Followers

Tuesday, July 14, 2015

எங்கள் ஊரில் இன்று 27 ஆம் கிழமையாம்!

எங்கள் ஊரில் இன்று 27 ஆம் கிழமையாம்!

எங்கள் ஊரில் இன்று எங்கு பார்த்தாலும் யாரை பார்த்தாலும் புது சட்டை: புது கைலி: வாசனை திரவியங்களை அள்ளி பூசிக் கொண்டு பலரும் உலா வருகின்றனர். 'கட்,.......கட்.........கட்' என்ற கொத்து புரோட்டா போடும் சப்தம் வேறு காதைப் பிளக்கிறது.. பள்ளிகள் தோறும் 'ஹூ.... ஹூ.... ஹூ' என்று பல ராகங்களில் திக்ருகள் வேறு நடைபெறுகிறது.. கடை வீதிகள் தோறும் திருவிழாக்களைப் போல் காட்சியளிப்புகள்: சிறுவர்களும் இளைஞர்களும் இரு சக்கர வாகனங்களில் 'தட... தட...' என ஒலி எழுப்பிக் கொண்டு வேக வேகமாக செல்கின்றனர். எங்கு செல்கின்றீர்கள் என்று பலரிடமும் கேட்டேன்.... ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. உங்களுக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்..... :-)

ஆடி ஓடி களைத்து இரண்டு மணிக்கு பள்ளியில் தரும் பிரியாணி பொட்டலத்தை சாப்பிட்டு விட்டு களைப்பு தீர பெரும்பாலானவர் உறங்கி விடுவர். சிறு வயதில் நானும் இது போல் உறங்கியிருக்கிறேன். :-) இறைவன் கடமையாக்கிய ஃபஜர் தொழுகைக்கு பள்ளி வாசலில் எவரையும் காணோம்...... கொஞ்சம் கண்டு பிடித்து ஃபஜர் தொழுகைக்கு பள்ளிக்கு கூட்டி வருகிறீர்களா?

1 comment:

முஹம்மத் அலி ஜின்னா said...

லைலத்தில் கத்ர் அன்று இரவு முழுதும் கண் விழித்து தொழுவது மிகவும் நல்ல விஷயம். இது இஸ்லாத்துக்கு எதிரான தர்கா வழிபாடு போன்ற செயலல்ல. அதே சமயம் ஓவர் உற்சாகத்தில் பஜ்ர் தொழுகையை கோட்டை விடுவது தவறு.

இருந்தாலும் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கும் மாற்றுமத சகோதரர்களுக்கும் ரமலான் மாதத்தில் இஸ்லாமிய வழியில் சந்தோஷமும் விருந்தும் கிடைக்கிறதென்றால் அதனை வரவேற்போம்.

"எல்லோரும் கொண்டாடுவோம், அல்லாஹ்வின் பெயரை சொல்லி, நல்லோர்கள் வாழ்வை எண்ணி".