Followers

Monday, July 13, 2015

வழுத்தூரில் ஏகத்துவத்தின் எழுச்சி!

நான் ப்ளஸ் டூ முடித்தது வழுத்தூரில்தான். இந்த ஊர் தர்ஹா வணக்கத்துக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுக்கும் ஊர். கொடி சீலை என்று ஒரு விழாவும் எடுப்பார்கள். இந்த விழாவில் கலந்து கொள்ள வெளி நாடுகளில் இருந்து எல்லாம் ஊர் காரர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு கலந்து கொள்வார்கள். வெகு விமரிசையாக இந்து கூத்துக்கள் அரங்கேறும்.

இந்த நிலையில்தான் தவ்ஹீத் பிரசாரம் வழுத்தூரையும் எட்டியது. விடுவார்களா கபுர் வணங்கிகள்? பல தொல்லைகளை தவ்ஹீத்வாதிகளுக்கு கொடுத்துப் பார்த்தார்கள். வழக்கம் பொல் கபுர் வணங்கிகளுக்கு தோல்வியை இறைவன் தந்தான். இளைஞர்கள் மத்தியில் ஏகத்துவ சிந்தனை எதிர்ப்பினால் மிகுதியானது. இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்று தவ்ஹீத் பள்ளியை வழுத்தூர் மக்கள் கடுமையான சிரமத்திற்கு மத்தியில் திறந்துள்ளார்கள்.

சென்ற மாதம் நடந்த 'மஸ்ஜித் தவ்ஹீத்' திறப்பு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். 'கியாமுல் லைல்' எனப்படும் இரவுத் தொழுகைக்கு வந்துள்ள இளைஞர் பட்டாளத்தைப் பாருங்கள். இந்த ஏகத்துவ எழுச்சி இன்னும் சில ஆண்டுகளில் முழு வழுத்தூரையும் ஆட்கொள்ளும் இன்ஷா அல்லாஹ்.

சினிமா கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றம் அமைத்துக் கொண்டும், டாஸ்மாக் கடையே கதியாகவும் கிடந்த இளைஞர் சமூகத்தை இன்று குர்ஆனை கையில் எடுக்க வைத்துள்ளது இந்த ஏகத்தவ இயக்கம். இதற்கு காரணமான உலமாக்கள், இளைஞர்கள், வசதி படைத்தவர்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் ஈருலகிலும் கண்ணியத்தை தந்தருள்வானாக!


(இரவுத் தொழுகை முடிந்தவுடன் உணவு பரிமாறப்படுகிறது. மற்றொரு படத்தில் நோன்பு திறக்க மஸ்ஜித் தவ்ஹீதில் காத்திருக்கும் ஏகத்துவவாதிகள்)

எல்லா புகழும் இறைவனுக்கே!

7 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

சவூதியில் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் இருக்கின்றனர். இங்கே அனைவரும் புர்கா அணியவேண்டும். “புர்கா அணிவது உங்களுடைய ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிரானதல்லவா?. முஸ்லிம்களை சூர்ய நமஸ்காரம் செய்யச்சொன்னால் நாங்கள் இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கிவிடுவோம். ஆனால் நீங்கள் எந்த பிரச்னையுமின்றி புர்கா அணிகிறீர்களே. இது நியாயமா என சவூதியில் வாழும் எனது ப்ராமின் நன்பரின் மணைவியிடன் கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதில் “புடவை கட்டிக்கொண்டு சென்னையில் போனால் அவனவன் கண்ணாலேயே மேய்கிறான். பஸ்ஸிலே உரசறான். அபயா எனும் மேலங்கி அணிந்து போனால் ஒதுங்கி வழிவிடுகிறான். ஆகையால் நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்துகிறது. இஸ்லாம் எவ்வளவு உயர்ந்த மார்க்கமென்பதை இப்பொழுது நான் புரிந்துகொண்டேன்” என்றார்.

முஹம்மத் அலி ஜின்னா said...

பெரியார் இயக்கத்தில் இருப்பவர் அனைவரும் நாத்திகர். ஹிந்து மதத்தை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால் ஜாதியை விட்டு வெளியேறினரா?. ஒரு உயர்ஜாதி நாத்திகர் வீட்டில் போய் தலித் நாத்திகர் பெண் கேட்கமுடியுமா?. ஆகையால்தான் ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தை தழுவுங்கள் என்றார் தந்தை பெரியார். நாத்திகனாக மாறுங்களென சொல்லவில்லை.

முஹம்மத் அலி ஜின்னா said...

என்ன செய்து கிழித்தார் அம்பேத்கர்?:

"நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்" என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால் பௌத்தம் எனும் மதத்தை இந்திய சட்டசாசனத்தில் அவரால் நுழைக்கமுடிந்ததா?. "இஸ்லாம், கிருத்துவம், யூதம், பார்சி தவிர மற்ற அனைத்து மதங்களும், சீக்கியம் பௌத்தம் சமணம் உட்பட ஹிந்துமதத்தின் பிரிவுகளே. ஆகையால் இவர்கள் அனைவரும் ஹிந்துக்களே" என இந்திய சட்டசாசனம் அறிவிக்கிறது. இந்த சட்டம் 1955ல் இயற்றப்பட்டது. அப்பொழுது சட்டசாசனக்குழுவின் தலைவராக அம்பேத்கர் இருந்தார். புத்தமதத்தை தழுவியிருந்தார். “புத்தர் ஹிந்துமத வர்ணதர்மத்தை எதிர்த்து வெளியேறினார். ஆகையால் பௌத்தம் ஹிந்துமதமல்ல, நான் ஹிந்துவல்ல. பௌத்தம் தனி மதம்” என மூச்சுபேச்சு கூட விடவில்லை.

ஜாதியை விட்டு அம்பேத்கர் வெளியேறினாரா?. பௌத்தராகியும் அதே மஹார் ஜாதி முத்திரையுடன்தானே இறந்தார்?. பௌத்தத்திலும் அதே மேல்ஜாதி கீழ்ச்சாதிதானே இருக்கிறது?. அவர் தழுவிய பௌத்தத்தையே ஒரு தனி மதமாக அறிவிக்கமுடியாத போது, என்ன சட்டசாசனம் வடிவமைத்து கிழித்தார்?. வெள்ளைக்காரனும் பாப்பானும் சொல்லிக்கொடுத்ததை சிறிது முலாம் பூசி ஒட்டுபோட்டு தலித்துக்களை ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு எனும் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு போய் சேர்ந்துவிட்டார்.

பௌத்தத்தை தழுவிய எந்த தலித்திடமாவது பௌத்த மதத்தை சார்ந்தவரெனும் ஜாதி சான்றிதழ் உள்ளதா?. அனைவரிடமும் அதே ஹிந்து பள்ளன் பறையன் சர்டிபிக்கேட்தானே உள்ளது. இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு கிடைக்காதே. கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசையென்றால் நடக்குமா?. ஆக பௌத்தத்தை தழுவியதால் அம்பேத்கருக்கும் தலித்துக்களுக்கும் என்ன கிடைத்தது?. புத்தன் எனும் ஒரு புதிய சாமி எக்ஸ்ட்ராவாக கிடைத்தது. மற்றபடி புத்த கயாவிலும் "நீ தீண்டத்தகாதவன், உள்ளே நுழையாதே வெளியே நில்" என சொல்லப்பட்டது.

கடைசியில் என்னதான் செய்து கிழித்தார் அம்பேத்கர்?. சவீதா எனும் ப்ராமின் டாக்டரை மணந்து, கமுக்கமாக பாப்பானாகி பத்மபூஷன் அவார்டு வாங்கி செத்துப்போனார். அந்த ப்ராமின் டாக்டர்தான் இவருக்கு விஷம் வைத்து கொன்றதாக அறிவிஜீவி பார்ப்பனர் வட்டாரத்தில் ஒரு கிசுகிசுப்பும் உண்டு.

முஹம்மத் அலி ஜின்னா said...

நவீன பாப்பானும் அம்பேத்கரும்:

பதவி, பணம், அந்தஸ்து பெற்ற ஒவ்வொரு தலித்தும் "ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் அடிமையாக வாழ்ந்தேன். இப்பொழுதுதான் எனக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இது நான் முற்பிறவியில் செய்த கர்மபலன். ஆகையால், இனி இவர்கள் எனக்கு அடிமையாக சேவகம் செய்யட்டும். இப்பொழுது அனுபவிக்காமல் இனி எப்பொழுது நான் அனுபவிப்பது" என சபதமெடுக்கிறார். உடனே அவருடைய மனக்கண்ணில் ஆதிக்கஜாதி ஹீரோ பத்மநாபன் ஐயர் தோன்றுகிறார். இவரும் பத்மநாப ஐயராக அவதாரமெடுத்து சபாரி சூட் போட்டுக்கொண்டு மிடுக்காக தனது பங்களாவுக்கு வெளியே வந்து நவீன பாப்பானாக தலை நிமிர்ந்து நிற்கிறார்.

