
ஆறாம் வகுப்பு படித்து வரும் பன்னிரண்டே வயதான மரியம் ஆஷிஃப் சித்திகி 'பகவத் கீதை' தொடர்பாக வைக்கப்பட்ட போட்டியில் முதலாவதாக வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். 4500 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் இவர் முதலிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. iskcon என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. உபி முதல்வர் அகிலேஷ் யாதவும் இந்த சிறுமியை வெகுவாக பாராட்டியுள்ளார். 'அனைத்து மதத்தின் கருத்துக்களையும் படிக்க வேண்டும். அனைத்து மதத்தவரையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக்கப்பட வேண்டும்' என்ற கருத்துப்பட தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார் அகிலேஷ் யாதவ்.
மரியம் ஆஷிஃப் சித்திக்கியின் பெற்றோர் இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள். உலகில் உள்ள அனைத்து மத நூல்களும் ஒரு காலத்தில் இறைவனிடமிருந்து வந்தவையே! காலப் போக்கில் மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டதால் அதனை சரி செய்ய புதிய வேதங்களை இறைவன் மனிதக் குலத்துக்கு வழங்கி வந்தான். எனவே உலகில் உள்ள அனைத்து மத நூல்களையும் படிக்க வேண்டும். உலக மதங்களின் புனித வேதங்களின் ஒற்றுமையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதன் மூலம் உலக மக்கள் யாவரும் நமது சகோதரர்களே என்ற பரந்த மனப்பான்மைக்கு வந்தால் மக்களிடையே உள்ள குரோதங்கள் மறைய வாய்ப்புண்டு.
தகவல் உதவி
press trust of india
04-04-2015
No comments:
Post a Comment