவன் சவால் விட்டு சில விபரங்களை குர்ஆனில் ஆங்காங்கே கோடிட்டு காட்டுகிறான். அது போன்ற சவால் விடும் வசனங்களில் ஒன்று தான் நாம் மேலே பார்த்தது.

மனிதன் இன்று வரை பூமியின் கீழ் துளையிட்டு அதிக தூரம் செல்ல முடியவில்லை. அதிகபட்சமாக அவன் சென்ற தூரம் முன்று கிலோ மீட்டர் மட்டுமே! இதற்கு மேலும் துளையிட்டு மனிதன் அங்கு செல்ல முடியாது. சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் கைவிரித்துவிட்டனர்.

மலைகளின் உயரத்தை....

உலகின் மிக உயரமான மலை இமய மலை ஆகும். இம் மலையின் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டராகும். இமய மலையின் உச்சியை மனிதன் அடைந்து விட்டான். ஆனால் அந்த உயரத்திற்கு பூமியை துளையிட்டு மனிதனால் செல்ல முடியுமா என்றால் முடியாது என்று குர்ஆன் அடித்து சொல்கிறது. வலைப் பக்கத்திலேயே ஒரு சிலர் இறைவனை விட மனிதன் சக்தி படைத்தவன் என்று நாத்திக வாதம் பேசுவதைப் பார்க்கிறோம். அப்படிப் பட்டவர்களைப் பார்த்து இறைவன், 'இது போன்று ஆணவத்தில் பிதற்றி திரியாதே! உன்னால் பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அளவை அடையவே முடியாது' என்று எச்சரிக்கின்றான்.

விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற குர்ஆன் பூமிக்கு அடியில் நீண்ட மலையின் உயரத்திற்கு போக முடியாது என்று அடித்துச் சொல்கிறது.

தன் இனத்தை விட மற்ற இனம் தாழ்ந்தது என்று இன்றும் எழுதியும் பேசியும் வருபவர்களைப் பார்க்கிறோம். அதேபோல் நான் பெரும் சிந்தனையாளன், நான் இந்த நாட்டின் அதிபதி, நான் பெரும் கோடீஸ்வரன் என்றெல்லாம் இறுமாப்போடு உலகில் வலம் வருவோரையும் இன்றும் பார்க்கிறோம். இது போன்ற எண்ணம் கொண்டவர்களை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட குர்ஆனிய வசனம் அமைந்துள்ளது.

நீ வானத்துக்கு மேலே போகலாம், கணிணித் துறையினால் உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வரலாம். ஆனால் உன் காலுக்கு கீழே இருக்கும் பூமியை பிளந்து மலைகளின் உயரத்தை அடைய முடியுமா என்றால் முடியாது. எனவே வீண் பெருமை பேசி கர்வத்துடன் உலகில் நடக்காதே என்பது இதன் மூலம் நமக்கு கிடைக்கும் பாடம். அதே போல் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு சொன்ன இந்த கருத்து இன்றும் இனி என்றும் மெய்ப்பிக்கப் படுவதால் இது நம்மைப்படைத்த இறைவனின் வார்த்தைதான் என்ற முடிவுக்கும் வருகிறோம்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

2 comments:

Anonymous said...

//பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.'

17 : 37 - குர்ஆன்//
//உலகின் மிக உயரமான மலை இமய மலை ஆகும். இம் மலையின் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டராகும். இமய மலையின் உச்சியை மனிதன் அடைந்து விட்டான். ஆனால் அந்த உயரத்திற்கு பூமியை துளையிட்டு மனிதனால் செல்ல முடியுமா என்றால் முடியாது என்று குர்ஆன் அடித்து சொல்கிறது. //

ஏனுங்க சுவனம், குரான்ல இமயமலையின் உயரத்தின் அளவை துளை இட முடியாதுன்னா சொல்லிருக்கு. பொதுவா மலைகளின் உயரத்தை அளவிட முடியாது என்று தானே உள்ளது. எங்க ஊரு தாடகை மலை ஒன்னரை கிலோ மீட்டர் உயரம் தான்

//மனிதன் இன்று வரை பூமியின் கீழ் துளையிட்டு அதிக தூரம் செல்ல முடியவில்லை. அதிகபட்சமாக அவன் சென்ற தூரம் முன்று கிலோ மீட்டர் மட்டுமே! //

பாத்தீங்களா, மலையின் உயரத்தை விட அதிகமாக துளையிட்டு விட்டார்கள். உங்க வசதிக்கு ஏத்த மாதிரி குரான்ல சொல்லி இருக்கிறத எப்படி எல்லாம் விளக்குறீங்க.

ஒரு குப்பை பிராடு புத்தகத்தை கடவுளின் புத்தகம் என்று நிருபிக்க ஈமாந்தாரிகள் ரொம்பவே சிரமப்படுறீங்க

Anandan Krishnan
Kanyakumari

C.Sugumar said...

தாயுமானவாின் கருத்துக்கும் தங்களதுவிளக்கத்திற்கும் சமபந்தம் இல்லை.ஏன் இப்படி உளறிக்கொட்டியிருக்கின்றீா்கள். குரான் ஒரு வெத்து வேட்டு என்பதை உணா்ந்ததாலா ?தாயுமானவாின் உன்னதகுணத்தின் முன் அரேபிய காடையா்களின் தரம் குன்றி நிற்பதைப்பாா்தது சுவனப்பிாியன் தடுமாறுகின்றாரோ?