Followers

Monday, September 18, 2017

இந்த வருடம் ஹஜ் (2017) சில முக்கிய காட்சிகள்!



இந்த வருடம் ஹஜ் (2017) சில முக்கிய காட்சிகள்!

25 லட்சம் பேரையும் சமாளிப்பது என்பது லேசான காரியம் அல்ல... பல மொழிகள், பல கலாசாரங்கள் உடைய மக்கள் ஒன்றாக குழுமும் போது ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பது மிக சிரமம். 90 சதமான மக்களுக்கு அரபி மொழி தெரியாது. தங்கள் இருப்பிடத்திற்கு செல்லவே மிகவும் சிரமப்படுவர். அதிலும் ஹஜ்ஜூக்கு வருபவர்கள் பெரும்பாலும் 60 வயதை தாண்டியவர்களாக இருப்பர். முதுமையில் இந்த காரியங்களை செய்வது அவர்களுக்கு மிகப் பெரும் சவால்.

மேலும் கஃபாவில் வருடாவருடம் மேலே போடப்படும் துணியை மாற்றுவார்கள். கஃபாவின் மேல் நின்று கொண்டு துணியை விரிப்பதை பார்க்கிறோம். இந்த கட்டிடத்திற்கென்று ஏதும் புனிதம் என்று இருந்தால் இவ்வாறு அதன் மேல் நிற்க முடியுமா? இறைவனை வணங்கி வலம் வருவதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். அதற்காக இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்துக்களில் சிலர் சொல்கின்றனர் அதனுள் சிவலிங்கம் இருக்கிறதென்று. :-) அவ்வாறு இருந்தால் சிலையின் மேல் புறம் நிற்க முடியுமா? சிலையை அவமதித்ததாகாதா? நபிகள் நாயகம் காலத்தில் இதே கஃபாவில் 365 சிலைகள் இருந்ததாம். தினம் ஒரு சிலை என்று அன்றைய அரபுகள் வணங்குவார்களாம். நபிகள் நாயகம் தனது தோழர்களோடு அனைத்தையும் அப்புறப்படுத்தினார்.


எனவே இறைவனை வணங்க ஒரு எல்லையாக அந்த கஃபாவை இறைவன் நிர்ணயித்துள்ளான். இறைவனை முதன் முதலாக வணங்குவதற்கு கட்டப்பட்ட பள்ளிவாசல் என்பதால் அந்த இடம் புனிதமாகிறது. கஃபா என்ற கட்டிடத்திற்கு எந்த புனிதமும் இல்லை என்பதை விளங்க வேண்டும். ஒரு சில முஸ்லிம்கள் அந்த கஃபாவின் மேல் கை வைத்துக் கொண்டு அழுது பிரார்த்திக்கின்றனர். இது தவறு. தொழுது கொண்டு இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அல்லது கீழே அமர்ந்து அமைதியாக மனமுருகி பிரார்த்திக்க வேண்டும்.

4 comments:

vara vijay said...

Arabic year(lunar calendar) has only less than 360 days in a year(12*30) then why they had 365 statues instead of 360.

Dr.Anburaj said...

இறைவனை முதன் முதலாக வணங்குவதற்கு கட்டப்பட்ட பள்ளிவாசல் என்பதால் அந்த இடம் புனிதமாகிறது. கஃபா என்ற கட்டிடத்திற்கு எந்த புனிதமும் இல்லை என்பதை விளங்க வேண்டும்.
------------------------------------------------------------------
அந்த இடம் புனிதமாகிறது....... எந்த புனிதமும் இல்லை என்பதை விளங்க வேண்டும்.என்ன லாஜிக் .என்ன விளக்கம். இப்படி எல்லாம் எழுதுவதற்கு மூளையே தேவையில்லை.
-------------------------------------------------------------------------------
ஒரு கருப்புக் கல்லை ஏன் முத்தமிடுகின்றீா்கள் ? அது என்ன பெண்ணின் யோனி vagina போல் இருக்கும் ஒரு உருவத்திற்கும் முத்தம் கொடுக்கப்படுகிறது ? அதற்கும் ஒரு நொண்டிச் சாக்கு சொல்லுங்கள்.கேப்பையில் நெய் வடிகின்றது என்றால் நம்பினால் நம்புங்கள்.

