
எங்கள் பக்கத்து மனையில் இசுலாமியக் குடும்பம் வீடு கட்டியது சிவன் தந்த வரம்.
சர்க்கரைப் பொங்கல் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள். நாங்கள் இப்போது நோன்புக் கஞ்சி குடித்துக் கொண்டு இருக்கிறோம்.
என் மகனுக்கு பெயர் வைத்த போது அவன் பெயரை மூன்று முறை அவன் காதில் சொன்ன மூன்றாவது நபர் அவர்தான்.
அவர் மகள் திருமணத்துக்கு என் வீட்டிலிருந்தும் கொஞ்சம் தாய் வீட்டு சீர் போனது.
இப்போது யோகாவில் சூர்ய நமஸ்காரம் செய்யாவிடில் எங்களுக்கு அவர்கள் எதிரிகள் என்றீர்கள். பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என்கிறீர்கள்.
அவர்கள் பாகிஸ்தானுக்கே போய்விடட்டும்.
ஆனால் என் மகன் திருமணத்திற்கு முதல் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு என் எதிரியின் வீட்டுக்குதான் போவோம்.
எங்கள் எதிரிகளும் திருமணத்திற்காக இந்தியா வருவார்கள்....
தங்கள்_மருமகளைக்_காண....
Muthukumar Kaliyaperumal
---------------------------------------------
முகநூலில் தனது தளத்தில் கருத்தைப் பதிந்த இந்த நல்ல உள்ளத்துக்கு மனமார்ந்த நன்றிகள். இவர்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை மோடியும் அமீத்ஷாவும் காணும் இந்து ராஷ்ட்ரா கனவு வெறும் கானல் நீர்தான் என்று சொல்லி வைக்கிறோம்.
No comments:
Post a Comment