உங்கள் வயது எத்தனை என்ற கேள்வியுடன் தொடங்கினேன்....?
அவர், 28 என்றார்...!
அப்போ 29 வருடங்களுக்கு
முன் எங்கு இருந்தீர்கள் என்றேன்?
கேலியாக சிரித்தபடி, முட்டாள்
தனமான கேள்வி நான் அப்போ இருந்திருக்கவில்லை என தெரியாதா என்றார்.
இல்லை என்பதை ஒப்புகொண்டதற்கு நன்றி என கூறி, 29 வருடங்களுக்கு
முன் வரை இல்லாத நீங்கள் இப்போ இருப்பது வியப்பு தானே என்றேன்...?
இல்லை என் தாய் தந்தையின் எக்ஸ் ஒய் குமோசோம்களிலிருந்து
இருந்து உருவானேன். இதில் வியப்பேதும் இல்லை என்றார்.
அப்படி எனில் எது வியப்பு என்றேன்?
சற்று யோசித்து விட்டு, தன்னால்
உருவாகி இருந்தால் வியப்பு, ஆனால் நான் என் தாய் தந்தை வழியாக வந்தேன் வியக்க ஏதுமில்லை
என்றார்.
அப்படி எனில் உங்கள் தாய் தந்தை, அவருக்கு
முந்திய தாய் தந்தை அதன் சங்கிலி தொடர்ச்சியாய் முதல் தாய் தந்தை எங்கிருந்தார்கள்
என்றேன்...?
அவர்கள் மனித குரங்கின் பரிணாம வளர்ச்சி என்றார். ஹோமோ
எரெக்டஸ் சிம்பான்ஸி என அப்படியே தொடர்ந்தார்.
உத்தேசமாக ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன் தான் மனித இனம்
தோன்றியதாக அறிவியல் கூறுகிறது. அதற்கு முன் உங்கள் கூற்றுப்படி குரங்கிலிருந்து
உங்கள் மூதாதையர்கள் வந்ததாக வைத்துக்கொண்டாலும் முதல் குரங்கு எங்கிருந்து வந்தது
என்றேன்.
அவர் இப்போது சீரியஸாக தொடங்கினார்,
அதாவது எல்லா உயிரிணங்களும் தண்ணீரில் உள்ள ஒரு செல்
உயிரியில் இருந்து பரிணாமடைய தொடங்கியது என டார்வினிஸ்ட் தியரியை எடுத்து
போட்டார்.
நான் கேட்டதற்கு பதில் அது அல்ல, குரங்கின்
மூதாதைய குரங்கு யார் எப்போதிலிருந்து அது குரங்கு என்றேன் மீண்டும்..!??
சற்றே கடுப்பாகி வருங்கால அறிவியல் அதை தெளிவுப்படுத்தும்
என்றார்.
அவர் கருத்தை மறுத்து விட்டு வளர்ந்து கொண்டு இருக்கும்
நவீன அறிவியல் டார்வின் கோட்பாடுகளை பொய்பித்துக்கொண்டு இருக்கிறது அதை நீங்கள்
அறியாமல் இருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது என கூறி அடுத்த கேள்விக்கு தாவினேன்.
உங்கள் கூற்றுப்படி ஒரு செல் உயிரியில் இருந்து தான் உயிரனங்கள்
பல்கியதாக வைத்துக்கொள்வோம். அந்த ஒரு செல் உயிரி எது? இப்போ
எங்கே? இல்லை எனில் எப்படி பரிணாமடைந்தது?
மனித இனம் தோன்றி ஐந்து கோடி ஆண்டுகள் என்று உத்தேசமாக
கூறினாலும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன் இல்லாத மனித இனம் இப்போ உள்ளது
வியப்புகுரியது தானே என்றேன்!
அதையும் மறுத்து குரங்கு ஒரு செல் உயிரி என்றார் மீண்டும்.
சரி உங்கள் கூற்றுக்கே வருகிறேன், ஒரு
செல் உயிரி எப்போது தோன்றியது என்றேன்?
அவருக்கு பதில் தெரியவில்லை,
நானே சொன்னேன், உத்தேசமாக 300 கோடி ஆண்டுகள் என்கிறது அறிவியல் தியரி.
அதாவது உங்க பார்வையில் ஒரு செல் உயிரி கடலை கடந்து
குரங்காகி மனிதனாக 295 கோடி வருஷமானது,
ஆனால் சில சிம்பஸிகள் ஐம்பது அறுபது லட்சம் வருடங்களுக்கு
முன் மனிதனாக பரிணாமடைந்தாக டார்வினிஸ்டுகள் கூறுகிறார்கள்.
இப்போ என் கேள்வி மனிதன் தோன்றி ஐம்பது லட்சம் வருடம் ஆனதா
ஐந்து கோடி வருடமானதா?
அதாவது இவர்கள் உளறல் என்னவென்றால் குரங்கு மனுசனாகி
மறுப்படியும் குரங்காகி மறுபடியும் மனுஷனாயிட்டான். அப்படிதானே தோழர் என்றேன்.
பலத்த அமைதி அவரிடம்.
இன்னொரு கேள்வி தோழர்,
310 கோடி வருடங்களுக்கு முன்பு ஒரு செல் உயிரி
இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என்றேன்?
"ம்ம்ம்ம்" என்றார்.
அப்படி எனில் நீங்கள் இங்கே இப்போ உயிரோட்டமாய் இருப்பது
எப்படி பதில் சொல்லுங்கள் என்றேன்.?
உங்க வாதப்படி ஒரு செல் உயிரியில் இருந்து தான் உயிரினம்
வந்தது என்றால், அது கூட 310 கோடி
வருடங்களுக்கு முன்பு இல்லை, இல்லாத ஒரு
செல் உயிரில் இருந்து அதன் தொடர்சியாக நீங்கள் இங்கே இருப்பது வியப்பானது அல்லவா
என்றேன்.
மீண்டும் மறுத்தார், அதெல்லாம்
அணுக்கரு பிக்பாங் தியரி அதில் உருவான தாக்கம் என்றார்.
ரைட், குட்
பாய்ண்ட் என்றேன்.
பிக்பாங் தியரியின் அடிப்படையில் உலகம் எப்போது உருவானது
என்றேன்..?
உத்தேசமாக 450 கோடி
ஆண்டுகள் ஆகிறது என்கிறது அறிவியல் என்றார்.
வெரிகுட்! பிக்பாங் எப்படி உருவானது என்றேன்.
அணுக்களின் உண்டான அழுத்தத்தில் வெடித்து சிதறியதில்
உண்டானதே இந்த மல்டி கேலக்ஸி என்றார்.
நெருங்கி விட்டீர்கள் வெரிகுட், ஆனால்
இன்னொரு பாய்ண்டை விட்டு விட்டீர்கள் என கூறி
ஒன்றுமே இல்லாத ஜீரோ நெக்டரில் இருந்து தான் இந்த அணுக்கள்
உருவானதை பிக்பேங் தியரி கூறும் உண்மை என்றேன்.
இப்போ சொல்லுங்கள் ஒன்றுமே இல்லாத பூஜ்ஜியத்திலிருந்து
நானுற்று ஐம்பது கோடி ஆண்டுகளாக இந்த பரந்து விரிந்த கேலக்ஸிகளையும் அதில் சிறு
புள்ளியான இந்த
உலகையும் அதில் 28 வயதில் உங்களையும் பாதுக்காப்பாய் செம்மை
படுத்தியுள்ளானே அவன் யார் என்றேன்.
ஒன்றும் இல்லாதவையில் இருந்து எப்படி வந்தோம் என சிந்திக்க
மாட்டீர்களா?
எப்படி இவ்வளவு நுட்பமாக இயற்பியல் விதியுடன் இந்த உலகமும்
இதை விட பிரமாண்டமான ஆயிரக்கணக்கான கேலக்ஸிக்களையும் ஒரே ஒரு கண்ணுக்கு புலப்படாத
"கடவுளின் துகள்" மூலமாய் உருவானீர்கள் என்பதை லேசாக எண்ணி வீட்டீர்களா?
450 கோடி வருடங்களுக்கு முன் வெரும் பூஜ்ஜியமாக
இருந்த அண்டசராசங்கள், சூரியன் சந்திரன் பூமி மல்டி கேலக்ஸி காற்று நீர் ஒரு செல்
உயிரி குரங்கு மனிதன் நான் நீங்கள் என யாருமே இருந்திருக்கவில்லை என்றேன்.
மீண்டும் கேட்கிறேன் உங்கள் வயது என்ன?
தயங்கியவாரே.. 28 எட்டு
என்றார்..!!
இப்போ சொல்லுங்கள் இல்லாமல் இருந்த நீங்கள் இப்போது
உயிரோட்டமாய் இருப்பது வியப்பில்லையா?
"........................."
வெறும் மவுனம் தான் இருந்தது அவரிடம்.
விரைவில் மாறலாம். அல்லது மாறாமல் போகலாம். ஆனால் என்றும்
நிலைத்திருப்பவன் ஏகன் ஒருவனே!
"அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும்
என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும்,
அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக்
காட்டுவோம்.
உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக்
கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா"?
#அல்குர்ஆன் 41:53.
வானங்களும், பூமியும்
இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும்,
உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம்
என்பதையும்,
(நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள்
நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
#திருக்குர்ஆன் 21:30.
ஆக்கம்
ஃபஹத் அஹமத்
1 comment:
தங்களது வாதம் விளக்கங்கள் இசுலாமிய கடவுள் கொள்கையை விளக்கவில்லை.
Post a Comment