
தீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்துமஸ்ஸூக்கோ வெறும் வாழ்த்தோடு நிறுத்திக் கொள்கிறது நமது அரசு. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதைத்தான் பார்த்து வருகிறோம்.
ஆனால் சந்திர சேகர ராவ் தலைமையில் அமைந்த அரசு தெலுங்கானாவில் அரசு சார்பில் இஸ்லாமியருக்கு ரமலான் அன்பளிப்பை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுபான்மை இன மக்களுக்கு தொடர்ந்து பல நல்ல திட்டங்களை சந்திர சேகர ராவ் அமுல்படுத்தி வருகிறார். மற்ற மாநில முதல்வர்களும் தெலுங்கானாவை பின் பற்றி அன்பளிப்புகளை வழங்க முன் வருவார்களா?
ஒரு சிறந்த அரசானது அனைத்து மத மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் அந்த மக்களுக்கும் அரசின் மீது ஒரு பிடிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். இந்த நல்ல முயற்சியை தொடங்கி வைத்திருக்கும் தெலுங்கானா அரசுக்கு இறைவன் மேலும் சிறந்த வழிகாட்டுதல்களை நல்குவானாக!
No comments:
Post a Comment