Followers

Friday, September 29, 2017

இன்று ஆயுதபூஜை எனும் ஒரு பண்டிகை

கண்ணியமிக்க இஸ்லாமியர்களே!

இன்று ஆயுதபூஜை எனும் ஒரு பண்டிகை இந்து மக்களால் அனுசரிக்கப்படுகிறது. "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற நம்பிக்கையில் அவர்கள் தங்களின் தொழில் சார்ந்த ஆயுதம்,வாகனம்,கருவிகள் போன்றவைகளை சுத்தம் செய்து பூஜிப்பார்கள்.அது அவர்களின் நம்பிக்கை அதில் நமக்கேதும் குழப்பமில்லை, அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு!

ஆனால் இஸ்லாமியர் சிலரும் தங்களின் கார்,வேன்,பைக் போன்ற வாகனங்களுக்கு இதுபோன்று பூஜை செய்வது அறியாமையின் உச்சம்? காரணம், இறைவனின் நாட்டப்படிதான் எதுவும் நடக்கும் என்பது இறை நம்பிக்கையில் பிரதானமானது. அதை சிதைக்கும் விதமாகவே இச்செயல் அமைந்திருப்பதை கவணிக்க வேண்டும்.

"உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்"
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ
اللّٰهُ لَـنَا هُوَ مَوْلٰٮنَا ‌ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏ 
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
(அல்குர்ஆன் : 9:51)

நபி மொழி
"யார் பிற மத கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கிறாரோ! அவரும் அவரைச்சார்ந்தவரே"! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

ஆதலால் இதுபோன்ற காரியங்களில் இஸ்லாமியர்கள் ஈடுபட வேண்டாம் என வேண்டுகிறேன்!

இந்து மக்களுடன் கலந்து தான் நாம் வாழ்ந்து வருகிறோம், வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பலம்!

இறை நம்பிக்கையில் இறுக்மாய் இருப்போம்!
இந்தியர்கள் என்பதால் நெருக்கமாய் இருப்போம்!!

அன்புடன்...
அப்பாஸ்(எ) ஷாஜஹான்
இராஜகிரி
தஞ்சை மாவட்டம்.


No comments: