Followers

Sunday, July 19, 2015

திரு மூலர் கூறும் ஓரிறைக் கொள்கை!

திரு மூலர் கூறும் ஓரிறைக் கொள்கை!

1. கடவுள் வாழ்த்து. ( 1 - 50 )

0001: சிவன் ஒருவனே சத்தியோடு இரண்டாய், பிரம்ம, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாகி ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து, நான்கு வேதங்களாகி உண்மை விளங்கச் செய்து, ஐந்து இந்திரியங்களையும் அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய், ஆறு ஆதாரங்களிலும் விரிந்து, அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் பொருந்தி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து அட்டமூர்த்தமாய் விளங்குகின்றான்.

0002: இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூய்மையானவனும் நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனும், தெற்குத் திசைக்குரிய இயமனைஉதைத்தவனுமாகிய இறைவனைப் புகழ்ந்து பாடி நான் உரைக்கின்றேன்.

0003: உயிர்களோடு உடனாய் நின்றவனும், அழிவில்லாத தேவர்கள் “ஆடையில்லாதவன்" என்று பகரும் தலைவனும், பக்கத்திலுள்ள தேவர்களாலும் கூட அறியமுடியாத மேலோனும் ஆகிய இறைவனை நான் அணுகி இருந்து அநுதினமும் வழிபாடு செய்வேன்.

0004: அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருளானவனும் ஆகாய மண்டலத்துக்கு வித்துப் போன்றவனும், அடைக்கலமான இடத்தில் என்னைச் செல்ல விட்டவனும் ஆகிய இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி மாறுபாடுடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நின்றேன்.

0005: சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை. அவனுக்கு உவமையாக இங்கு அகத்தே உடம்பிலும் எவரும் இல்லை. அவன் அண்டத்தைக் கடந்து நின்ற போது பொன் போன்று பிரகாசிப்பான். சிவன் செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ரதளத் தாமரையில் விளங்குபவனாவான்.

0006: சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் ஒருவரும் இல்லை. சிவனல்லாது செய்கின்ற அருமையான தவமும் இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.

0007: பொன் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்குபவனும், பழமையாகவே சமமாக வைத்து எண்ணப்படும் பிரமனாதி மூவருக்கும் பழமையானவனும், தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைமகனும் ஆகிய இறைவனை யாரேனும் "அப்பனே" என்று வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவுவான்.

0008: தாழ்ந்த சடையுடைய சிவன் தீயைக் காட்டிலும் வெம்மையானவன்; நீரைக் காட்டிலும் குளிர்ச்சியானவன்; குழந்தையினும் நல்லவன்; பக்கத்தில் இருப்பவன்; அவனிடம் அன்பு செய்வார்க்கு தாயைக் காட்டிலும் கருணை புரிவான். இவ்வாறிருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை.

0009: பொன்னால் செய்யப்பெற்ற அழகான சடை என்று கூறுமாறு அவன் பின்புறம் விளங்க இருப்பவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும். உயிர்கட்கெல்லாம் தலைவனாகிய அந்த சிவன் என்னால் வணங்கத்தக்கவன். அப்பெருமானால் வணங்கத் தக்கவர் வேறு எவரும் இல்லை.

0010: சிவனாகிய தானே இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டு ஆகாய வடிவினனாகவும் உள்ளான். சிவனே சுடுகின்ற அக்கினியாகவும் உள்ளான். சிவனே அருள் பொழியும் சத்தியுமாய் இருக்கிறான். சிவனே விசாலமான மலையாகவும் குளிர்ச்சியான கடலாகவும் உள்ளான். சிவனே எல்லாப் பொருளிலும் வியாபகமாய் உள்ளான்.

0011: தூரத்திலும் பக்கத்திலும் எமக்கு முன்னோனாகிய இறைவனது பெருமையை எண்ணினால் "ஒத்ததாகச் சொல்லக் கூடிய பெரிய தெய்வம் பிறிதொன்றில்லை." முயற்சியும் முயற்சியின் பயனும் மழையும் மழை பொழிகின்ற மேகமும் அந்த இறைவனே ஆகும். அவன் பெயர் நந்தி.

0012: ஒப்பற்ற அன்போடு அழியாதிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய "சிவனே அழியாதிருக்கும் அருள் புரிபவன்" என்பதை விண்ணவரும் மண்ணவரும் அறியாதிருக்கின்றனரே! என்ன அறியாமை!.

0013: கண்ணில் கலந்தும் எங்கும் கடந்தும் விளங்குகின்ற சிவனை பிரமன், விஷ்ணு முதலான தேவர்களும் எண்ணத்தில் அகப்படுத்தி நினைப்பதில்லை. மண்ணுலகோரோ சிவனைக் கடந்து சென்று அறிய முடியவில்லை.

0014: சிவன் சுவாதிட்டான மலரிலுள்ள பிரமனையும், மணிப்பூரகத்திலுள்ள விஷ்ணுவையும், அநாகதச் சக்கரத்திலுள்ள ருத்திரனையும் கடந்து சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் நின்று எங்கும் கண்காணித்துக் கொண்டுள்ளான்.

0015: சிவன் உலகினைப் படைப்பவனாயும், உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும் அழிப்பவனாயும், குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும், திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான்.

0016: அமரர்களும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தியுள்ளமையால் அழகு நிறைந்த ஒளியோடு கூடிய நெற்றியையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனாகிய சிவனது குணத்தைப் பாராட்டி நாடமாட்டார்கள்.

0017: தூல உடம்பும் சூக்கும உடம்பும் ஒன்றாகக் கலந்து இருப்பினும் மாயை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில் தான் கானமானது மிகுந்திருக்கும். அக்கானம் அல்லது நாத வழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை.

0025: பிறவாதவனும் அழிவில்லாதவனும் யாவற்றையும் ஒடுக்குபவனும் பேரருளுடையவனும் எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை நல்குபவனும் ஆகிய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் நீங்கள் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேறு அடையலாம்.

0026: ஆன்மாக்களை என்றும் தொடர்ந்து நிற்கும் சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் எங்கும் வியாபித்துள்ளவனும் விசாலமான உலகம் முழுவதும் கடந்து நின்றவனும் சகஸ்ரதள கமலத்தின் மேல் உடனாய் இருந்தவனும் ஆகிய சிவனது திருவடிப்பேறு கிட்டும்.


மேலே உள்ள திருமந்திர விளக்கத்தில் சிவபெருமானைத் ஒப்பாக உலகில் ஒருகடவுளும் இல்லை என்று திருமூலர் நெத்தியடி அடிக்கிறார். இந்துமத மற்ற கடவுள்களான பிரம்மன்,விஷ்ணு,உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை என்கிறார். இதுதான் திரு மூலர் காட்டும் ஓர் இறை சைவ சமயம்.

5 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

அல்லாஹ்வின் அளவற்ற அருளையும். கருணையையும், மாபெரும் ஆற்றலையும் வல்லமையையும் 99 பெயர்கள் மூலம் திருக்குரான் மனிதகுலத்துக்கு உணர்த்துகிறது. அந்த ஒவ்வொரு ஆற்றலுக்கும் ஒரு உருவத்தை மனிதன் கற்பனை செய்து கடைசியில் சிலையை உருவாக்கி அதையே கடவுளாக்கி உண்டியல் வைத்து ஊரை ஏமாற்றி பிழைக்கும் வித்தையை கண்டுபிடித்தான்.

ஒரு குழந்தையிடம் போய் 100 கோடி ரூபாய்க்கான செக்கும் 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மையும் தந்தால், அந்த குழந்தை செக்கை எறிந்துவிட்டு பொம்மையை வைத்துக்கொள்ளும். அதுபோல்தான் உருவமற்ற இறைவனுக்கு உருவம் கொடுக்க மனிதன் முயன்றால், அவனால் யானைத்தலையும் மனித உடலும் சேர்ந்த முரண்பாடான உருவத்துக்கு மேல் சிந்திக்கவே முடியாது. அது கடைசியில் சிவலிங்கத்திலும் பார்வதியின் யோனியிலும்தான் போய் முடியும். அதுதான் அவனுடை அறிவுத்திறனின் லிமிட்.

ஆக திருமூலர் சுற்றி வளைத்து "படைத்து காத்தல் அழித்தல் அனைத்தும் அவனே" என சொல்வதை "லாயிலாஹா இல்லல்லாஹ் - கடவுள் இல்லை, உருவமற்ற அல்லாஹ் ஒருவனைத்தவிர" என தெள்ளத்தெளிவாக அழகாக திருக்குரான் சொல்கிறது.

"சிலையை நீ படைத்தாய். சிலை உன்னை படைக்கவில்லை". சிலையை தூக்கி போட்டு உடை. திருக்குரானை எடு. பள்ளிவாசலுக்கு செல். சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.

முஹம்மத் அலி ஜின்னா said...

பெரியார் இஸ்லாமியர் கல்வி வட்டம் (Periyar Muslim Study Circle):

எனக்கொரு ஆசை. அம்பேத்கர் பெரியார் கல்விவட்டம் பார்ப்பன ஆதிக்கத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது. பெரியார் எனும் கருங்சிங்கத்தின் கர்ஜனை பார்ப்பன அகந்தையை அறுத்துவிட்டது. நசுக்கப்பட்ட சமுதாயத்தின் சமூகநீதிக்கு ஒரு வழி திறந்துவிட்டது. இதே அடிப்படையில், பெரியார் திடலிலே “பெரியார் இஸ்லாமியர் கல்வி வட்டம்” , பெரியார் கிருத்துவர் கல்வி வட்டம்” போன்றவை பிறக்கட்டும். ஏன் தில்லிருந்தால் “பெரியார் ப்ராஹ்மணர் கல்வி வட்டம்” வந்தாலும் மனதார வரவேற்போம். பட்டி தொட்டியெங்கும் இந்த வட்டங்கள் பரவட்டும்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் பெரியார் தளத்திலிருந்து செல்லட்டும். ஹிந்து, முஸ்லிம், கிருத்துவர், தலித், பார்ப்பனர் அனைவருக்கும் ஏற்ற சம பிரதிநிதித்துவம் (proportional representation), சம உரிமை (equal rights), சமநீதி, சமத்துவம், சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஆட்சி அமைப்போம்.

பட்டினி வயிரோடு போராடியது போதும். பஞ்சம், பசி, பிணி, வறுமை ஒழியட்டும். அமைதி தவழட்டும். செல்வம் கொழிக்கட்டும். தமிழகத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடட்டும். யாதும் ஊரே யாவரும் கேளீர். மண்ணின் மைந்தரும் வாழட்டும், வந்தாரையும் வாழவைப்போம். சென்ற இடமெல்லாம் தமிழருக்கு சிறப்பு எனும் நிலையை உருவாக்குவோம்.

முஹம்மத் அலி ஜின்னா said...

இங்கே பேசமுடியாத பல விஷயங்களை நான் வே.மதிமாறன் தளத்தில் பேசுகிறேன். அது ஹிந்துமதத்தை எதிர்க்கும் பெரியாரிஸ்டின் தளமென்பதால் வெளிப்படையாக பல விஷயங்களை என்னால் பேசமுடிகிறது. என்னை இங்கே திட்டமுடியாத ஹிந்து வெறியர் அங்கே வந்து திட்டலாம்.

Dr.Anburaj said...

திருமூலரை குறை சொல்பவன் முட்டாள்.நீசன். கசுமாலம். கட்டம் உண்பவன். தாித்திரம் பிடித்தவன்.மனநோயாளி. பித்தத்.

Ashak S said...

திருமூலரை பின்பற்றாதவன் - முட்டாள்.நீசன். கசுமாலம். கட்டம் உண்பவன். தாித்திரம் பிடித்தவன்.மனநோயாளி. பித்தத்.