
இஸ்லாத்தை விளங்காத ஒரு சில முஸ்லிம்கள் பல பிரிவுகளை இஸ்லாத்தில் உண்டாக்கி விட்டனர். ஷாஃபி, ஹனபி என்ற சாதிகளையும் இஸ்லாத்தில் உருவாக்கி விட்டனர். ஆனால் குர்ஆனிலோ அல்லது நபி மொழிகளிலோ இந்த சாதிப் பிரிவுக்கு எந்த இடமும் இல்லை. இறைவனின் முன்னால் அனைவரும் சமம் என்றே குர்ஆன் கூறுகிறது. அதனை செயலிலும் காட்டுவதை உலகில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் காணலாம்.
இஸ்லாம் வருவதற்கு முன்பு அரபு மொழியே உலகில் உயர்ந்த மொழி என்ற எண்ணம் அந்த அரபுகளிடம் இருந்தது. மற்ற மொழிகள் பேசுபவர்களை ஊமையர்கள் என்று அழைத்தனர் அன்றைய அரபுகள். நபிகள் நாயகம் வந்தவுடன் சாதி வெறி, மொழி வெறி, இன வெறி என்ற அனைத்தையும் தனது காலடியில் போட்டு மிதிப்பதாக பிரகடனப்படுத்தினர்.
அன்று முதல் ஒழிந்தது சாதி வெறி: இன வெறி: மொழி வெறி. அந்த காட்சிகளையே மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த பெருநாள் தொழுகையில் காண்கிறோம்.
1 comment:
ரொப்பதான் அலட்டிக்கிறீங்க.இதெல்லாம் வெளி வேசம் ஐயா. இதில் மயங்குகின்றவன் முட்டாள். முஸ்லீம்கள் அமதிக எண்ணிக்கையில் வாழும் என்போன்றவர்களுக்?கு என்ன நடக்கின்றது என்பது தொியும். பிற மதத்தவா்களுக்கு எதிரான நடவடிக்கை என்றால் -ஆம்புா் போல - ஆவேசம் அதுபோல் சியா சன்னி அகமதி ......... என்ற அடிதடி களுக்கு என்ன பஞ்சம்.
Post a Comment