Dr.Anburaj said...

பெண்களின் கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடல்!தமிழ் இலக்கிய அமிா்தம்

வள்ளுவரின் காமத்துப் பாலில் தகையணங்குறுத்தல் அதிகாரத்தில் வரும் குறள் இது:

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம் இம்மூன்றும் உடைத்து (குறள் 1085)


உயிரை எடுக்க வருவதால் யமனோ?

கூர்மையாகப் பார்ப்பதால் கண்ணோ?

மருண்டு பார்ப்பதால் மானோ?

இம்மூன்றின் தன்மையும் இப்பெண்ணின் கண்களில் உள்ளன.

பெண்களின் கண்களுக்குள்ள சக்தியை வள்ளுவர் அழகுற வர்ணித்து விட்டார் ஒரே குறளில்.

அழகிய பெண் ஒருத்தியைப் பார்க்கிறார் புலவர் ஒருவர்.

அவள் கண்ணழகில் அசந்து போகிறார்.விளைவு ஒரு பாடல்.பாடியவர் நமச்சிவாயப் புலவர்.

பாடல் இது தான்:

மஞ்சுமஞ் சுங்கைப் பரராஜ சேகர மன்னன்வெற்பில்

பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள்பகழி

அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்

நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுனது நயனங்களே

(தனிப்பாடல் திரட்டுப் பாடல்)

சொற்கள் கொஞ்சிக் கொஞ்சி விளையாடும் இப்பாடலின் பொருளைப் பார்ப்போமா:

மஞ்சும் - மேகமும்

அஞ்சும் - அஞ்சும்படியான

கை - கொடைக் கையினை உடைய

பரராஜ சேகர மன்னன் வெற்பில் - பரராஜ சேகரன் என்னும் அரசனது மலையில் உள்ள

பஞ்சும் - செம்பஞ்சும்

அஞ்சும் - அஞ்சும்படியான

பதம் - பாதங்களை உடைய

பாவை நல்லாய் - பிரதிமை போன்ற பெண்ணே

படை - சேனையை உடை

வேள் – மன்மனது

பகழி அஞ்சும் அஞ்சும் - பாணங்களும் அஞ்சும் அஞ்சும்

கயல் அஞ்சும் அஞ்சும் - சேல் மீன்களும் அஞ்சும் அஞ்சும்

கடல் அஞ்சும் அஞ்சும் - கடலும் அஞ்சும் அஞ்சும்

நஞ்சும் அஞ்சும் - விஷமும் அஞ்சும்

உனது நயனங்கள் - உனது கண்கள்

வெற்றி வேலோ - வெற்றி வேல்களோ?!!

பாடலில் அஞ்சும் என்ற சொல் ஒன்பது இடங்களில் வருவதோடு மஞ்சு, பஞ்சு, நஞ்சு போன்ற சொற்கள் வேறு இணைந்து வ்ருவதால் சொல்லழகும் பொருளழகும் ஓசை நயமும் கூடி இன்பம் தருகின்றது.

பெண்ணின் கண்ணழகை வர்ணிக்க வந்த புலவரின் பாடலின் உள்ள சொல்லழகில் சொக்கிப் போகிறோம் நாம்!

***

Dr.Anburaj said...


திருக்கோவிலை வலம் வருவது பழமையான இந்து பண்பாடு.
உலகமெங்கும் பள்ளிவாசலை சுற்றி வலம் வரும் பழக்கம் இல்லை.
முஹம்மது பிறக்கும் முன்னா் காபாவை சுற்றிக் வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு.
அது இன்றும் கடைபிடிக்கப்படுகின்றது.

ஆச்சாியமாக இல்லை.

மஹம்மது தான் பிறந்த அரேபியாவின் பல பழக்க வழக்கங்களை இசுலாம் பெயாில் உலக மக்கள் தலையில் கட்டிவிட்டாா்.அரேபிய அடிமைகளாக மாற்றி விட்டாா்.

முஹம்மது முதலில் ஜெருசலேம் நோக்கிதான் தொழுகை நடத்தி வந்தாா். பின்னா் காபாவை நோக்கி தொழுகை செய்ய ஆரம்பித்தாா்.