'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, July 29, 2015
யாகூப் மேமனை விடுவிப்பதே கலாமுக்கு செலுத்தும் அஞ்சலி!
யாகூப் மேமன் கருணை மனுவை மறு பரிசீலனை செய்து அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்வதே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் எனக் கோரி மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவின் முழு விவரம்:
வணக்கம்!
இந்த தேசமே, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் இத்தருணத்தில், மரண தண்டனையை வெகுவாக எதிர்த்த அவருக்கு செலுத்தும் மரியாதையாக, யாகூப் மேமன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
அப்துல் கலாம், ஒரு மாதத்துக்கு முன்னதாக பேசியபோதுகூட, மரண தண்டனையை தான் எதிர்ப்பதாக கூறியிருந்தார். சட்ட ஆணையத்துக்கு அவர் தனது கருத்தை தெளிவாக தெரிவித்திருந்தார். எனவே, யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதே கலாமுக்கு செலுத்தும் ஆகச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.
1997-ல், அப்போதைய குடியரசுத் தலைவர் ஷங்கர் தயாள் சர்மா, மஹாஸ்வேதா தேவி போன்ற சான்றோர்கள் பலர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஆந்திராவைச் சேர்ந்த இருவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தார். அதுவும், அவர்களுக்கு தூக்கு விதிக்கப்பட இருந்த முந்தைய நாளில் கருணை செய்தார். இதன் மூலம், அரசியல் சாசன சட்டப் பிரிவு 73-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவருக்கான அதிகாரத்தை அவர் முழுமையாக பயன்படுத்தி முன் உதாரணம் செய்திருந்தார்.
யாகூப் மேமன் இந்திய நீதித்துறைக்கு தலைவணங்கி சரணடைந்தார். இந்திய உளவுத்துறையின் மரியாதைக்குரிய அதிகாரி ஒருவர் யாகூப் மேமன் விசாரணைக்கு எப்படியெல்லாம் ஒத்துழைத்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பலரும், யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது நியாயமாகாது என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
இத்தகைய எதிர்ப்பு அதுவும் இப்பேர்பட்ட நபர்களிடம் இருந்தே வருவது மிகவும் அரிதானது. எனவே யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். யாகூப் மேமனை இந்தியா அழைத்து வந்தபோது அவரிடம் ரகசியமாக என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டதோ அதை மீறுவது ஆகாது.
யாகூப் மேமனை தூக்கிலிட்டால், இந்தியா அமைப்புகளின் நேர்மை நெறி மீது மீளாச் சந்தேகம் ஏற்படும் சூழல் உருவாகும்.
மேதகு குடியரசுத் தலைவரே, ஏற்கெனவே தங்களிடம் 300-க்கும் மேற்பட்ட, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என பல்துறை சார்ந்த அறிஞர்கள் யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் "இந்திய குடியரசின் தலைவர், அரசியல் சாசனம் அவருக்கும் அளிக்கும் தனியுரிமையால் வழிநடத்தப்படுகிறார். அதே வேளையில் மனசாட்சி கூறும் நன்னெறிகள் அதில் தலையிடுவது என்பதும் அவருக்கு சாத்தியமே" குறிப்பிட்டதை நான் இப்போது நினைவு கூர்கிறேன்.
15 நாட்களுக்கு முன்னர்தான் சட்ட ஆணையம், தூக்கு தண்டனை தேவையா என்பது குறித்து ஒரு நாள் முழுவதும் ஆலோசனை மேற்கொண்டது. அந்த கூட்டத்தில் என்ன மாதிரியான முடிவு எட்டப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் யாகூப் மேமன் போன்ற கருணைக்காக காத்திருக்கும் பலரது கோரிக்கைக்கும் பின்னால் இருக்கும் நியாயம், சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியானால் புரியவரும்.
இக்கடிதத்தை அவசரம் கருதி, பொதுநலன் கருதி இப்போது நான் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
எனது கோரிக்கை மனுவை நீங்கள் பரிசீலனை செய்வீர்கள் என நான் ஆழமாக நம்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
கோபாலகிருஷ்ண காந்தி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சிம்லாவில் அப்துல் கலாமின் கடைசி 45 நிமிடங்கள்:
சிம்லாவில் அப்துல் கலாம் காலையில் எழுந்து யோகா செய்துவிட்டு, தனது செல் போனில் சுப்ரபாதம் கேட்டபடியே காலை வாக்கிங் முடித்து வருங்கால இந்தியாவைப் பற்றி கனவு கண்டபடி ஜனாதிபதி ரெஸ்ட் ஹவுஸுக்கு துள்ளி துள்ளி வருகிறார். அங்கே சில பெரிய மனிதர்கள் அவருக்காக காத்திருக்கின்றனர். காலங்காத்தாலே சொல்லாமல் கொள்ளாமல் இவர்கள் ஏன் வந்தனர் என வியந்தபடி அவர்களை நோக்குகிறார்.
—————
முக்கிய புள்ளி: நமஸ்தே கலாம்ஜி. எப்படியிருக்கீங்க?
கலாம்: நமஸ்தே .. என்ன விஷயம்?. திடீர்னு?
முக்கிய புள்ளி: ஒன்னுமில்ல .. ஒரு நேஷனல் எமர்ஜென்ஸி.. நமது தேசம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்த சமயத்தில் உங்களுடைய சேவை நாட்டுக்கு தேவை ..
கலாம்: அப்படியா !!. என்ன செய்யனும்னு சொல்லுங்க? .. போர் விமானம் ஓட்டி பாக்கிஸ்தானுடன் சண்டை போடவேண்டுமா?. மீண்டும் அனுகுண்டு வெடித்து அமெரிக்காவுக்கு ஆப்படிக்கவேண்டுமா? எனது தாய்நாட்டுகாக எனது உயிரையே தியாகம் செய்ய நான் எப்பொழுதும் தயார். என்ன வேணும் சொல்லுங்க?. குயிக்..குயிக்..
முக்கிய புள்ளி: அடடா.. நாங்க எப்படி கேக்கறதுனு சங்கடப்பட்டத நாசுக்கா புரிஞ்சுக்கிட்டு நீங்களே அத சொல்லிட்டீங்க… கலாம் அய்யர்னா கலாம் அய்யர்தான்
கலாம்: (சிறிது குழம்பிப்போய்) என்ன சொல்றீங்க?… நானே என் வாயால சொல்லிட்டேனா?.
முக்கிய புள்ளி: ஆமாம் அய்யர்வாள் … கடைசியா நாட்டுக்காக ஒரு விஷயத்த தர்ரேனு சொன்னீங்க … அந்த பொன்னான வார்த்தைகளை மீண்டும் சொல்லமுடியுமா?
கலாம்: (சிறிது திகிலுடன்) நாட்டுக்காக உயிரே தருவேன்னு சொன்னேன்.. என்ன பிரச்னை?
முக்கிய புள்ளி: ஆங்… அதான் எங்களுக்கு வேணும் !!.
கலாம்: என்ன சொல்றீங்க… ஏன் என்னோட செல் போனையெல்லாம் எடுத்து அந்த போலீஸ்காரன்ட கொடுக்கறீங்க?….
முக்கிய புள்ளி: மிஸ்டர் அய்யர்வாள்…. சுத்தி வளைக்காம பாய்ன்டுக்கு வர்ரேன்…. அதாச்சும் பாம்பேல வெடிகுண்டு வச்ச டைகர் மேமனோட தம்பி யாகூப் மேமன 30ம் தேதி துக்குல போடப்போறோம். அண்ணன் செய்த தவறுக்கு தம்பியை தூக்கில் போடுவதா?. “இந்த நாட்டில் இனி முஸ்லிம்களுக்கு எதிர்காலமில்லை. இன்னொரு பாக்கிஸ்தான உருவாக்க வேண்டியதுதானு” உங்க முஸ்லிம்க புலம்பறாங்க … அவனுக கூட காலிஸ்தான்காரன், பெரியாரிஸ்டெல்லாம் சேந்து ஒத்து ஊதறானுக…. இந்த சமயத்துல முஸ்லிம்களுக்கு நாட்டின் சட்டத்தில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் எங்களுக்கு வந்துவிட்டது.
கலாம்: அதுக்கு நான் ஏன் உயிர்த்தியாகம் செய்யவேண்டும்?.
முக்கிய புள்ளி: அடடா .. பேஷ்.. பேஷ்.. நாங்க எட்டடி பாஞ்சா நீங்க பதினாறடி பாயறேள். நீங்க இந்த சமயத்துல உயிர்த்தியாகம் செய்தால் “நல்ல முஸ்லிமுக்காக நாடே கதறி அழுது. ஜிஹாதி முஸ்லிம் மீது நாடே காறித்துப்புது”னு ஒரு பெரிய பில்டப் கொடுக்க வசதியா இருக்கும்.. புரிஞ்சுச்சா?
கலாம்: டேய்… அயோக்கியன்களா… கடைசில எங்க திருக்குரான் சொல்ற காபிர்னு ப்ரூவ் பண்ணிட்டீங்கடா..
முக்கிய புள்ளி: அப்படி வாரும் வழிக்கு… இவ்வளவு நாள் சரஸ்வதி பூஜை செய்து அய்யர் மாதிரி நடிச்சேள்… இப்ப நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்ய சொன்னா குரான் ஞாபகம் வந்துடுச்சா?. கடைசில துளுக்க புத்திய காம்சிட்டியே நய்னா…
கலாம்: சரி.. நான் சாவறதுக்கு முன்னாடி ஒரு கேள்வி கேக்கனும்.. என்னோட உசுரு வேணும்னா கமுக்கமா சாப்பாட்ல மயக்க மருந்து கொடுத்து கதைய முடிச்சிருக்கலாம்.. என்னிடம் இதையெல்லாம் விளக்கவேண்டிய அவசியமென்ன?
முக்கிய புள்ளி: வெரிகுட்… இந்த கேள்விக்குத்தான் நான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்.. நீ விஷயம் தெரியாம செத்துப்போனா, அல்லாஹ்கிட்ட போய் “காபிர்ங்க கடைசியா புத்திய காமிச்சுட்டானுகனு” யார் சொல்றது?. அத நீயே அல்லாஹ்கிட்ட போய் சொல்லு… குட்பை நைனா… சீயூ….. டேய்.. குத்துடா சயனைட் ஊசிய..
கலாம்: ஆஆஆஆஆ….. அல்லாஹ் அல்லாஹ் ….
Post a Comment