Followers

Sunday, July 26, 2015

முகமது நபி புரோகிதரா? அவரை வழிபடலாமா?

சல்லு புல்லு!

//If god requires a middleman I don’t want that god..//
திரு.மகாகவி! மிகச்சரியாக சொன்னார்.ஆம்! கடவுளை வணங்க இடைத்தரகர்,புரோகிதர்கள் தேவையில்லை.

ஆ அப்படியா? முகம்மது middleman இல்லையா? ஓ நேரடியா அவரேதான் கடவுளா? அட!//


முகமது நபி புரோகிதரும் அல்ல. அவர் கடவுளாகவும் பார்க்கப்படவில்லை. உங்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லை என்பது தெளிவாகிறது.

குர்ஆனில் இறைவன் பல இடங்களில் முகமது நபியைப் பார்த்து 'எவரையும் உம்மால் நேர் வழியில் செலுத்தி விட முடியாது: மாறாக நான் யாரை தேர்ந்தெடுக்கிறோனோ அவர்களே நேர் வழி பெற முடியும்' என்கிறான்.

மற்றுமோர் இடத்தில் 'உமது வேலை எனது தூதுத்தவத்தை எடுத்துச் சொல்வது மட்டுமே!' என்கிறான் இறைவன். முகமது நபி தமக்குள்ள அதிகாரம் எந்த அளவு என்பதையும் விளங்கியே வைத்திருந்தனர். காலில் விழுவது, நபி என்ற பெயரில் தனக்கு தனி பரிவட்டம் கட்டுவது என்ற அனைத்தையும் தனது காலத்திலேயே நபிகள் நாயகம் அவர்கள் தடுத்துள்ளார்கள்.

தனது சமாதியில் யாரும் பிரார்த்தனை புரிய வேண்டாம்: அதனை விழா நடக்கும் இடமாகவும் அக்கி விட வேண்டாம் என்றும் தனது தோழர்களிடம் சொல்லி விட்டு மறைந்தார்.

எனவே குர்ஆனையும் நபியின் வாழ்க்ககை முறையையும் நடுநிலையோடு படித்துப் பாருங்கள்: சரியான முடிவுக்கு வருவீர்கள்.



No comments: