Followers

Thursday, April 02, 2015

சுவனப்பிரியன் இருக்கும் நாட்டில் சண்டையா?

திரு ஹானஸ்ட் மேன்!

//இஸ்லாமியரின் இரு பிரிவுகள் மோதினால் மாளப்போவது அந்த இஸ்லாமியனே. அதனால் உலகில் அவன் ஜனத்தொகை வெகுவாக குறையும். இது ரொம்ப நல்ல விஷயம்தானே! சந்தோஷபபடுங்க சார். திரு சுவனபிரியன் அரேபியாவில் நடக்கும் சண்டையில் தீவிரமாக மும்முரமாக ஈடுபட்டுள்ளாரோ? அவருக்கு நிச்சயம் “”72″” கிடப்பது உறுதி. தினமும் பேப்பரை திறந்து படித்தால் அரேபியாவில் சண்டை. லிபியாவில் சண்டை எகிப்தில் சண்டை. ஆப்கனிஸ்தானில் குண்டு வெடித்தது. பாகிஸ்தானில் குண்டு வெடித்தது. நைஜீரியாவில் பள்ளி (பெண்) குழந்தைகள் கடத்தல் என்று உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளை பற்றியே செய்தி வருகிறது. நியுசிலாந்தில் குண்டு, கிரீன்லாந்தில் குண்டு ஸ்காட்லாந்தில் சண்டை என்று எப்போதாவதாகிலும் செய்தி வருகிறதா? வருவதில்லை.//

தீவிரவாதத்துக்கு யார் காரணம் என்பதை நீங்களும் உணர்ந்துள்ளீர்கள். இந்த சண்டைகளால் அதிகம் பலனடைவது அமெரிக்க ஆயுத வியாபாரிகள். அமெரிக்க அரசை நடத்திச் செல்வதும் அந்த கட்சிகளுக்கு பண உதவி செய்வதும் இவர்களே! அடுத்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அமெரிக்க ஐரோப்பிய அரசுகள்.

நேற்று கூட கென்யாவில் பள்ளி குழந்தைகளை இஸ்லாமிய பெயரில் சில காட்டுமிராண்டிகள் கொன்று குவித்துள்ளனர். இதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறதா? கண்டிப்பாக இல்லை. 'ஒரு உயிரைக் கொன்றவன் ஒட்டு மொத்த உயிர்களையும் கொன்றதற்கு சமமாகும்” என்று குர்ஆன் கட்டளையிட அதற்கு மாறாக அப்பாவி குழந்தைகளை கொல்பவன் எவ்வாறு இஸ்லாமியனாக முடியும்?

ஐஎஸ்ஐஎஸ், அல்சபாப், இந்தியன் முஜாஹிதின் என்று எந்த பெயரில் வந்தாலும் குர்ஆனுக்கு மாற்றமாக செயல்படும் எவனும் இஸ்லாமியனாக முடியாது. முன்பு பாகிஸ்தானில் நடந்த பள்ளி குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவன் உடம்பில் பச்சைக் குத்திய ஐரோப்பியன் என்ற உண்மை ஆதாரத்தோடு வெளிப்பட்டது. மாலேகான் குண்டு வெடிப்பில் முதலில் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பிறகு அதனை செய்தது சாத்வி பிரக்யாசிங் என்ற பெண் துறவி என்பது நிரூபணமானது. இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உளவுத் துறையால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று முன்னால் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உண்மையை போட்டு உடைத்ததையும் நாம் மறந்து விட முடியாது.

உங்களோடு பழகி வரும் சக தமிழ் இஸ்லாமியரை நோக்குங்கள். அவர்களிடம் தீவிரவாதம் இருக்கிறதா? புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஏ ஆர் ரஹ்மானிடமோ, அல்லது யுவன் சங்கர் ராஜாவிடமோ இது போன்ற தீவிரவாத எண்ணம் தலை தூக்கி பார்த்துள்ளீர்களா? எனவே இந்த குண்டு வெடிப்புகளும் கொலைகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுப்பதற்காக இஸ்ரேலும், அமெரிக்காவும், ஐரோப்பாவும் செய்து வரும் கூட்டு சதிகளின் ஒரு பகுதியே. எத்தனையோ எதிர்ப்புகளை சமாளித்த இஸ்லாம் இந்த எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி நடை போடும். அதனை உங்கள் காலங்களிலேயே பார்க்கத்தான் போகிறீர்கள்.

//நியுசிலாந்தில் குண்டு, கிரீன்லாந்தில் குண்டு ஸ்காட்லாந்தில் சண்டை என்று எப்போதாவதாகிலும் செய்தி வருகிறதா?//

கண்டிப்பாக வெடிக்காது. தீவிரவாதத்தை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு போதிக்கவில்லை. எனவே அந்த நாடுகள் குண்டு வெடிப்புகள் இல்லாது அமைதியாக உள்ளன.

//திரு சுவனபிரியன் அரேபியாவில் நடக்கும் சண்டையில் தீவிரமாக மும்முரமாக ஈடுபட்டுள்ளாரோ?//

உங்களின் புலனாய்வு புல்லரிக்க வைக்கிறது. நான் தற்போது இருப்பது தமிழகத்தில்... :-)

//என்ன நம்ப சுவனப்பிரியன் இருக்கும் இடத்தில் மத சண்டையா? IP அட்ரெஸ் செயல் இழந்து விட்டதோ . அய்யோகோ அய்யோகோ???// - பாண்டியன்

நான் தமிழகம் வந்து விட்டதால் அங்கு சண்டை ஆரம்பமாகி விட்டது என்று நினைக்கிறேன். :-)

No comments: