Followers

Tuesday, July 07, 2015

வியாபம் முறைகேடு தொடர்பாக அடுத்தடுத்து கொலைகள்!



வியாபம் முறைகேடு தொடர்பாக கடும் விமர்சனங்களுக்குப் பிறகு, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து அவர் கூறும்போது, “சில துரதிர்ஷ்டமான மரணங்களுக்குப் பிறகு மக்கள் மனதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. கேள்விகளுக்கு நியாயமான விடை கிடைக்க வேண்டும். நான் இந்த விவகாரம் குறித்து இரவு முழுதும் சிந்தித்தேன், எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடைகள் தேவை. எனவே தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்றார்.

சிபிஐ விசாரணையில் வியாபம் தொடர்பாக நிகழ்ந்த சில அகால மரணங்களும் அடங்குமா என்ற கேள்விக்கு, “அனைத்து விஷயங்களையும் சிபிஐ விசாரிக்கும்” என்றார்.

மத்தியப் பிரதேசம் தொழில் முறை தேர்வு வாரியம் (எம்பிபிஇபி), மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர் தேர்வு வாரியமாகச் செயல்படுகிறது. மருத்துவத் துறை நியமனங்களுக்கான தேர்வுகளையும் இது நடத்துகிறது. 'வியாபம்' எனவும் அறியப்படும் இந்த வாரியத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டது.

வியாபம் முறைகேட்டில் தொடர்புடைய இளம்பெண் ஒருவர் ரயில்வே பாதை அருகே மர்மமான முறையில் கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்து கிடந்தார். அப்பெண்ணின் பெற்றோரிடம் 3 நாட்களுக்கு முன் பேட்டியெடுத்துக் கொண்டிருக்கும்போதே நிருபர் அக்ஷய் சிங் திடீரென வாயில் நுரைதள்ளி இறந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மறுநாளே மருத்துவக் கல்லூரி டீன் அருண் சர்மா இறந்தது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 'வியாபம்' ஊழல் தொடர்பாக இதுவரை 34 பேர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வியாபம் மர்ம மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்வதாக முதல்வர் சவுகான் தெரிவித்ததை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. இதுவும் உண்மையை மறைக்க செய்யும் முயற்சியே என்றும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை மட்டுமே நியாயம் வழங்கும் என்றும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

இதனிடையே, மத்தியப் பிரதேசத்தின் வியாபம் ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரும் திக்விஜய் சிங் உள்ளிட்டோரின் மனுக்களை ஏற்ற உச்ச நீதிமன்றம், இது தொடர்பான விசாரணை வரும் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
07-07-2015

தற்போது 40 க்கும் மேல் இந்த கொலை பட்டியல் நீண்டு செல்கிறது. இந்திய வரலாற்றிலேயே இது போன்ற மோசமான படு கொலைகள் அரசு தரப்பில் நடந்திருக்குமா என்பது சந்தேகமே? இந்த கொலைகளுக்கு பின்னணியில் ஆர் எஸ் எஸ் ஸின் பங்கும் உள்ளதாக காங்கிரஸின் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருப்பதையும் ஒதுக்கி விட முடியாது. தங்களுக்கு ஒத்து வரவில்லை என்றால் சக அமைச்சர்களையே போட்டு தள்ளி விடுவது இந்துத்வாவாதிகளுக்கு புதிய செய்தி அல்ல. குஜராத்தில் ஹரேண் பாண்டியா கொலையே ஒரு சிறந்த உதாரணம். சிபிசிஐடி முறையாக விசாரித்தால் பல ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு இந்த மோசடியிலும் கொலைகளிலும் தொடர்பு உள்ளது வெட்ட வெளிச்சமாகும். மோடியின் ஆட்சி வந்தால் இந்துக்களுக்குத்தான் அதிக ஆபத்து என்று முன்பு பலர் கூறியது தற்போது நிரூபணமாகி வருகிறது. இன்னும் என்ன என்ன பயங்கர வாத செயல்களை ஆர் எஸ் எஸ் நிகழ்த்தப் போகிறதோ பொறுத்திருந்து பார்போம்.

http://www.coastaldigest.com/index.php/news/77100-vyapam-scam-a-rss-strategy-to-induct-its-cadres-in-jobs-digvijaya-singh

No comments: