அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்?
கேள்வி : …உங்களுடைய பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். திருக்குர்ஆன் 16:15
என்று இறைவசனம் கூறுகின்றது. ஆனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. சுற்றுவதும் அசைவுகளால் நிகழ்வது தானே. ஆனால் இறைவன் அசையாதிருப்பதற்காக மலைகளை நிறுத்தியுள்ளோம் என இறைவசனத்தில் வருகிறதே! குழப்பமாக உள்ளது. விளக்கம் தரவும்.
-ஜீ. முஹம்மது ஜலீல், நாகப்பட்டிணம்.
பதில் : திருக்குர்ஆன் வசனம் 16:15-க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழாக்கம் தவறானதாகும்.
'உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக' என்று அதற்குப் பொருள் கொள்ள முடியாது.
'உங்களைப் பூமி ஆட்டம் காணச் செய்யாதிருக்க' என்பது தான் அதன் சரியான அர்த்தமாகும்.
நாம் வாழ்கின்ற இப்பூமி பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு அடுக்கும் ஒரே அளவுடையதாகவோ, ஒரே கனம் உடையதாகவோ இல்லை. மேலடுக்கு மென்மையாகவும், கீழடுக்கு கடினமாகவும் உள்ளன.
இவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு உருண்டையை பூமி சுற்றும் வேகத்திற்கு சுற்றினால் மென்மையான பகுதி வேகமாகவும், கடினமான பகுதி குறைந்த வேகத்திலும் சுற்றும். இதனால் மேல் பகுதி மையப் பகுதியுடன் உள்ள ஈர்ப்பு சக்தியை இழந்து விடும். மேலே உள்ள பொருட்கள் பறக்க ஆரம்பித்து விடும்.
ஒரு பலகையின் மீது ஒரு அட்டையை வைத்து அப்பலகையை வேகமாகத் தள்ளினால் பலகைக்கு எதிர்த்திசையில் அட்டை பறந்து வந்து விழுவதை நீங்கள் காணலாம். இரண்டும் சமமான கனமுடையதாக இல்லாததும், இரண்டுக்கும் இடையே இணைப்பு இல்லாததுமே இதற்குக் காரணம்.
பலகைக்கு மேல் வைக்கப்பட்ட அட்டையையும், பலகையையும் இணைக்கும் வகையில் நான்கு ஆணிகளை அறைந்து இணைத்து விட்டு பலகையை எவ்வளவு வேகமாகத் தள்ளிவிட்டாலும் பலகையின் வேகத்திலும், திசையிலும் அட்டையும் சேர்ந்து செல்லும்.
அது போல் தான் பூமியின் மென்மையாக பகுதியையும், கடினமான பகுதியையும் இணைக்கும் வகையில் ஆணிகளைப் போல் மலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதனால் தான் அனைத்து அடுக்குகளும் ஒரே சீராகச் சுழல முடிகிறது.
மலைகள் இல்லாவிட்டால் பூமியின் மேற்பகுதி, பூமியின் கீழ்ப்பகுதிக்கு எதிர்த் திசையிலும், மையப் பகுதியின் பிடிப்பை விட்டு விலகியும் தாறுமாறாகச் சுற்றும். நாமெல்லாம் பந்தாடப்படுவோம். இந்த மாபெரும் அறிவியலைத் தான் அவ்வசனம் கூறுகிறது.
(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)
1 comment:
ஐயா
முஹம்மது ஜலில் தங்களின் கேள்வி சாி.ஆனால் பதில் மகா அபத்தம்.
பொதுவாக தாங்கள் படித்தவராக இருந்தால் ஒரு இயற்பியல் பேராசியாியரை அணுகி விளக்கம் பெற வேண்டும்.திருநெல்வேலியில் நெல்லை முத்து என்பவா் இஸ்ரோவில் பணியாற்றி பணி ஒய்வு பெற்றவா் உள்ளாா்.அவா் போன்றவா்களிடம் கேட்டால் சிறந்த விளக்கம் கிடைக்கும்.கடலுக்குள் கூட பொிய மலைகள் உள்ளது.ஆசிாியா் சொல்வது போல் மலைகள் பள்ளங்களுக்கு அப்படி ஒரு வேலையும் கிடையாது. ஆசிாியா் அளித்த விளக்கம் எனக்கும் ஏற்கும்படியாக இல்லை. இருப்பினும் மீண்டும் இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானி ஒருவாிடம் இது குறித்து ஆலோசனை செய்து மீண்டும் பதிவு செய்கின்றேன்.
விஞாஞானக் கருத்துக்களும் பாிணாமம் அடைந்து வந்து கொண்டிருக்கின்றது. அணுவைபிளக்க முடியாது என்ற விஞ்ஞான உலகம் பின்பு முடியும் என்று பிளந்து பிளந்து பிளந்து போட்டது. இன்று அணுவிஞ்ஞானம் பிரமாண்டமாக வளா்ந்து வருகின்றது.மனிதன் படிப்படியாக சிந்தனை தெளிவு பெற்று வருகின்றான். குரான் காலத்திலும் ஏதோ தஙகளுக்கு கிடைத்த தகவல்களைக் கொண்டு விஞாஞான விசயங்களை ஆராய்ந்து மக்கள் இருந்திருக்க வேண்டும்.குறிப்பாக எகிப்து நாட்டில் சிலை வணக்கம் செய்யும் மக்கள் பிரமாண்டமான அறிவு பெற்று இருந்தாா்கள். எகிப்திய மக்கள் சிலை வணங்கிகளாக இருந்த காலத்தில்தான் உலகம் வியக்கும் பிரமாண்டமான பிரமீடுகளை உருவாக்கினாா்கள். சிவில் பொறியியல் அறிவு அவா்களுக்கு அவ்வளவு இருந்தது.அது மட்டும் அலல் பிணங்களை அழுகாமல் காப்பாற்றும் வேதியியல் அறிவு சிறப்பாக இருந்தது.ஆக மருத்துவம் மற்றும் பலதுறைகளில் அவா்கள் மேதாவிலாசம் பெற்றவா்களாக இருந்தாா்கள்.அரேபிய படையெடுப்பால் எகிப்து பாழாய் போனது.பண்டைய காலத்தில் விஞ்ஞானிகள் இருந்தாா்கள்.அவா்கள் பிழையாக சொன்னாலும் அப்படிச் சொன்னப்பிறகு ஆராய்ச்சி தொடா்ந்து சாியான கருத்து வந்து விடும். தவறு என்றால்யாரையும் இழிவு படுத்தக் கூடாது.ஆராய்ச்சி முழுவடிவம் பெறாத போது அரைகுறை கருத்துக்கள் வெளியாகும்.பின்னா் அவைகள் முழுமைபெறும்.குரானில் காலத்திற்கு பொருந்தாக பல கருத்துக்கள் உள்ன.அவைகள் இழிவு அல்ல.பழையன கழிவதும் புதியன சோ்வதும் வாழும் வகைதான்.
Post a Comment