நவீன பாப்பான்: ஹ்ம்...யாரங்கே...
தலித் ப்யூன்: அய்யா... இருகேன்ய்யா.....

நவீன பாப்பான்: ப்ளடி பூல்.... வேர் ஆர் யூ?
தலித் ப்யூன்: அய்யா... அம்மாவோட ரோஜா செடிக்கு ஒரம் போட்டுட்ருந்தேய்யா..

நவீன பாப்பான்: ஓ.கே.... இன்னிக்கு சாயங்காலம் ரம்யா அமெரிக்காலேர்ந்து வருது... எல்லாம் ரெடி பண்ணிட்டியா?

தலித் ப்யூன்: ப்ண்ணிட்டேய்யா... காலைலேயே முனியாண்டிய ஏர்போர்ட்டுக்கு அனுப்பிச்சுட்டேன்யா. பாப்பா வர்ரவரைக்கும் கார்ல அங்கேயே இருடானு சொல்லிப்பூட்டேன்...பாய் கடைலேருந்து பாப்பாவுக்கு புடிச்ச மாதிரி கறி பழமெல்லாம் வாங்கியாந்து ப்ரிஜ்ஜுலே வச்சுட்டேன்யா... சாயங்காலம் ப்ரியாணி பண்ண இப்ராகிம் பாய் வந்துடுவாருயா...

நவீன பாப்பான்: வெரி குட்...பாப்பாவுக்கு கோவம் வராம நடந்துக்க. காலைலே யோகா செய்றதுக்கு முன்னாடி ப்ரஷ் இளனி சாப்பிடும்... ஞாபகமிருக்குல்ல...

தலித் ப்யூன்: மறப்பேனாய்யா... மருதாச்சலம் புள்ள தோட்டத்லேருந்து எல்லாம் ரெடி பண்ணிடேய்யா... தாத்தாச்சாரிட்டே சொல்லி மல்கோவா மாம்பழமெல்லாம் ரெடி பண்ணிட்டேய்யா...

நவீன பாப்பான்: வெரிகுட்..வெரிகுட்..போய் வேலைய கவனி...
**********

ப்யூன் பாலிஷ் போட்டு அவருடைய காலடியில் வைத்த ஷூவை போட்டுக்கொண்டு, கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளின் மொத்த உருவமாக கலெக்டர் ஆண்டியப்பன் ஏ.சி.காரில் ஆபிஸுக்கு போகிறார். கலெக்டர் ஆபிஸ் முன்னாடி ஜாதிக்கலவரத்தால் வீடெறிக்கப்பட்ட தலித்துக்கள் அம்பேத்கர் கொடியுடன் நீதி கேட்டு நிற்பதைப்பார்த்து "காலங்காத்தாலே வந்துட்டானுக.. இவன்களுக்கு வேற வேலையே கிடையாது" என மனதுக்குள் முனுமுனுக்கிறார்.
***********

பதவி பணம் அந்தஸ்து பெற்ற எந்த தலித்தும் தன்னுடைய தலித் அடையாளத்தை வெளிக்காட்டுவதில்லை. தலித்துக்கள் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. போலிஸ் ஸ்டேஷனில் தலித்துக்களின் வாயில் மலம் திணித்த ஆதிக்க ஜாதி மீது எந்த தலித் அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று தலித் அதிகாரிகளை வைத்தே தலித்துக்களை ஆதிக்க ஜாதி உதைக்கிறது.

நவீன பார்ப்பனராகிவிட்ட தலித்துக்களுக்கு ஆதிக்க மனப்பான்மை வந்துவிட்டது. சொல்லப்போனால், இவர்கள் ருசி கண்ட பூனைகளாக மாறிவருகின்றனர். அய்யகோ !!. ஏமாந்து போய்விட்டார் அம்பேத்கர்.

முஹம்மத் அலி ஜின்னா said...

வெறும் ஆன்மீகம் போதிக்க இஸ்லாம் வரவில்லை. அப்படியிருந்தால், “ஹீரா குகையிலேயே அமர்ந்து என்ன தியானம் செய்யுங்களென” அல்லாஹ் அண்ணல் நபியை(ஸல்) விட்டிருப்பான். திருக்குரானை கொடுத்து “நீதியை நிலை நாட்டுங்கள். மனித இனத்துக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நல்லபடியாக வாழும் எனது சத்திய வேதத்தை எடுத்துரைத்து வாழ்ந்து காட்டுங்கள்” என கட்டளையிட்டிருக்க மாட்டான்.

இஸ்லாம் வந்தது வறுமையை ஒழிக்க. “பட்டினியால் வாடுபவனிடம் நோன்பின் மகிமையை பற்றி பேசாதே. பஞ்ச பரதேசியிடம் வெறும் வாயால் ஈத் முபாரக் சொல்லாதே. அதற்கு முன்னால் ஈகை செய், ஜக்காத் கொடு, அவனுக்கு உணவளி” என அல்லாஹ் அறிவிக்கிறான். இன்று மெத்த படித்த நம்மை போன்ற இன்டெலெக்சுவல்ஸ் , நமது நாட்டில் பிழைக்க முடியாமல் அரபு நாடுகளுக்கும் கிருத்துவ நாடுகளுக்கும் ஓடுகிறோம். எவ்வளவு பேரால் ஓட முடியும்?. 130 கோடி மக்களால் அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடமுடியுமா?.

வெறும் தேசபக்தி தேசபக்தி என்று அலறிவிட்டு நாட்டை ஓடினால் அந்த நாடு முன்னேறுமா?. பீகாரில் நடந்த ப்யூன் வேலை தேர்வுக்கு 1600 இஞ்சினியர்களும் 4000 முதுகலை பட்டதாரிகளும் தேர்வெழுதினரென நியூஸ் படித்தேன். இப்படி போனால் எவ்வளவு நாளைக்கு இந்த நாடு தாங்கும்?. வருடா வருடம் லட்சக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகளை உருவாக்குகிறோம். எவ்வளவு நாளைக்கு இவர்கள் பொறுப்பர்?. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கலவரம் வெடித்தால், நம்மால் ரோட்டில் நடமாட முடியுமா?.

இந்தியா இல்லாவிட்டால், அரபியும் அமெரிக்காகாரனும் நம்மை மதிப்பானா?. ஹிந்து முஸ்லிம் என விவாதம் செய்தாலும், அரபியா எனக்கு உறவினன்?. நீங்களும் நானும்தானே உறவினன்?. எனது மூதாதையர் ஹிந்து வழிபாடுகளை விட்டு இஸ்லாத்தை தழுவினர். உங்கள் மூதாதையர் தழுவவில்லை. அவ்வளவுதான் வித்தியாசம். அரபியிடம் அடிமையாக வேலை செய்வதைவிட, இஸ்லாத்தை தழுவி 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் இந்தியா ஏன் தலைவனாக மாறக்கூடாது?. இவ்வளவு பெரிய சக்தியிடம் அமெரிக்காவோ சைனாவோ வாலாட்டுவானா?. ஆம். உலகத்துக்கே மிகப்பெரிய தலைவனாக இந்தியாவை உருவாக்கும் சக்தியை இஸ்லாம் தருகிறது. அதை ஏன் நாம் ஒட்டுமொத்தமாக ஏற்கக்கூடாது?.

பட்டினி வயிறால் எவ்வளவு நாளைக்குத்தான் தேசபக்தி பஜனை பாடமுடியும்?. இறைவன் உருவமற்றவன் எனும் கருத்தில் நாம் இருவரும் உடன்படுகிறோம். அப்புறமென்ன பிரச்னை?. பசி பட்டினியை தீர்க்காத ஆன்மீகத்தால் என்ன பயன்?. இந்தியாவை காப்பாற்ற இஸ்லாமே தீர்வு என்பது என் வாதம். இதைவிட அருமையான வழியிருந்தால் நீங்கள் சொல்லுங்கள். நான் ஏற்க தயார்.

Anonymous said...

TNTJ Wara munnadi waalndha manidharakalin gadhi enna? awarkal suvarkam selvarkala alladhu naragam selvargala? konjam thelivu paduthavum

முஹம்மத் அலி ஜின்னா said...

// TNTJ Wara munnadi waalndha manidharakalin gadhi enna? //
-------------

TNTJவை விடுங்கள். அண்ணல் நபியின்(ஸல்) தாத்தா அப்துல் முத்தலிப் 360 சிலைகளை வைத்து பூஜை செய்து கொண்டும் அம்பு வைத்து குறி பார்த்துக்கொண்டும் ஒரு பார்ப்பன பூசாரியாக வாழ்ந்தார். அவருக்கும் நரகம்தான். பெருமானாரின் தாத்தாவென்று ஸ்பெஷல் சலுகை தள்ளுபடியெல்லாம் கிடையாது. அல்லாஹ்வின் முன் அனைவரும் சமம்.