Followers

Sunday, September 10, 2017

அவதூறு ஆடியோ குறித்து பீஜேவின் பதிலடி உரை.

அவதூறு ஆடியோ குறித்து பீஜேவின் பதிலடி உரை.

பொறையாரில் இன்று நடைப்பெற்ற முஹம்மதுர் ரஸுல்லாஹ் நாகை மாவட்ட மாநாட்டில் தன் மீது சுமத்தப்பட்ட அவதூறு ஆடியோவிற்கு சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆணித்தரமான பதிலடியை விளக்கமாக கொடுத்தார்.

பின்னர்..

பிஜேவின் உரையிலிருந்து....

இந்த மாநாட்டோடு தாவா பணிகளிலிருந்து ஒதுங்கி வியாபாரத்தில் கவனம் செலுத்தலாம் என்றிருந்த போது எதிரிகள் போலியாக உருவாக்கிய இந்த அவதூறு ஆடியோ பரப்பபட்டது. இனி இந்த பழியோடு ஒதுங்க கூடாது. முன்பை விட இன்னும் சமுதாய பணியில் செயல்பட வேண்டும். புது புத்துணர்ச்சியுடன் இந்த மார்க்கத்தை இன்னும் அதிக வீரியத்துடன் எடுத்துரைக்க வேண்டும் எண்ணம் உருவாகிறது.

இந்த ஜமாஅத்தின் பவரை பயன்படுத்தி அரசியல்வாதிகளுக்கு பல்லை காட்டினால் பல கோடிகளுக்கு அதிபதியாகி எங்கோ போயிருக்கலாம் ஆனால் ஒரு போதும் மார்க்கத்தை வைத்து சாம்பாதித்தது கிடையாது உழைத்து தான் முன்னேறினோமே தவிர பிழைப்பிற்காக மார்க்கத்தை பயன்படுத்தியதில்லை. எனது வருமானத்திற்காக எந்த பணக்காரரிடமோ அல்லது ஜமாஅத்திடமோ அல்லது வெளி ஆட்கள் வேறு யாரிடமோ கடன் கூட வாங்கினதாக காட்டமுடியாது. எனது சொந்த உழைப்பினால் தான் முன்னேறினோமே தவிர வேறு எந்த வழியில் முன்னேறியதில்லை.

மேலும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்த ஜமாஅத்திலிருந்து நான் போனாலும், யார் போனாலும் சரி தான் கொள்கைக்காக மட்டுமே இதில் இருக்கவேண்டும், குர்ஆன் ஹதீஸுக்காக மட்டுமே இதில் இருக்கவேண்டும் தவிர எந்த தனி நபருக்காகவும் இதில் இருக்க கூடாது.

(அல்லாஹ் காப்பாற்றட்டும்) நாளைக்கே நான் தப்பு செய்தாலும் இந்த ஜமாஅத்தை விட்டு என்னை தூக்கி எறிவார்கள். அப்போது நீங்கள் என் பின்னால் வரமாட்டீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன் காரணம் அப்படி தான் உங்களை இந்த ஜமாஅத் உருவாக்கியுள்ளது. நாளைக்கு நான் வெளியே போனால் நீங்கள் அல்லாஹ்வை தவிர்த்து வேறு நபரையா வணங்க போகிறீர்கள்.? அல்லது ரஸுல்லாஹ்வை தவிர்த்து வேறு ஒருவரை நபியாக கொள்வீர்களா.? இந்த குர்ஆனுக்கு பதிலாக புது குர்ஆனை உருவாக்குவீர்களா.? ஆகவே எவன் போனாலும் எவன் வந்தாலும் இந்த ஜமாஅத்தை பொறுத்தவரை ஒரு சிறு சலனம் கூட ஏற்படாது.

ஒரு தலைவர் ராஜினாமா செய்தார் அதனால் எந்த சலனமாவது இந்த ஜமாஅத்தில் ஏற்பட்டதா.? எந்த கிளையிலாவது பிரச்சனை ஏற்பட்டதா.? அதனால் யாராவது இந்த ஜமாஅத்தை விட்டு வெளியேறினார்களா.? அப்படி ஒரு நிகழ்வும் இந்த ஜமாஅத்தில் கிடையாது.

காரணம் 30 ஆண்டுகள் உரம் மேல் உரம் போட்டு உறுதியாக கொள்கையால் வார்த்து எடுக்கப்பட்ட ஒரே ஜமாஅத்.

அல்ஹம்துலில்லாஹ்..!!






1 comment:

Dr.Anburaj said...


ஆடியோவை நானும் படித்தேன். ஒரு ஆணும் பெண்ணும் -அதுவும் கள்ள மாப்பிள்ளையும் கள்ளக்காதலியும் இப்படியும் பேசுவாா்களா ? இட்டு கட்ட வில்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று தொியவில்லை. அடுத்தவன் மனைவியோடு என்ன பேச்சு ? அசிங்கம்.படித்தது போதித்தது எதுவும் மனதில் இல்லை.