Followers

Friday, July 17, 2015

பெருநாள் தொழுகை நல்லபடியாக முடிந்தது!தவ்ஹீத் ஜமாத் பள்ளிக்கு செல்லாதீர்கள்: அந்த ஜமாத்தில் உங்கள் வீட்டு இளைஞர்களை சேர விடாதீர்கள்: தவ்ஹீத் ஜமாத் அல்ல அது தறுதலை ஜமாத்: பெண்கள் பள்ளிக்கு செல்வது ஹனபி மத்ஹபின் படி தவறு என்றெல்லாம் பள்ளி வாசல் மேடைகளை பயன் படுத்தி கொச்சை படுத்தி வந்தார் ராஜகிரி கீழப்பள்ளி இமாம் ஷாகுல் ஹமீது.

இந்த இமாமின் தரங்கெட்ட வார்த்தைகளை காலடியில் போட்டு மிதித்த ராஜகிரி வாழ் இஸ்லாமியர்கள் காலை ஏழு மணியிலிருந்தே சாரை சாரையாக தவ்ஹீத் பள்ளியை நோக்கி வர ஆரம்பித்தனர். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குடும்பம் சகிதமாக வந்து குவிய ஆரம்பித்தனர். பண்டாரவாடை கிளை தனியாக பிரித்து கொடுக்கப்பட்டும் திறந்த வெளி முழுவதும் மக்கள் வெள்ளம். கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறதேயொழிய குறைந்த பாடில்லை.

நபிகள் நாயகம் 12 தக்பீர்களுடன் திறந்த வெளியில் குடும்பத்தோடு தொழுதுள்ளார்கள். பெண்களில் மாதவிடாயை அடைந்தவர்களும் பள்ளியில் தொழாமல் அமர்ந்திருக்கும்படி கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் இதற்கு மாற்றமாக 6 தக்பீர்களுடன் பெண்களையும் அனுமதிக்காமல் தொழுகையை நடத்துகின்றனர் சுன்னத் ஜமாத் என்று சொல்லிக் கொள்பவர்கள். நபி வழியை யார் பேணுகிறார்கள் என்பதை படிப்பவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்.

எத்தனை பொய்ப் பிரசாரங்கள் செய்தாலும் மக்கள் ஏகத்துவத்தின் பால் குவிந்த வண்ணமே உள்ளனர். சுன்னத் ஜமாத் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களிடம் உள்ள குறைகளை களைய முற்பட வேண்டும். அதை விடுத்து தவ்ஹீத் ஜமாத்தை எந்த வகையிலாவது அழித்து விடலாம் என்று நினைப்பார்களேயானால் இறைவனால் மேலும் சிறுமை படுத்தப்படுவார்கள்.

இந்த நல்ல நாளில் நோய் நொடியற்ற வாழ்வை கொடுத்து செல்வ வளத்தையும் கொடுத்து ஏகத்துவத்தின் பால் அனைத்து மக்களும் வர வல்ல இறைவன் கிருபை புரிவானாக என்று பிரார்த்திப்போமாக!

நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

2 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

நாத்திகனும் நாத்திகனும் சரிசமமா?:

"ஹிந்துமதத்தை ஒழி, ஹிந்துமதத்தை ஒழி" என நாத்திகர் அலறுகின்றனர். ஆனால் ஹிந்துமதமென்றால் என்ன?. வர்ணதர்ம ஜாதீய அடுக்குமுறைக்கு மறுபெயர்தான் ஹிந்து மதம். ஜாதியுள்ள ஒவ்வொரு நாத்திகரும் ஹிந்துதான். ஆக ஜாதியை ஒழித்தால்தான் ஹிந்துமதம் ஒழியும்.

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என சொல்லும் நாத்திகர் யாராவது ஜாதி இல்லை, இல்லவே இல்லையென சொல்வாரா?. அனைத்து நாத்திகரிடமும் ஜாதி மட்டும் அப்படியே இருக்கிறதே !!. சரித்திரத்தில் ஒரு உயர்ஜாதி நாத்திகனும் சூத்திர நாத்திகனும் சம்பந்தம் பேசி வெத்திலை பாக்கு மாற்றினார்களா?. ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தைவிட சிறந்த மார்க்கத்தை மனித இனத்தால் சிந்திக்கவே முடியாதென பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரே சொல்லிவிட்டார்.

முஹம்மத் அலி ஜின்னா said...

"தலித் பாப்பாத்தி" மாயாவதி சுருட்டிய ஆயிரக்கணக்கான கோடிகளை அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளார். இவையனைத்தும் ப்ராஹ்மின்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவருடைய சாப்ட்வேர் கம்பெனியில் ஒரு தலித் கூட கிடையாது.

நல்ல வேளை. இடஒதுக்கீட்டுக்காக பார்ப்பனரிடம் போராடிய அம்பேத்கர் இன்று உயிரோடில்லை. இல்லாவிட்டால் தூக்கிலே தொங்கியிருப்பார். லா ஹவ்ல வலா குவ்வத்...