தவ்ஹீத் ஜமாத்தால்
என்ன மாற்றம் வந்தது என்று கேட்பவர்களுக்காக!
"வாங்கிய வரதட்சணை
ஐம்பதாயிரம் ரூபாயும் 15 சவரன் நகையையும்
திருப்பி தரும் நிகழ்ச்சி"
தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளையின் உறுப்பினரான சகோதரர் முஸ்தபா அவர்கள்
ஆதமங்கலம் புதூர் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமண நேரத்தில் மணமகள் வீட்டில்
வாங்கிய வரதட்சணையை தவறு என்பதை சில காலம் கழித்து உணர்கிறார்.
மனம் திருந்தி அல்லாஹ்விற்கு
பயந்து பெண் வீட்டாரிடமிருந்து வாங்கிய வரதட்சணையை திருப்பித் தர முன் வருகிறார். TNTJ
மாவட்ட தலைவர் சகோதரர் M.ஷாகித் மற்றும் TNTJ வந்தவாசி கிளை தலைவர் சகோதரர் புஹாரி ஷரீப் முன்னிலையில்
"ஐம்பதாயிரம் ரூபாயும் 15 சவரன் நகையையும்"
சகோதரர் முஸ்தபா அவர்கள் திருப்பி மணமகள் தாயாரிடம் வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்.!!
எல்லா புகழும் இறைவனுக்கே!
"பெண்களுக்கு அவர்களின்
மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும்
விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை
உண்ணுங்கள்!"
திருக்குர்ஆன் 4:4
அல்லாஹ்வுக்கும்,
இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்!
இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 3:132
வரதட்சணைக்காக மணமகளை உயிரோடு கொளுத்தி விடும் பல நிகழ்வுகளை ஆங்காங்கே கேள்விப்படுகிறோம். இந்த இளைஞனுக்கு இத்தகைய் மாற்றத்தை ஏற்படுத்தியது எது? கடந்த 30 ஆண்டு காலமாக செய்த ஏகத்துவ பணியின் பலனை சிறிது
சிறிதாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இது போன்ற பல நிகழ்வுகள் தமிழகமெங்கும் நடந்து
வருகின்றன. எல்லா புகழும் இறைவனுக்கே!
1 comment:
விளம்பரம் இன்றிச் செய்ய வேண்டிய ஒழுக்கம். சில மாதங்களுக்கு முன்னால் திருச்செந்தூா் அருகே உள்ள காயல்பட்டணத்தில் ஒரு பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாா். பெண் உடன்குடி என்ற ஊரைச் சோ்ந்தவா் என்று பத்திாிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.நான் படித்தேன்.
எனது ஊாில் சுப்பிரமணியன் என்று ஒருவா் மிகவும் ஏழை குடும்பத்தைச் சோ்ந்தவா். 3 தங்கை.இவா்களுக்கு திருமணம் முடித்த சமயத்தில் இவருக்கு வயது 36 ஆகிவிட்டது.சிறுவயது முதல் மிகக்கடினமான உழைப்பு என்று வியாபாரத்தில் நன்கு முன்னேற்றம் பெற்றிருந்தாா். முதலில் வயது காரணமாக திருமணம் வேண்டாம் என்று சற்று சலிப்புடன் வாழ்ந்து வந்தாா். நான் அவாிடம் சந்நியாசம் அல்லது சம்சாரம் -ஏதேனும் ஒன்றைத் தோ்வு செய். வயது பிந்தினாலும் பொருத்தமான 30 வயதான திருமணம் ஆகாத பெண்கள் கிடைப்பாா்கள். அல்லது ஒரு விதவைப் பெண்ணையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பேசி சம்மதிக்க வைத்தேன். 6 பெண்ணும் 7 வது பையனும் கொண்ட ஒரு ஏழை புரோக்காின் மூத்த பெண்ணை மணந்து கொண்டாா்.வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றது.தனது கொளுந்தியாள்கள் 5 பேருக்கும் 35 பவுண் நகையும் 50000 ரொக்கமும் கொடுத்து சிறப்பாக திருமணம் செய்து அந்த குடும்பத்தையே உயா்த்தி விட்டாா்.
அன்பு பாசம் இருந்தால் எதுவும் நடக்கும்.அன்புக்கும்பாசத்திற்கும் சட்டம் கிடையாது.இன்றும் அதை நினைத்துப் பாா்த்தால் உலகத்தில் உத்தமா்கள் நிறைய போ்கள் இருக்கின்றாா்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Post a Comment