Followers

Wednesday, July 01, 2015

தராவீஹ் எக்ஸ்பிரஸ்(?): - வழிகேடர்களுக்கு எச்சரிக்கை!



தராவீஹ் எக்ஸ்பிரஸ்(?): - வழிகேடர்களுக்கு எச்சரிக்கை!

https://www.youtube.com/watch?v=FtFz5gnKdaY

மார்க்கத்தில் புதிய நூதன கலாச்சாரத்தை புகுத்தும் வழிகேடர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதில் ஒரு நிகழ்வாக 7 நிமிடத்தில் 23 ரக்அத்களை தொழுது கின்னஸ் சாதனை படைத்துள்ளார்களாம் இந்த நவீன வழிகேடர்கள்.

இஸ்லாத்தை விளங்காத பெரும்பான்மை மக்களின் மார்க்கப் பற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி காசு பார்க்கும் மார்க்க அறிஞர்கள் இருக்கும் வரை இது போன்ற வழி கேடுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இந்தோனேஷியாவில் நடைபெறும் 20 ரகாஅத் தராவீஹ் சுன்னத் ஜமாத் என்று சொல்வோரால் நடத்தப்பட்டு சாதனை புரியப்பட்டுள்ளது. அவர்களுக்கு போட்டியாக நம் தமிழக சுன்னத் ஜமாத்தினரும் களம் இறங்குவார்களா? பொறுத்திருந்து பார்போம்.

நபிகள் நாயகமோ அல்லது குர்ஆனோ காட்டித் தராத ஒரு வழியை மார்க்கமாக பேணினால் அது நம்மை எங்கு கொண்டு போய் விடும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.


“வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மது அவர்களின் நடைமுறை, காரியங்களில் கெட்டது நபி அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத ‘புதிய வணக்கங்கள்’. ‘புதிய வணக்கங்கள்’கள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்” என்று நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்(ரழி), ஜாபிர்(ரழி),

நூல்கள் : புகாரீ, முஸ்லிம், நஸயீ.

3. “உங்களிடையே இரண்டை விட்டுச் சொல்கிறேன். அவற்றைப் பற்றி பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம். இரண்டு எனது வழிமுறை,”

அறிவிப்பாளர்: மாலிக் இப்னு அனஸ்(ரழி), நூல்: முஅத்தா

4. அன்னை ஆயிஷா அறிவித்துள்ளார்கள்: “எவரர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும சரியே” என்று நபி அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரீ, முஸ்லிம்

No comments: