Followers

Monday, September 11, 2017

தண்ணீரை மிச்சப்படுத்துவோம்!

சிலர் தொழுகைக்கு தயாராகும் போது அளவுக்கதிகமாக தண்ணீரை வீணாக்குவதை பார்க்கிறோம். பெரும் மாநாடு, ஹஜ், உம்ரா போன்ற நெருக்கமான இடங்களில் மற்றவர்களின் தேவை மற்றும் நேரத்தை அறிந்து சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

இந்த முதியவர் ஒரு குவளை தண்ணீரில் முகம் கை கால்களை கழுவிக் கொள்வதைப் பாருங்கள். இதனை நாமும் நம் வாழ்வில் பின் பற்றி மற்றவர்களுக்கு இடைஞ்சல் தராமல் நடந்து கொள்வோம்.


குளியலறைக்குச் சென்று குழாயை திறந்து வைத்துக்கொண்டு குளிப்பதால் எந்தளவு நீரை பயன்படுத்தி குளிக்கிறோம் என்பதை அறியாமல் இருந்து வருகிறோம். நபி(ஸல்) அவர்கள் குளிப் பதற்காக எந்தளவு நீரை பயன்படுத்தியுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.
அபூஜஃபர்(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஜாபிர்(ரழி) அவர்கள் கூறினார்கள். உன் தந்தையின் சகோதரரின் புதல்வர் வந்து பெருந் துடக்கிற்காகக் குளிப்பது எப்படி? என்று கேட்டார். அதற்கு நான் நபி(ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் அள்ளி அதை தமது தலையில் ஊற்றுவார்கள்; பின்னர் உடல் முழுவதும் ஊற்று வார்கள் என்று சொன்னேன். அதற்கு ஹசன் அவர் கள் நான் அதிகமான முடியுடையவனாக இருக்கின் றேனே (மூன்று கைத் தண்ணீர் போதாதே) என்று கேட்டார். அதற்கு நான் நபி(ஸல்) அவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள் (அவர்களுக்கே அது போதுமானதாயிருந்ததே) என்று கூறினேன். நூல்: புகாரீ : 256


நீளமாக முடி வைத்திருந்த நபி(ஸல்) அவர்களே கடமையான குளிப்பின்போது தலையை கழுவு வதற்கு சுமார் மூன்று கை நிறையத் தண்ணீரையே பயன்படுத்தியுள்ளார்களே எனும்போது, தண்ணீர் பற்றாக் குறையின்போதும் கூட நாம் தலையை கழுவுவதற்கு மட்டுமே பல லிட்டர் தண்ணீரை பயன்படுத்துவது முறைதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

No comments: