'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, July 20, 2015
இறந்த உடலை அடக்கம் செய்ய மறுத்த பள்ளி நிர்வாகம்!
பண்டாரவாடை TNTJ கிளை துணை செயலாளர் சாகுல் ஹமீது அவர்களின் மனைவி நர்கீஸ் பானு அவர்கள் 19/07/15 காலை 10 மணியளவில் காலமாகிவிட்டார்கள். பல காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்கள். இறைவனின் அழைப்பு வரவே அவனிடத்திலேயே சேர்ந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
வழக்கம் போல் இறந்த உடலை அடக்கம் செய்ய பண்டாரவாடை பெரிய பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. இதே பண்டாரவாடை மர்கஸில் சில ஆண்டுகளுக்கு முன்பு 'முதியோர் இல்லம்' நடத்தி வந்தோம். அதில் தங்கியிருந்த மூதாட்டி வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். அதற்கும் இந்த பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. வெளியூர்காரர்களுக்கு அனுமதி தர மாட்டார்களாம். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட அந்த மூதாட்டியை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள சுன்னத் ஜமாத்பள்ளிக்கு சென்று அடக்கி விட்டு வந்தோம். அந்த ஊர் பள்ளி நிர்வாகி 'அடக்க மறுத்தார்களா? நான் அந்த பாவத்தை சுமக்க மாட்டேன். உடன் அடக்கம் செய்யுங்கள்' என்று அனுமதி கொடுத்தார். தமிழகத்தில் எந்த கிராமங்களிலும் இது போன்று இறந்த உடலை அடக்கம் செய்ய தவ்ஹீத் ஜமாத்தை காரணம் காட்டி மறுக்கும் ஊர்கள் கிடையாது. ஆனால் விசேஷமாக ராஜகிரி, பண்டாரவாடை பள்ளி நிர்வாகிகள் அனுமதி மறுப்பதையே வழக்கமாக்கி கொண்டுள்ளார்கள். இறைவன் இவர்களுக்கு நேர் வழி காட்டுவானாக!
இதற்குள் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் வெளியூர்களில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினர். விஷயத்தை கேள்விப்பட்டவுடன் வெளியூர் சகோதரர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குழும ஆரம்பித்தனர். காவல் துறை அதிகாரிகள், சப் கலெக்டர் போன்றோர் அடக்க இடம் கொடுங்கள் என்று எவ்வளவோ அமைதியாக கேட்டுப் பார்த்தனர். எதற்கும் நிர்வாகம் மசியவில்லை. சுன்னத் ஜமாத் முறைப்படித்தான் அடக்கம் செய்வோம். எங்கள் இமாம்தான் தொழ வைப்பார். சுன்னத் ஜமாத் முறைப்படி அடக்கம் செய்கிறேன் என்று எழுதி கொடுக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர். சரியான வெயில் வேறு. இறந்த உடல் வைக்கப்பட்டிருக்கும் ஷாகுல் வீட்டருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது தஞ்சையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் என்னிடம் 'பாய்.... 6 நோன்பு வைத்திருக்கிறோம். நோன்பு கஞ்சியும், சாப்பாடும் கொண்டு வந்துள்ளோம். நோன்பு திறக்க ஒரு இடம் தயார் செய்து கொடுக்க முடியுமா?' என்று கேட்டனர்.
நேரமோ மணி 6:30. உடன் நான் “எனது வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. நம் வீட்டிலேயே நோன்பு திறக்கலாம் வாருங்கள்” என்று அழைத்து சென்றேன். விஷயத்தை எனது தாயாரிடம் சொன்னேன். 'நோன்பு வைத்துக் கொண்டு போராட்டத்துக்கு வந்துள்ளார்களா' என்று ஆச்சரியப்பட்டுப் போய் வேக வேகமாக ஜூஸ் கரைக்க ஆரம்பித்தார். கேக் பணியார வகைகள், பேரித்தம் பழம், நோன்பு கஞ்சி, சூடாக்கப்பட்ட பிரியாணி என்று திருப்தியாக நோன்பை நோற்றனர். எனது தாயார் 'பார்த்தால் கல்லூரி மாணவர்கள் போல தெரிகிறது. இந்த வயதில் இவ்வளவு ஈடுபாடா?' என்று ஆச்சரியத்தோடு கேட்டார். மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு அந்த தஞ்சை சகோதரர்களோடு பண்டாரவாடை பெரிய பள்ளியை நோக்கி சென்றோம்.
இரவு 10 மணி வரை நிலைமை சரியாகவில்லை. முடிவில் கலெக்டர் 'இவர்கள் ஒத்து வரவில்லை. உங்கள் பள்ளியின் பின் பக்கம் உடலை அடக்கம் செய்து கொள்ளுங்கள். அதற்கான ஆணையை நாளை எழுத்து பூர்வமாக தரச் சொல்கிறேன்' என்று சொன்னார். மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி நபி வழிப்படி தொழுகை தவ்ஹீத் பள்ளியின் வெளியில் வைத்து நடத்தப்பட்டு 5000 க்கும் அதிகமான கொள்கை சகோதரர்களின் பிரார்த்தனையோடு தொழுது முடித்தோம். பிறகு அங்குள்ள இளைஞர்களில் ஐந்து பேர் சென்று குழி வெட்ட ஆரம்பித்தனர். இதற்குள் வெளியுர் சகோதரர்களுக்கு தண்ணீர், பிஸ்கெட் பாக்கெட்டுகள், டீ, காபி என்று சகோதரர்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர். உடலை அடக்கம் பண்ணி விட்டு நான் வீட்டுக்கு வரும் போது இரவு இரண்டு மணி. பசியும் இல்லை. சாப்பிடாமலேயே படுத்து விட்டேன்.
தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் தவ்ஹீத் பள்ளியின் கொல்லையிலேயே அடக்கம் செய்ததை நிர்வாகம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தற்போது அந்த வீட்டை அன்பளிப்பாக கொடுத்த ஒரு பாகஸ்தரை அணுகி பிரச்னை பண்ணுகிறார்கள். "அங்கு அடக்கிய உடலை தோண்டி எடுப்போம். எடுத்து வேறு இடத்தில் அடக்கம் பண்ணுவோம்' என்கிறார்களாம்.
மக்காவிலிருந்து தொல்லை தாங்காமல் தனது தோழர்களோடு மதினா சென்றனர் நபிகள் நாயகம். ஆனால் எதிரிகள் அங்கும் படை திரட்டிக் கொண்டு பெருமானாரை கொல்ல வந்தனர். ஏனோ இங்கு எனக்கு அந்த சம்பவம் ஞாபகம் வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
// மக்காவிலிருந்து தொல்லை தாங்காமல் தனது தோழர்களோடு மதினா சென்றனர் நபிகள் நாயகம். ஆனால் எதிரிகள் அங்கும் படை திரட்டிக் கொண்டு பெருமானாரை கொல்ல வந்தனர். ஏனோ இங்கு எனக்கு அந்த சம்பவம் ஞாபகம் வருகிறது. //
-----------
மதீனாவில் பெருமானார்(ஸல்) எப்படி முதல் இஸ்லாமியக் குடியரசை நிறுவினார்?:
இஸ்லாம் வர்ணதர்மத்தை வேரறுக்கும் என்பதை உணர்ந்துகொண்ட மெக்கா குரைஷி பார்ப்பனர், இறுதியில் பெருமானாரை(ஸல்) கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த சமயத்தில், மதீனா அன்சாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அங்கே ஜாதி வெறி தாண்டவமாடியது. ஒருவரை ஒருவர் வெட்டிக்கொன்றனர். மெக்காவில் பல ஜன்ம விரோதி குழுக்களுக்கு இடையே பெருமானார்(ஸல்) நிலைநாட்டிய சமரச உடன்படிக்கைகளை கேள்விப்பட்ட அன்சாரிகள், தங்களுடைய பிரச்னையை தீர்க்க பெருமானாரை மதீனாவுக்கு அழைத்தனர்.
இனி மெக்காவில் இருந்தால், குரைஷி பார்ப்பனர் தன்னை கொன்றுவிடுவரென்பதை அறிந்து கொண்ட பெருமானார், தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள மெக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம்பெயர்ந்தார். இதைத்தான் ஹிஜ்ரத் என இஸ்லாமிய சரித்திரம் சொல்கிறது. அங்கே முதல் வேலையாக அனைத்து ஜாதி தலைவர்களையும் சந்தித்து பேசி அவர்களிடையே ஒரு அமைதி உடன்படிக்கையை நிலைநாட்டினார். இதனால், மதீனாவில் வியாபாரம் சூடுபிடித்து பொருளாதாரம் சீரடைந்தது. வறுமை ஒழிந்தது. இதன் மூலம் அன்சாரிகளிடையே பெருமானாரின் மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு உயர்ந்தது. இறுதியில், இந்த பொருளாதார கோட்பாடுதான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை உணர்ந்த மதினாவாசிகள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவினர்.
மதீனாவில் நடந்த பொருளாதார மறுமலர்ச்சியும், வறுமை ஒழிப்பும் அரேபியாவெங்கும் பரவியது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களில் அரேபியாவே ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவியது. இஸ்லாம் வந்தது "கடமையை செய், பலனை எதிர்பாராதே" எனும் பார்ப்பன வர்ணதர்ம சொத்துக்குவிப்பு ஏமாற்று வித்தையை உடைத்தெறிந்து "எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழவேண்டும்" எனும் நீதியை நிலைநாட்ட.
இந்த புரட்சி எப்படி நடந்தது?. பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த அவருடைய தோழர்களும் சிறுபான்மை முஸ்லிம்களும் தங்களுடைய உழைப்பையும் பொருட்களையும் வாரிவழங்கினர். வட்டியில்லா இஸ்லாமிய வங்கியை நிறுவி "லாபமும் நட்டமும் சரிபாதி" எனும் அடிப்படையில் மதினா வியாபாரத்தில் முதலீடு செய்தனர். குறிப்பாக உஸ்மான்(ரலி) அவர்கள் அரேபியாவின் மாபெரும் துணி வியாபாரியாகவும் செல்வந்தராகவும் இருந்தார். ஒரு கட்டத்தில், தனது சொத்துக்கள் அனைத்தையும் பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்துக்காக தியாகம் செய்ய முன்வந்தார். அப்பொழுது பெருமானார்(ஸல்) "ஏழ்மையை ஒழிக்க நீங்கள் ஏழையாகிவிட்டால், அப்புறம் யார் எங்களுக்கு வாரிவழங்குவது?. உங்கள் சொத்தில் பாதி போதும். மீதியை உங்கள் வியாபரத்தில் விருத்தி செய்யுங்கள்" என அறிவுறுத்தினார்.
இன்று தமிழக முஸ்லிம்களுக்காக பெரியார் திடலிலே அன்சாரிகள் காத்திருக்கின்றனர். அம்பேத்கரும் பெரியாரும் அன்சாரிகளின் தலைவர்களாக நிற்கின்றனர். கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய் காந்தி குரங்கு போல் முஸ்லிம் சமுதாயம் நிற்கிறது.
உஞ்சவிருத்தி பாப்பானிடம் போய் "எனக்கு வேலை கொடு, இட ஒதுக்கீடு கொடு" என எவ்வளவு நாளைக்கு கெஞ்சுவது?. அன்சாரிகளுடன் இணைந்து, நாம் ஏன் தமிழகத்தின் வறுமையை ஒழிக்கக்கூடாது?. இதற்கு பெரிய தியாகமெல்லாம் தேவையில்லை. ஒரு கோடி முஸ்லிமகள், வருடத்துக்கு பத்து ரூபாய் தந்தால் பத்து கோடி. இதனை "அம்பேத்கர் பெரியார்" அன்சாரிகளுக்கு கொடுத்தால், நமக்காக ஒரு மதீனா உருவாகும். இன்ஷா அல்லாஹ், தமிழகம் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவும்.
கொலைகார மோடி மஸ்தான் கும்பல் தமிழகத்தை இன்னொரு குஜராத்தாக மாற்ற வருகிறது. அதுவரை இலவுகாத்த கிளியாக இருப்பதா இல்லை வருமுன் காப்பதா?. சகோதரா, இன்னமுமா புரியவில்லை?.
அல்லாஹ் நாடினாலொழிய யாரும் இஸ்லாத்தை ஏற்கவும் முடியாது, புரிந்து கொள்ளவும் முடியாது. யாராலும் எந்த ஜமாத்தையும் சீர்திருத்தமுடியாது. ஆனால் உங்களுக்குள் ஒரு குறைந்தபட்ச அமைதி உடன்படிக்கையை நிலைநாட்டலாம். உன் வழி உனக்கு என் வழி எனக்கு எனும் அடிப்படையில் சந்தி சிரிக்காமல் வாழலாம். இப்படி அடித்துக்கொண்டால், நாளை மோடியும் அமீத்ஷாவும் இன்னொரு குஜராத்தை மிக எளிதாக தமிழகத்தில் செய்துவிடுவான். இவ்வளவு அடிவாங்கியும் இந்த முஸ்லிம்களுக்கு புத்தி வராவிட்டால், காபிரை குற்றம் சொல்லி என்ன பயன்?
ஆக அமைதி உடன்படிக்கை பற்றி சிந்தித்தால் நல்லது. பூனைக்கு மணி கட்டுவது யார்?
முதலில் உங்களை சீர்திருத்தி கொள்ளுங்கள் ஏன் அந்த பள்ளி இமாம் தொழுகை நடத்தினால்தான் என்ன குறைந்துவிடபோகுது
முதலில் உங்களை சீர்திருத்தி கொள்ளுங்கள் ஏன் அந்த பள்ளி இமாம் தொழுகை நடத்தினால்தான் என்ன குறைந்துவிடபோகுது
// முதலில் உங்களை சீர்திருத்தி கொள்ளுங்கள் ஏன் அந்த பள்ளி இமாம் தொழுகை நடத்தினால்தான் என்ன குறைந்துவிடபோகுது ..
----
பிரச்னை என்னபென்றால், திடீர்னு அவர்கள் நாகூர் முஹையத்தீன் ஆண்டவரிடமும், அஜ்மீர் அவுலியாவிடமும் துஆ கேட்க ஆரம்பித்துவிடுவர்.
அவர்களிடம் "நாளை உங்களுக்கும் இந்த நிலை வரலாம். நாம் ஒவ்வொருவரும் அவனிடம் திரும்பவேண்டும். ஆகையால் மையத்து விஷயத்தில் நாம் அவரவர் வழியை கடைபிடிப்போம். கப்ரஸ்தானை பொதுவாக வைப்போம்" என சொல்லி ஒரு தேக்ஷா பிரியாணி அனுப்பலாம். சில சமயம் நல்ல வார்த்தைகள் செய்யாத மாஜிக்கை ஒரு ப்ளேட் பிரியாணி செய்துவிடும். முயன்று பாருங்கள்.
இதனை "அம்பேத்கர் பெரியார்" அன்சாரிகளுக்கு கொடுத்தால், நமக்காக ஒரு மதீனா உருவாகும். இன்ஷா அல்லாஹ், தமிழகம் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவும்.
குருடன் கண்ட கனவு. உலகை இசுலாம் அரேபிய கலாச்சாரம் ஆள வேண்டும் என்று எந்த மடையன் கூட கனவு காணவில்லை.காலம் மலைஏறிவிட்டது.அரேபிய காடைத்தனங்களுக்கு செம அடி கிடைத்துக் கொண்டிருக்கின்றதை தாங்கள் நன்கு அறிவீா்கள். தொடா்ந்து கிடைக்கும். Beirut (AsiaNews) – The United Arab Emirates (UAE) has adopted a new law that bans “all forms of discrimination based on religion, caste, creed, doctrine, race, colour or ethnic origin,” Fr Samir Khalil Samir told AsiaNews. This is a “step forward,” according to the Egyptian Jesuit, one that runs counter to what other countries do in the region, many of which are still under the thumb of Islamic totalitarianism.
The UAE’s openness compared to other Muslim nations is further evinced by the presence of 24 churches on its territory, partially built with funds provided by local rulers. As a local bishop once said, “The UAE is the only country where Christians are well treated”. It is no accident that many Christians who live in Saudi Arabia travel to Abu Dhabi for Christmas and Easter celebrations (pictured).
.....n the Arab and Islamic worlds, where discrimination is commonplace, a law against discrimination is a rare thing. In Arab and Muslim countries, Islam is the state religion and other faiths are at best tolerated. Equality is foreign to Islam. Yet, this anti-discrimination legislation does just that; it provides equality, replacing totalitarian notions.
As Christians living in the Islamic world, we do not ask for toleration; we want full citizenship. We insisted on it at the 2010 Synod on the Middle East. Christians ought to be equal citizens like everybody else. In Islamic countries, the various constitutions make several distinctions between Muslims and non-Muslims; between Muslims and dhimmis (protected people); between men and women; between Arabs and other ethnic groups.
பக்கம் -2
Under the new law, “all forms of discrimination based on religion, caste, creed, doctrine, race, colour or ethnic origin” are outlawed. This means that in the UAE, discrimination based on Islam is banned.
The Sunni-Shia divide has been a fault-line around which many wars have been fought in the Arab world. With the new law, equality will be guaranteed among people, largely inspired by the Universal Declaration of Human Rights. This is a step forward.
It is important to note that another positive element is the fact that the laws anti-discrimination provisions will also cover written communication, broadcasting (TV) and social medial. UAE leaders are well aware of the ubiquitous presence of such media; hence, they have decided to deem “a criminal act” all forms of discrimination in them or hate spread by them.
No to religious hatred
With the new law, calling someone else ‘infidels’ (takfir) is punishable. Why? Because under Islamic law, someone who is an ‘infidel’ or an ‘unbeliever’ (kafir) could be put to death. Although the same law prohibits the killing of Christians and Jews because they are ‘dhimmi,’ protected, this does not apply to pagans, atheists or members of other religions. Under Islamic rule, infidels enjoy no protection. He or she can either convert to Islam or be killed. The Islamic State group has used this principle, and used it to kill Christians (even if it is against Islamic law).
The new legislation goes furthers and outlaws acts that promote ‘religious hatred’ even if no direct hateful action is undertake. Thus, anyone or any group that promotes hatred can expect heavy punishment.
In the past, hate crimes were not banned under the law. Now this is the case, and this is something a daring step to take. And we in the West might have a thing or two to learn. Consider all the contempt people have for migrants in Europe, or blacks in the United States. In your countries, hate is mostly racial in nature. In our region, in the Middle East, hate is always about religion.
The law also outlaws support for violent foreign groups, especially by making monetary donations. My guess is that this is a finger indirectly pointed at Saudi Arabia and Qatar, who are known to finance radical Islamic groups.
By doing this, the UAE has taken a step forward with regard to religious freedom, still the exception to the rule in Muslim countries. I think we should support them as much as we can. It is crazy to criminalise someone only because he or she is different.
Such progress is just a first step, and it is mostly confined to the religious sphere. There is still a lot of work to do in the realm of political and in the justice system. In the UAE, human rights are upheld unevenly. Freedom of expression is limited (like in every country in the region). Prisoners are really badly treated. The courts are not fully independe
Foreign workers are not guaranteed any rights. They are often treated like slaves, especially women working as domestics. This is really serious, considering the fact that foreigners represent 85 per cent of the resident population of the UAE.
Still, the new law is very modern. I have the impression that the UAE has decided not to stick to religious legalism, and that this is the result of better education. One of the most positive features of this country is its high literacy level. The average is 90 per cent, a record in the Middle East. Among females between 15 and 24, it is 97 per cent. Among young people, it is 93.6 per cent.
Let us hope that others will follow this first step, and that more Arab and Muslim countries will do the same.
இசுலாமிய மதக் கோட்பாடடை 1500 வருடங்களுக்கு முந்தி முகம்மது என்ற அரேபியா் கற்றுக் கொடுத்த கற்காலம்அம்சங்கள் மிகுந்த நாகாீிகத்தை பழுதுபாா்க்க ஐக்கிய அரபு நாடுகள் சம்மதித்து சட்ட வடிவில் நிறைவேற்றிவிட்டது.
Post a Comment