Followers

Monday, April 27, 2015

'ஹனபி' அடக்கத் தளம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?நேற்று சகோ அப்பாஸ் அவர்களின் தாயாரின் இறந்த உடலை அடக்க மறுத்த இராஜகிரியின் பெரிய பள்ளியின் அடக்கஸ்தலம் இதுதான். அதன் முகப்பையே நீங்கள் காண்கிறீர்கள். அந்த முகப்பில் பள்ளி நிர்வாகத்தினர் எழுதியிருக்கும் வாசகத்தை கவனியுங்கள். மிகப் பெரிய எழுத்தில் 'ஹனபி' என்று எழுதியுள்ளார்கள்.

இது நபி காட்டித் தந்த வழியா? இஸ்லாத்தில் சாதியை புகுத்துவது முறையாகுமா? நபிகள் நாயகம் இஸ்லாத்தை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தி பல நூறு வருடங்களுக்கு பிறகு சில சட்டங்களுக்கு விளக்கவுரை எழுதியவர் இமாம் அபு ஹனீபா. இவரின் மார்க்க அறிவை நாம் கொஞ்சம் கூட குறைத்து மதிப்பிடவில்லை. அந்த காலத்தில் அவர்களுக்கு கிடைத்த மார்க்க அறிவை பயன்படுத்தி சில மார்க்க சட்டங்களை வகுத்து தந்துள்ளார்கள். இன்றைய கணிணி யுகத்தில் ஷாஃபி, ஹம்பலி, மாலிகி, மற்றும் அனைத்து நபித் தோழர்களின் வாக்கு மூலங்களும் நமக்கு நொடியில் கிடைத்து விடுகின்றன. இவற்றை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பல இமாம்கள் தங்களின் புரிதலில் அறியாமல் சில தவறுகளை செய்துள்ளனர். இவ்வாறு தவறுகள் நேர்ந்தால் நீங்கள் நபிகளின் வாக்கையே பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று வாக்கு மூலங்களும் கொடுத்து சென்றுள்ளார்கள்.

ஆனால் ஹனபி இமாமைப் பின்பற்றுபவர்களும் ஷாபி இமாமைப் பின்பற்றுபவர்களும் மத்ஹப் வெறியால் இந்த தவறுகளை ஒத்துக் கொள்வதில்லை. நபி மொழிக்கு மாற்றமாக நடக்கவும் துணிந்து விட்டனர்.

'முஸ்லிம்களின் அடக்கத் தளம்' அல்லது 'இஸ்லாமியரின் அடக்கத் தளம்' என்றுதான் அங்கு எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மார்க்கத்தை விளங்காத பள்ளி நிர்வாகிகள் 'ஹனபி' என்று கொட்டை எழுத்தில் எழுதி தங்களின் சாதி வெறியை தீர்த்துக் கொண்டுள்ளனர். இன்று தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகளை காட்டமாக விமரிசித்து வரும் முஹம்மது ஆஷிக் போன்றவர்கள் பள்ளி நிர்வாகிகளின் இந்த மார்க்க விரோத போக்கைப் பற்றி எந்த விமரிசனங்களையும் வைப்பதில்லை. ஊர் ஜமாத்தார்கள் யாரும் இது பற்றி பள்ளி நிர்வாகிகளிடம் விளக்கமும் கேட்டதில்லை. நபிகள் நாயகத்தின் காலத்திலிருந்து ஹனபி இமாம் காலம் வரை வாழ்ந்த முஸ்லிம்களை எந்த லிஸ்டில் சேர்க்கப் போகிறார்கள் இந்த பள்ளி நிர்வாகிகள்? குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளிலிருந்தோ ஏதேனும் ஆதாரங்களைத் தர முடியுமா? நாளை மறுமையில் இறைவன் 'பள்ளியை நிர்வகிககும் மகத்தான பணியை உன்னிடம் தந்திருந்தேனே! அங்கு ஹனபி இமாமை எந்த ஆதாரத்தில் புகுத்தினாய்?' என்று கேட்டால் என்ன பதிலை இவர்கள் வைத்துள்ளார்கள்? பதில் தருவார்களா?

2 comments:

Anonymous said...

நரக பிரியரே உங்களுடைய பீ ஜெ அண்ணன் வருவதற்கு முன்பு வரை தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்குள் பிரிவினை இல்லை. இப்போது எத்தனை பிரிவுகள் முஸ்லிம்களிடம் உள்ளது என்பது அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் தான் தெரியும். ஒரு ப்ளாக் கிடைத்துவிட்டது என்பதர்கஹா இஷ்டத்துக்கு எழுதுகின்றீர்

Anonymous said...

ஹனபி என்ற பெயரில் என்ன தவறு கண்டு புடிதீர். ஒரு பள்ளி வாசல் என்று வரும்போது அதற்கு கட்டு பட்டு நடக்க வேண்டும், இது எப்படி உங்களுக்கு தெரியும் நீங்க தான் ஒட்ட்றுமய விரும்பதவ்ங்கலச்சே. குடும்பத்துக்குள்ள பிரச்சனைய உருவக்குரவங்கலச்சே. உங்களுடைய இஷ்டபடி பண்ண வேண்டும் என்றால் நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத் (தறுதலை கூடாரம்) சார்பில் ஒரு மயானம் கட்ட வேண்டியது தானே நரக பிரியா