Followers

Saturday, July 04, 2015

நடிகர் விக்னேஷ் இஸ்லாத்தை ஏற்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்!





இஸ்லாத்தை ஏற்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நடிகர் விக்னேஷ் என்கின்ற அபூபக்கர் சித்தீக்!

"ரங்கூன்", "போடா ஆண்டவனே", "நம்ம பக்கம்" போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விக்னேஷ் எனும் இளம் நடிகர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இளம் நடிகர் விக்னேஷ் அவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு திருக்குர்ஆன் வழங்கியதாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

வாங்கிச் சென்ற குர்ஆனை கதவைத் தாழிட்டு படித்து வந்து இருக்கிறார். ஒருநாள் கதவை மறந்து தாழிடாமல் படித்த போது அவருடைய தாய் வந்து பார்த்து கத்திக் கதறி வீட்டில் பிரச்சனையாகி விட்டது.

ஒரு கட்டத்தில் ஆம் நான் முஸ்லிமாகி விட்டேன். அதன் படித்தான் வாழப் போகிறேன் எனக் கூற தாயும் தந்தையும் வீட்டை விட்டு வெளியேறு எனச்சொல்ல, என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் போன் செய்தார்.

"நான் தவறான வழியில் செல்லவில்லை என முடிந்தவரை பெற்றோரை சமாதானம் செய்து பாருங்கள். முடியாத பட்சத்தில் வந்து விடுங்கள், இறைவன் இருக்கிறான் இலட்சக்கணக்கான என்னைப்போன்ற உங்கள் உடன் பிறவாத சகோதரர்கள் இருக்கிறோம்" எனக் கூறியதும் "இல்லை அங்கு இருக்க முடியாது நான் வந்து விடுகிறேன்" என இன்று காலை வந்து விட்டார்.

ஏற்கனவே குடும்பத்தை விட்டு வந்து இங்கு தங்கி உள்ள இரு திண்ணைத் தோழர்கள் நம்மோடு உள்ளார்கள் அவர்களோடு தங்கிக் கொள்ளலாம் என பள்ளியில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தோம்.

பொறியியல் படித்துள்ள தனக்கு தன்மானத்துடன் வாழ எனக்கு ஒரு உடனடி வேலை தேவை என்றார். இன்ஷா அல்லாஹ் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளோம்...

கொண்ட கொள்கைகைக்காக குடும்பத்தைத் துறக்கும் முஹாஜிரீன்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்! அல்ஹம்துலில்லாஹ்...

(குறிப்பு : முன்பாகவே அவர் நமது மதரஸாவில் கலிமா சொல்லி விட்டார், அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதை வெளியிடாமல் குர்ஆன் வழங்கியதாக மட்டும் செய்தி வெளியிட்டு இருந்தோம், ஆனால் இறைவனின் நாட்டம் நாம் வழங்கிய குர்ஆன் அதை வெளிப்படுத்தி விட்டது)
தகவல் -செங்கிஸ் கான்

3 comments:

Dr.Anburaj said...

சுவாமி விவேகானந்தா் கூறுகின்றாா் இந்து ஒருவன் மதம் மாறித் தொலைந்தால் இந்துக்களின்

எண்ணிக்கை ஒன்று குறைகின்றது. இந்துக்களின் எதிாிகளின் எண்ணிக்கை ஒன்று கூடுகிறது.

இந்தியனாக இருந்த விகனேஷ் இன்று அரேபியனாக மாறிவிட்டான்.

Anonymous said...

கதவை சாத்திக்கொண்டு ,தன்னந்ததனியாக ,வியர்க்க ,கசிய அப்படி என்னதான் படித்தான் ?
'பாப்பா போட்ட தாழ்ப்பா ?''
கலக்குறே,நீயும்,உன் சிரிப்பு மதமும் இல்லேன்னா ,உலகம் சிரிக்காமலே செத்துப்போயிரும் ,

Anonymous said...

கதவை சாத்திக்கொண்டு ,தன்னந்ததனியாக ,வியர்க்க ,கசிய அப்படி என்னதான் படித்தான் ?
'பாப்பா போட்ட தாழ்ப்பா ?''
கலக்குறே,நீயும்,உன் சிரிப்பு மதமும் இல்லேன்னா ,உலகம் சிரிக்காமலே செத்துப்போயிரும் ,