'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, July 28, 2015
முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவு!
அப்துல் கலாம் ஆரம்பக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை பயின்றது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான். அன்றைய காலகட்டத்தை நினைவுகூர்கிறார்கள் அந்தப் பள்ளிகளின் இன்றைய தலைமை ஆசிரியர்கள்.
ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது மண்டபம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி எண் 1. ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தை ஒட்டியிருக்கும் இப்பள்ளிதான் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த கலாமுக்கு, அகர முதல எழுத்தை கற்றுத் தந்தது.
அன்று தொடக்கப் பள்ளியாக ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கிய இப்பள்ளியில், கலாமை ஒன்றாவது பாரத்தில் சேர்த்தார் அவரது தந்தை ஜயினுலாபுதீன். 1941 முதல் 1946-ம் ஆண்டு வரை கலாம் பயின்ற இப்பள்ளியில்தான் அவரது தந்தையின் நண்பரும், ராமேசுவரம் கோயில் தலைமை குருக்களுமான பக்ஷி லட்சுமண சாஸ்திரியின் மகன் ராமநாத சாஸ்திரியும் படித்தார். கலாமின் மற்ற இரு நண்பர்கள் அரவிந்தன், சிவப்பிரகாசன்.
இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியை பி.ராஜலட்சுமி கூறியதா வது: தான் விஞ்ஞானியாக உருவாக அடித்தளம் அமைத்தது இந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர்தான் என்று கலாம் அடிக்கடி குறிப்பிடுவார். தன் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட, கலாமை தன் வீட்டு சமையற்கட்டுக்கே அழைத்துச் சென்று உணவு பரிமாறியவர் அவர். இது குறித்தும், பெரிய நகரங்களில் உள்ள மெத்தப்படித்தவர்களுக்கு சமமாக நீ உயர வேண்டும் கலாம் என்று அவர் வாழ்த்தியது பற்றியும் தன்னுடைய அக்னிச் சிறகுகள் நூலில் எழுதியுள்ளார் கலாம் என்றார்.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கலாம் படித்த ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரத்தில் ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ளது. இப்பள்ளியில் கலாம் படித்த வகுப்பறை இப்போதும் உள்ளது. அங்கு பிளஸ் 2 கணிதம், உயிரியல் பாடப்பிரிவு செயல்படுகிறது. அவரது சேர்க்கை விவரம் உள்ள பதிவேடு பொன்போல பாதுகாக்கப்படுகிறது.
இது குறித்து தலைமை ஆசிரியர் டி.பால்மாறன் கூறியதாவது:
இப்பள்ளியில் 13.6.1946-ல் கலாம் சேர்ந்துள்ளார். ராமேசுவரத்தில் இருந்து 58 கி.மீ. தொலைவில் இப்பள்ளி உள்ளதால், இங்குள்ள விடுதியில் தங்கித்தான் அவர் படித்தார். அவர் குடியரசுத் தலை வரான பிறகு எங்கள் பள்ளி மாண வர்கள் 60 பேர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றிருந்தோம். அவர்கள் தடுக்கப்பட்ட செய்தியை அறிந்த கலாம், ‘அவர்கள் என் குழந்தைகள் அவர்களே உள்ளே விடுங்கள்’ என்று சொன்னார். அச்சம்பவம் என் கண்ணில் இப்போதும் நிழலாடுகிறது. அவரைப் போன்று குழந்தைகளை நேசித்த ஒரு தலைவர் இனி பிறப்பது சந்தேகம் என்றார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-07-2015
ஒரு முஸ்லிம் தனது தாய் தாய் நாட்டுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் தனது வாழ்நாளை அமைத்துக் கொண்டவர் பெரியவர் அப்துல் கலாம்.
அதே நேரம் சற்று கூடுதலாக போய் சாமியார்களின் கால்களில் விழுவதும், அவர்களின் கீழ் பவ்யமாக அமர்ந்திருப்பதும், போன்ற செயல்களை தவிர்த்திருக்கலாம். தனது இஸ்லாமிய கடமைகளான தொழுகை போன்ற விஷயங்களை எப்படி பொதுவில் வைக்காமல் தவிர்த்துக் கொண்டாரோ அதே போல் சாமியார்களை சென்று சந்திப்பதையும் தவிர்த்துக் கொண்டிருக்கலாம். சுப்ரீம் கோர்ட்டே கண்டித்த குஜராத் படுகொலைகளை கண்டித்து ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாம். அந்த மக்களை சென்று சந்தித்து ஆறுதலும் கூறியிருக்கலாம். இதை எல்லாம் செய்தால் இந்துத்வாவாதிகள் தன்னை ஒன்றும் இல்லாமில்லாமல் ஆக்கி விடுவார்கள் என்று பயந்தாரோ என்னவோ?
அப்துல் கலாம் அவர்கள் அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து அவரது நற்செயல்களால் கிடைக்கும் நன்மைகளை வைத்து இறைவன் அவரை சுவனத்தில் புகச் செய்வானாக!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அப்துல் கலாம் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கிய பாப்பானாக வாழ்ந்தார், பாப்பானாக செத்தார். குஜராத் இனப்படுகொலை பற்றி இந்த கிழவன் சாகும் வரை வாயே திறக்கவில்லை. நாட்டை சுருட்டும் பாப்பான் பனியா கும்பலின் ஊதுகுழல்.
நாட்டை நாறடிக்கும் பார்ப்பன கும்பலை மூடிமறைக்க “இளைஞர்களே கனவு காணுங்கள்” எனும் அல்வாவை நாட்டுக்கு கொடுத்தார். கற்பனையில் சுய இன்பம் காணும் வித்தையை நாட்டு மக்களுக்கு கற்றுக்கொடுத்தார். He taught the nation, how to do mental masturbation. இவர் ஒரு சுன்னத் செய்யப்பட்ட அக்ரஹாரத்து அம்பி.
ராமேஸ்வரத்தில் வாழும் இவருடைய குடும்பம் ஒரு நேர்மையான ஏழை முஸ்லிம் குடும்பம். இவருடைய அண்ணன் எப்பொழுதும் ஜின்னா தொப்பி போட்டு வெள்ளை லுங்கி அணிந்திருப்பார். கலாம் ஜனாதிபதியானதும், இவரை வாழ்த்த இவருடைய குடும்பம் டெல்லிக்கு சென்றது. அப்பொழுது இவர்களை ராஷ்டிரபதி மாளிகையில் ஒரு வாரம் விருந்தினராக தங்க அழைத்தனர். அப்பொழுது அவருடைய அண்ணன் “இந்த மாளிகை மக்களின் வரிப்பணத்தில் நடக்கிறது. பொது மக்களின் வரிப்பணத்தை அனுபவிக்கும் உரிமை எனக்கில்லை. உமர் கலீபா போல் நேர்மையாக ஆட்சி செய். நாளை அல்லாஹ் உன்னிடம் கேள்வி கணக்கு கேட்பான்” என சொல்லி அடுத்த ரயிலை பிடித்து ஊர் வந்து சேர்ந்தார். அப்பொழுது அவருடன் அவர்களுடை குடும்ப நன்பர் அய்யர்வாளும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
udkuroo mahasina mowthakum
சுவனப்பாியன் தாங்கள் ஒரு அலப அற்ப புத்திக்காரன் என்பதை மீண்டும் தெளிவு படுத்திவிட்டீர்கள். கலாமை பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வீண் விமா்சனம் வேண்டாம். அவர் ஒன்றும் அரேபிய காடைத்தனத்திற்கு வக்கலாத்தும் வாங்கவில்லை. இந்து காடையா்களின் செயலுக்கும் ஆதரவு திரட்டவில்லை. நிமா்ந்த நடை நோ்கொண்ட பாாவை கொண்டவா். எவா் நினைத்தாலும் கலாமின் புகழை தடுத்து நிறுத்த முடியாது. கலாமை ஜனாதிபதியாக்கிப் பாா்க்க நினைத்தவா் திரு.அலடல் பிஹாாி வாஜ்பாய் அவர்கள். ஜனாதிபதி பதவிக்கு வந்தப்பின்்னா் தான் இந்தியா அவரை திரும்பி பாா்த்தது. அவரும் தனது தகுதியால் இந்தியா்கள் அனைவாின் உள்ளங்களை கொள்ளை கொண்டாா். இருளை பழிப்பதில் காலத்தை வீணாக்காதவா். விளக்கை ஏற்றுவதில் நம்பிக்கை கொண்டவா். அல்லா நாடினால் என்று அரேபிய மதத்தவா்கள் அடிக்கடி கூறுகின்றாா்களே! ரயில் பெட்டியில் செத்த இந்துக்களுக்கும் சோ்த்து பேச வேண்டியதிருக்கும்.எனவேதான் கலாம் மௌனம் சாதிப்பதுதான் அதிக நன்மை தரும் என்று கருதியிருக்கலாம். கலாமிற்கு ஆலொசனை சொல்லும் அளவிற்கு தாங்கள் கற்றவறில்லை. சிந்தனை சக்தி கொண்வா் இல்லை. அரேபிய கலாச்சார காடைத்தனங்களை தன்னில் கொண்டவாில்லை.அதனால்அவரை தங்களுக்கு பிடிக்கவில்லை. இந்திய பண்பாட்டின் சிறந்த அம்சங்களை தன்னில் கொண்ட முஸ்லீ்ம்தான் பாரத ரத்னா அமரா் அப்துல் கலாம். எனது அருமை அருமை பாட்டனாா்.பிதாமமா்.
கா்நாடக சங்கீதம் படித்த ரசிக்கும் அன்பா். வீணை வாசிக்கத் தொிந்த அன்பா் அற்புதா் ஐயா கலாம் அவர்கள்.
Post a Comment