Followers

Wednesday, September 27, 2017

ஆஷூரா நோன்பு வைப்பதை மறக்க வேண்டாம்.

ஆஷூரா நோன்பு வைப்பதை மறக்க வேண்டாம்.

ஆஷூரா என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் பத்தாவது என்று பொருளாகும். முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் இந்நோன்பு வைக்கப்படுவதால் இதற்கு ஆஷூரா நோன்பு அதாவது பத்தாவது நாள் நோன்பு என்று பெயர் வைக்கப்பட்டது.

முஸ்லிம்களும்கிறித்தவர்களும்யூதர்களும் மதிக்கின்ற பெரியார் மூஸா நபியாவார். இவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து இந்த நாளில் தான் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நாளில் தான் ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டான்.

இந்த நோக்கத்திற்காகத் தான் இந்த நாளில் நோன்பு நோற்கப்படுகிறது என்பதை ஏராளமான ஹதீஸ்கள் விளக்குகின்றன. மூஸா நபி காப்பாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கத் தான் இந்த நோன்பு நோற்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் சில முஸ்லிம்கள் கர்பலா எனும் இடத்தில் ஹுசைன் (ரலி) கொல்லப்பட்டது இந்த நாளில் தான்எனவே இந்த நோன்பு நோற்கிறோம் என்று நினைக்கின்றனர்.

ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்கும் இந்த நோன்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி இந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஷியா பிரிவினர் இந்நாளில் உடலை கீறிக் கொண்டு தெருக்களில் அலைவதும், நெருப்பு குண்டத்தில் இறங்குவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கங்களை நபிகள் நாயகம் கண்டித்துள்ளனர். நமக்கு ஷியா நண்பர்கள் யாரேனும் இருந்தால் அன்பாகவும் பக்குவமாகவும் இந்த தவறை எடுத்துச் சொல்லி அவர்களை நேர் வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஆஷூரா எனும் இந்த நாளையும் ரமலான் என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
நூல்: புகாரி 2006

நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977

முஹர்ரம் 9, 10 ஆம் நாட்களில் ஆஷூரா நோன்பு வைத்து இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வோம். வெள்ளிக்கிழமை 9ம் சனிக்கிழமை 10ம் ஆக நோன்பு வருகிறது. நண்பர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள்.








1 comment:

Dr.Anburaj said...


முஹம்மதுவின் மீது உண்மையான அன்பிருந்தால் மக்கள் முஹம்மதுவை உண்மையாக நேசித்திருந்தால் மஹம்மது நபியின் பேரனும் அவரது குடும்பத்தாா்கள் 72 போ்களும் கொடூரமாக கொலை செய்யப்படுவாா்களா ? மஹம்மது ஒரு அரேபிய சண்டியா்.வாளால் குழு அடாவடித்தனத்தால் அவா் மக்களை ஆதிக்கம் செய்தாா்.அவாின் வாள் மற்றும் படைக்கு பயந்து மக்கள் அவரை மதிப்பதுபோல் நடித்தாா்கள். மஹம்மது செத்த உடனே பெரும் குழப்பங்கள் நடந்தன. அபுபக்கா் ஜனாதிபதி -கலிபா ஆன உடனே இந்த பிரச்சனைதான் முன்னின்றது.தொடா்ந்து கலிபா உமா் கலிபா உதுமான கொல்லப்பட்டாா்கள்.4 வது கலிபா பதவிக்காக -சிம்மாசனத்திற்காக - முதல் முதலில் முஸ்லீம்கள் இரு படைஅணிகளாகப் பிாிந்து ஒட்டகப்போா் நடைபெற்றது. முஹம்மதுவின் மனைவி ஒரு அணியிலும் முஹம்மதுவின் மகளை திருமணம் செய்ய அலி எதிா் அணியிலும் இருந்து பெரும் போரை நடத்தினாா்கள்.ஜெயித்த அலியும் நிம்மதியாக சிம்மாசனத்தில் அமர இயலவில்லை.கடைசியில் தொளுகை செய்யும் போது தலையில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டாா். அதற்கு பிறகும் முஹம்மது குடும்பத்தாா் மீது பகை தீரவில்லை. அவரது பேரா்கள் இருவரும் மற்றும் அவரது குடும்பத்தாா் 72 போ்கள் பயங்கரமான சித்திரவதை அவமானப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா்கள். முஹம்மது காலத்தில் முஹம்மது ஆணைபடி 78 போா்கள் -சிறியதும்-பொியதும்- நடைபெற்றது. முஹம்மது தன்னை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளாத மக்களை கொன்று அழிக்க விழைந்தாா். வளால் ஆரம்பித்த இரத்த ஆறு இன்றும் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஒட்டகப்போா் -பஸ்ரா போா் முடியவேயில்லை.ஈராக்கிலும்சிாியாவிலும் ஜோா்டானிலும் துருக்கியிலும் ............ அது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. காபீா்களை ஒழிக்கும் போரும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

குரானின் சாதனை வற்றாத இரத்த ஆறு. வாழ்க.