Followers

Saturday, September 30, 2017

காணாமல் போன பெண்ணை மீட்டு கொடுத்த மதுரை மாவட்ட TNTJ

காணாமல் போன பெண்ணை மீட்டு கொடுத்த மதுரை மாவட்ட TNTJ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

கடந்த 27.09.17 அன்று மதுரை மாவட்ட செயலாளருக்கு புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணிடம்  இருந்து கைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் அவர்  மதுரை ரயில்வே ஜங்ஷனில் பர்தா அணிந்த நிலையில் எங்கு செல்வது என தெரியாமல் ஒரு 25 வயது மதிக்கதக்க  முஸ்லிம் பெண் நிற்பதாகவும் அவருக்கு உதவி தேவைப்படுவதாகவும் தனக்கு வந்த தகவலை அவர் தெரிவித்தார். உடனடியாக மாவட்ட நிர்வாகம் ரயில்வே ஜங்ஷனுக்கு அருகாமையில் இருக்கும் கட்ராபாளையம் கிளை தலைவருக்கு தகவல் கொடுத்து அதை உண்மை நிலையை விசாரிக்க சொல்லப்பட்டது. அவரும் உடனடியாக ரயில்வே ஜங்ஷனுக்கு சென்று அது உண்மை தான் என்பதை ஊர்ஜிதம் செய்து தகவல் கொடுத்தார். உடனடியாக மாவட்ட துணை செயலாளர்கள் யூனூஸ்கான், M.J. ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேசி அவரை அருகாமையில் இருந்த கட்ராபாளையம் கிளை தலைவர் ஷாகுல் அவர்களின் அம்மா வீட்டிற்கு அழைத்து சென்று ஷாகுல் அவர்களின் அம்மா மூலமாக விசாரிக்கப்பட்டது.

அதில் அவர் தான்  காரைக்குடிக்கு பக்கத்தில் உள்ள  பள்ளத்தூரை சேர்ந்தவர் எனவும் குடும்ப பிரச்சனையின் காரணமாக தான் வீட்டை விட்டு வந்துவிட்டதாகவும் தகவல் சொன்னார். உடனடியாக அந்த பெண்விட்டாரின் அலைபேசி நம்பர் வாங்கி அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சுப்ரமணியபுரம் மர்கஸுக்கு வர செய்தனர். சுப்ரமணியபுரம் மர்கஸில் மாவட்ட நிர்வாகிகள், சுப்ரமணியபுரம் கிளை நிர்வாகிகள், கட்ராபாளையம் நிர்வாகிகள், ஆகியோர் அந்த பெண்ணின் வீட்டாரிடம் விசாரித்தனர். அதில் அந்த பெண்ணுக்கு சிறிய அளவில் மனநோய் இருப்பதாகவும், கணவர் வீட்டாரிடம் இருந்து விலகி பெற்றோரின் வீட்டில் இருந்து வந்ததாகவும், 27.09.17 மதியம் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாகவம் தகவல் சொன்னார்கள்.

“வேற சில நபர்களிடம் சிக்கியிருந்தால் பாரதூரமான விளைவை சந்தித்திருபார் அல்லாஹ்வின் மகத்தான கிருபையின் மூலமாக தான் உங்களிடம் அல்லாஹ் இவரை சேர்த்துள்ளான்” என கண்கலங்க அழுது தங்கள் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்குமாறும் இனிமேல் நாங்கள் கவனமாக பார்த்து கொள்வோம் என  நம் நிர்வாகிகளிடம் முறையிட்டனர். உடனடியாக அந்த பெண்ணும் அவரிடம் இருந்த 22,000 ரூபாய்க்கு மேல் இருந்த பணமும் அவர் கையில் கொண்டு வந்த நகையும் அவர் போட்டு இருந்த நகையுடனும் அந்த பெண் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த குடும்பத்தினர் கண்ணீர் மல்க நம் நிர்வாகிகளிடம் நன்றியினை தெரிவித்து விட்டு அந்த பெண்ணை அழைத்து சென்றனர்.


அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் !

No comments: