

இஸ்லாமிய பாடல்களை பல ஆண்டுகளாக தமிழகமெங்கும் ஒலிக்கச் செய்த நாகூர் ஹனீஃபா இன்று இரவு காலமானார். சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 96. இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். (நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே திரும்பிச் செல்பவர்களாகவே இருக்கிறோம்...)
இறைவன் இவரது பாவங்களை மன்னிக்க நாமும் பிரார்த்திப்போமாக!
2 comments:
இவரது பாவங்களை இறைவன் நிச்சயம் மன்னிப்பாா்.
01. இசை என்பது அரேபியாவில் கிடையாது.எனவே இசை-பாடகராக இவர் வாழ்ந்த வாழ்க்கை காபீராகும்.
02.அன்பு இருக்குது அறம் இருக்குது அரபு நாட்டிலே என்று அணட புளுகு ஆகாச புளுகுகளை பாடல்களில் விட்டு மக்களை ஏமாளியாக்கினாா்.
இறைவன் அவரை மன்னிப்பானாக ?
ஒரு இந்து வாக நான் அவரை புண்ணியமான ஆத்மாவாகப் பாா்க்கின்றேன். அரேபியாவில் -ஈசுலாமிய உலகில் இசை நாடகம் போன்ற மனித மனதை வருடும் விசயங்கள் இல்லமல் போனது அங்கு நிலவும் கலகங்களுக்கு காரணம். கா்நாடக சங்கீத ராகங்களில் பல அரேபிய மதபாடல்களை் பாடி இந்துக்களையும் மகிழ்வித்தாா். கள்ளம்கபடம் இல்லமல் ”இவரது பாடல்களை இந்துக்கள் ரசித்து கேட்பதுண்டு.
தவறு செய்தவர்கள் இறக்கும்போதுதான் "இவர் தவறுகளை இறைவன் மன்னிப்பானாக" என்று கூறுவர.
திரு ஹனீபா அவர்கள் இறைவனை போற்றி பாடல்கள் பாடியவர். நல்ல காரியம்தானே செய்துள்ளார்?
இவரை இறைவன் ஆசீர்வதிப்பாராக என்றல்லவா சொல்ல வேண்டும்?
Post a Comment