Followers

Monday, September 04, 2017

ரயில் பயணத்திலும் அழைப்புப் பணி!

ரயில் பயணத்திலும் அழைப்புப் பணி!

சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு பெரியவர் கையில் கயிறு கட்டியிருந்துள்ளார். அந்த கயிரை யாரோ ஒரு மத வியாபாரியிடம் பணம் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த கயிறை கட்டுவதால் பல ஆபத்துகளிலிருந்து விடுபடலாம் என்ற மூட நம்பிக்கையே...

ஏகத்துவ சிந்தனை கொண்ட நமது இளைஞர்கள் அவருக்கு கயிறு கட்டுவதில் உள்ள தவறுகளை எடுத்துச் சொல்லி அந்த மந்திரித்து கட்டிய கயிறை அறுத்தெறிய சொன்னார்கள். இஸ்லாத்தில் கயிறுகளை கட்டிக் கொள்வது பாவம் இறைவன் மேல்தான் அசையாத நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொண்ட பெரியவர் கயிறை அறுத்தெறிந்தார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

ஒருவர் நட்சத்திரம் பார்த்து குறி சொல்பவரிடம் சென்று ஏதேனும் விஷயமாக விசாரித்தால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
அபூஹுரைரா (ரலி) அறிவித்துள்ளார்கள்., நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

நூல் : முஸ்லிம் பாகம்: 4 பக்கம் : 1751 ஹதீஸ் எண்: 2230

யாரேனும் (மறைவான விஷயங்களைச் சொல்வதாக வாதிடும்) சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத்صلى الله عليه وسلم அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை அவர் நிராகரித்து விட்டார்


 நூல் : அபூதாவூத் பாகம்: 4 பக்கம்: 225 ஹதீஸ் எண்: 3904


1 comment:

Dr.Anburaj said...

மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி

மாயச் சதுரத்த்தை அமைக்கும் மூன்றாவது வகை ஒரு கூட்டு எண்ணை கொடுக்கப்பட்டு அதற்காக சதுரத்தை அமைப்பதாகும்.

ஒரு பாடலைப் பார்ப்போம்:

கப்பலெண் மிகாமல் இரண்டோர் எட்டில்

கருதிய பதினொன்றில் பதிமூன் றாக்கிச்

செப்பமுடன் நவமாக்கிப் பக்க மாக்கிச்

சேர்ந்ததோர் நான்காறில் செய்த பின்பு

ஒப்பிய இலக்கத்தைப் பாதி யாக்கி

ஒன்று தள்ளி ராசியின்மேல் பதினா லாக்கி

எப்படியும் முதலேழில் மூன்றில் ஐந்தாம்

ஈரைந்தில் பதினாறாம் இயம்ப லாமே”

(சுவடி எண் 1475)


இரண்டு படிகளில் சொல்லப்பட்டுள்ள இக்கணக்கின் வழிமுறையில் முதலில் 2,8,11,13,9,15,4,6 ஆகிய சிறு சதுரங்களில் முறையே 1,2,3,4,5,6,7,8 ஆகிய எண்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் பதினாறு சதுரங்களை எண்களுடன் காண்போம்:
1 2 3 4
5 6 7 8
9 10 11 12
13 14 15 16


இதில் இரண்டாம் கட்டத்தில் 1, எட்டாம் கட்டத்தில் 2 என்று இப்படி முறையே எண்களைப் பதிக்க வேண்டும்.

வருகின்ற சதுரம் முதல் படியில் இப்படி இருக்கும்


1 7
8 2
5 3
4 6



நவம் என்றால் ஒன்பது. ரா - இங்கு பன்னிரெண்டு.

பஷீகம் - 15 நாட்கள் கொண்டது. இங்கு 16. இவ்வாறாகச் சதுரத்தை அமைத்துக் கொண்ட பின்னர்க் கூட்டுத் தொகையில் பாதியில் ஒன்றைக் கழிக்க வேண்டும். பின்பு முறையே 12,14,1,7,3,5,10,16 ஆகிய கட்டங்களில் முன் கூறப்பட்ட எண்ணில் ஒன்றைக் குறைத்து இறங்கு வரிசையில் எழுத வேண்டும்.



சான்றாக சுவடியில் தரப்பட்டிருந்த மாயச் சதுரத்தின் கூட்டுத் தொகை 64. 64இல் பாதி 32.

ஒன்றைக் கழிக்க வருவது 31.



முன்னர் அமைத்த மாயச் சதுரத்தில் நிறைவு செய்யப்படாத கட்டங்களில் (12,14,1,7,3,5,10,16) முறையே 31,30,29,28,27,26,25,24 ஆகிய எண்களை நிரப்ப வேண்டும்.

29 1 27 7
26 8 28 2
5 25 3 31
4 30 6 24



மாயச் சதுரம் இப்போது அமைந்து விட்டது.

இந்த மாயச் சதுரத்தில் எந்த வரிசையையும் இடமிருந்து வலமாகக் கூட்டினாலும் மேலிருந்து கீழாகக் கூட்டினாலும் மூலை விட்டங்கள் வழியே கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகை 64!

போனஸாக இன்னொரு விந்தையும் இதில் உண்டு!

நான்கு மூலைகளில் உள்ள கட்டங்களில் அமைந்துள்ள எண்களைக் கூட்டினாலும் வருவது 64 தான்!!

இப்படி இந்தச் சுவடி தரும் விந்தை பல!

அறிவிற்கு விருந்தூட்டும் தமிழரின் சிறந்தப் பொழுது போக்குக் கணித விளையாட்டுக் குறித்து அறிந்து கொள்ள இந்த மாயச் சதுரங்கள் ஆதாரங்களாக விளங்குகின்றன.
இத்தகைய பாடல்கள் அரிதானவையாக விளங்குகின்றன.
மாயச் சதுரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யும் ஒரு சில கணக்குகள், கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம், பல கணக்கு வகை முதலான நூல்களில் காணப்படுகின்றன.
மாயச் சதுரங்களை உருவாக்கும் மேலை நாட்டினரின் கணிதச் செய்முறைகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யக் கூடிய ஆய்வுக் களமாக இவை விளங்குகின்றன.
காலம் குறித்த செய்திகள் கூறப்படவில்லை என்றாலும் காலத்தில் பழமையானவையாகப் பழந்தமிழரின் கணித அறிவை உலகிற்குப் பறை சாற்றுவனவாக இவை விளங்குகின்றன.

இந்த ஒரு சுவடியிலேயே இவ்வளவு அரிய பாடல்களைக் காணும் போது இன்னும் கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம், பல கணக்கு வகை போன்ற நூல்களை ஆராய்ந்தால் நாம் பெறக் கூடிய விந்தைகள் எவ்வளவோ.
தமிழின் பெருமை எல்லயற்றது.இந்தியனின் இந்துவின் பெருமை எல்லையற்றது

தமிழரின் அறிவு நுட்பமானது; பரந்து பட்டது.

இதை உலகம் அறிய வழி செய்ய வேண்டும்.

*** (