Followers

Friday, July 17, 2015

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!



ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

இன்று வளைகுடா நாடுகளிலும் மற்ற இடங்களிலும் ஈகை திருநாள் கொண்டாடிய நண்பர்களுக்கும் நாளை பெருநாள் கொண்டாட இருக்கிற நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஃபித்ர் தொகையாக 100 ரூபாயை நிர்ணயித்திருக்கின்றனர். தகுதியுடையவர்கள் 'ஸதகதுல் ஃபித்ர்' எனும் பெருநாள் தர்மத்தை அளித்து நோன்பில் செய்த ஒரு சில பாவங்களுக்கு பரிகாரத்தைத் தேடிக் கொள்வார்களாக!

---------------------------------------------------

நபி அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி “தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி

நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா

நபி காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு “சாவு” ஃபித்ரா கொடுத்துக்கொண்டிருந்தோம் என நபித்தோழர் அபூசயீத் அல்-குத்ரி(ரலி) கூறும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மது, இப்னு மாஜ்ஜா போன்ற ஹதீஸ் நூற்களில் காணப்படுகிறது.

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:93


No comments: