நீங்கள் திருவள்ளுவரை இந்து என்று சொல்கிறீர்கள். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இசுலாமும் கிருத்துவமும் தமிழ்நாட்டில் நுழையவில்லை. உண்மைதான். ஆனால், இவ்விரு மதத்தவரும் கிருத்துவ மதக்கொள்கைகள் காணப்படுவதாகச் சொல்லலாம். அல்லது ஓரிறைக் கொள்கையைக் காட்டலாம்.
அதே சமயம், நீங்கள் வள்ளுவரை இந்துவாக்க முனைவது அவரைச் சமணர்கள் தங்கள் ஆச்சாரியராகக் கொண்டு வழிபடுவது பொய் என்று சொல்லத்தான். வள்ளுவர் கொந்தகொந்த சமணாச்சாரியாராக வழிபடப்படுகிறார் தமிழ்நாட்டில் என்பது உண்மை என்று நன்கு உங்களுக்குத் தெரியும். சமணர்கள் கூற்றுப்படி அவர் யாத்த நூல்களுள் ஒன்றேயொன்றுதான் தமிழ்நூல் – அது திருக்குறள். மற்றவை வடமொழி சமண சமய நூல்கள் என்றும் அந்நூல்கள் பெயரகளையும் குறிப்பிடுகிறார்கள் சமணர்கள்.
சமண வாதத்தை எதிர்க்க வைக்கப்பட்டதே வள்ளுவர் ஓர் இந்து என்ற இந்துத்வா பிரச்சாரமாகும். இசுலாமியருக்கும் கிருத்துவருக்கும் எதிராக அன்று. உங்கள் பிரச்சாரம் இங்கே அதுதான். ஆதி பகவன் என்பதற்கு ஆதி பராசக்தி + சிவன் என்று விளக்கம் நீங்கள் கொடுக்கலாம. உஙகளாசை. சமணர்கள் ஏற்கவில்லை. மற்றவரகள் அச்சொல் அனைத்தையும் கடந்த உள் (கடவுள்) எனபதையே குறிக்கிறதென்கிறார்கள். ஆதி என்பது தொடக்கம். தொடக்கத்திலிருந்து வந்தது என்றுதான் பொருள் படும். ஆதி என்றால் ஆதிபராசக்தி என்று சொல்ல ஆதிக்குப்பின் ஒரு சொல் பராசக்தி என்று குறிக்க வேண்டும். ஆதி என்பது அட்ஜக்டிவ் – பண்புப்பெயர். நவுன் கிடையாது. பகவன் என்பது நவுன் – பெயர்ச்சொல். அதாவது காமன் நவுன். பொதுப் பெயர். எக்கடவுளையுமே குறிக்கும். ஈஸ்வர், இறைவன், கடவுள் என்பன போல.
நன்னெறி பற்றியெல்லாம் பேசாதீர்கள். அஃதெல்லோருக்குமே தெரியும். நன்னெறி என்று போனால் மருத்துவர் ஜாண்சன் சொன்னதைத்தான் ஏற்க வேண்டும். இந்த சச்சரவெல்லாம் ஏன்? கடவுள் வாழ்த்து கடவுளைப்பற்றி; எக்கடவுள் என்று அவர் சொல்லவில்லை என்று மருத்துவர் முடித்துவிட, நீங்களோ, அது சிவ பார்வதியைக்குறிக்குமென்று வள்ளுவரை இந்து என்று மீண்டும் நிலைநாட்டுகிறீர்கள். நன்னெறி என்று விட்டீர்களா? வீண்வாதம் உங்களிடமிருந்தும் வருகிறது. ஓரிறைக்கொள்கையை வள்ளுவர் கொள்கை என்று முடித்துவிட தயக்கமேன்?
ஓரிறைக்கொள்கை இந்து சமயத்துக்குப் புதியன்று. ஓகே. அதே சமயம், அக்கொள்கையுடனே ஷாலி சொன்ன முப்பது முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் ஒன்றையே பலவற்றையோ தொழலாமென்றும் இந்துமதம் சொல்கிறது. அப்படியே மக்களும் செய்கிறார்கள். நீங்கள் அண்ணாமலையாரையும் முருகனையும் வெங்கடாஜலபதியையும் தொழுகிறீர்கள். வைணவர்கள் உங்கள் சிவ பாரவதி, முருகன் எனறு தொழவதில்லை. ஆக, என்ன புலனாகிறது இதில்? இந்துமதத்தில் ஓரிறைக்கொள்கை உண்டு; அதே சமயம், இன்னொரு கொள்கையாக பலகடவுளர் வணக்கமும் இருக்கிறது. இல்லையா?
இசுலாமில் அப்படி இல்லவே இல்லை.
//இறைவன் ஒருவனே; அவன் நாமம் அல்லா. அவனைத்தவிர இறையேதும் இல்லை//. God is Only One. His name is Allah. There is no God but Allah//
இதைத்தான் அவர்கள் நித்தம்நித்தம் ஓதுகிறார்கள். தொழுகைக்கு அழைப்பாகவும் விடுக்கிறார்கள். அதாவது அவர்கள் கொள்கை ஒன்றே.
எனவே ஓரிறைக்கொள்கையென்றால் இசுலாமே. ஒருவர் ஓரிறைக்கொள்கையைப்பற்றி சிலாகித்து எழுதுகிறரென்றால், இன்று அவரைக் கண்டிப்பாக இசுலாமியர் எனலாம். வள்ளுவர் காலத்தில் அக்கொள்கையைக் கொண்டு வாழ்பவர் எனலாம். வள்ளுவர் அப்படி வருவார். இல்லையா?
-BS
3 comments:
திருவள்ளுவா் ஒரு இந்தியன். அரேபியன் அல்ல நிச்சயம் அரேபியன் அல்ல. காலத்தால் இயேசுவிற்கு சமகாலத்தவா்.அல்லது மூத்தவா். நிாநிகல்ப வழிபாடு இந்து மதத்தில் 10000 ஆண்டுகளுக்கும் முன்பே-வரலாறு தொட்டே இருந்து வருகின்றது. காட்டில் தியான வாழ்க்கையைதான் ரிஷிகள் முனிவா்கள் பின்பற்றி வாழ்ந்தாா்கள்.ஓா்நாமம் ஓா்உருவம் இல்லாருக்கு ஆயிரம் திருநாமம் தெள்ளேநாம் கொட்டாமே ! என்று திருவாசகம் இறைவனை ?ஏத்துகின்றது. புகோள அமைப்பு மற்றும் சமூக வாழ்வின் அடிப்படையில் பலவழிகள் பல கலாச்சாரம் இருக்கத்தான் வேண்டும்.அரேபிய வழி மட்டும் உண்மை என்பவன் மடையன். பொங்கு பல நதிகள் எல்லாம் புகுந்து நினறந்து ஓங்கும் கங்கு கரை காணாத கடலே என்று இறைவனை ஏத்துகின்றாா்.
திருவள்ளுவா் இந்து இந்துதான். சமண மதம் இந்து குடும்பதது உறுப்பினா்தாம்.
பாப்பானின் அத்திம்பேர் அம்பேத்கர்:
தேசப்பிதா என காந்தியை அறிவித்து மக்களை முட்டாளாக்கி பார்ப்பனரும் பனியாவும் நாட்டை சுருட்டியது போல் தலித் பிதா எனும் ஒரு அடிமை ராஜா அவர்களுக்கு தேவைப்பட்டார். “நமது பிரச்னைகள் அனைத்தையும் இனி அம்பேத்கர் பார்த்துக்கொள்வார், அண்ணல் காட்டிய வழியில் நாம் செல்வோம்” எனும் மனநிலையை தலித்துக்களிடம் உருவாக்கி ஹிந்து வர்ணதர்ம பாதாளசாக்கடையில் அவர்களை நிரந்தரமாக அடைத்துவைக்கக அம்பேத்கர் வசதியாக கிடைத்தார்.
இஸ்லாத்தையும் கிருத்துவத்தையும் தழுவினால் ஹிந்துமதம் அழிந்துவிடும். ஆகையால் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனும் கணக்கில் பௌத்த தலித்தாக மாறி, ப்ராமின் டாக்டர் சவீதாவை மணந்து பாப்பானின் அத்திம்பேராக அவதாரமெடுத்தார் ஸ்றீமான் அம்பேத்கர். ஆகையால்தான் தலித்துக்களைவிட அவாளுக்கு அம்பேத்கர் மீது உரிமை அதிகம். வீட்டு மாப்பிள்ளைனா சும்மாவா?
திருவள்ளுவர் ஒரு வேத ப்ராஹ்மணர். அவர் உண்மையான வேதம் சொல்லும் உருவமற்ற பகவானை வணங்கினார். சமஸ்கிருத வேத மந்திரங்களை ஓதினார். ஆகையால்தான் "ஆதி பகவன் முதற்றே உலகு" என திருக்குறளை தொடங்கினார்.
பகவான் என்பது தூய சமஸ்கிருத வார்த்தை. தமிழ் வார்த்தையல்ல.
Post a Comment