செல்ஃபி மோகத்தால் ஒரு மாணவன் உயிரிழப்பு!
பெங்களூரு: கர்நாடகாவில், என்.சி.சி., பயிற்சிக்கு சென்ற
கல்லூரி மாணவர்கள், சக மாணவர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிர் இழந்ததை சிறிது கூட கவனிக்காமல், ' செல்பி' எடுப்பதில்
ஆர்வத்துடன் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து 60 கி.மீ., தொலைவில் ராமநகர்
தாலுகா உள்ளது. இங்குள்ள ராவகுடுலு என்ற இடத்தில் குந்தன்ஜெயா கோவில் உள்ளது. இந்த
கோவில் அருகே கடந்த ஞாயிற்று கிழமை, நேஷனல் கல்லூரியின் என்.சி.சி., பிரிவு மாணவர்கள்
பயிற்சிக்காக சென்று இருந்தனர். அவர்கள் அங்கிருந்த ஒரு குளம் அருகே நின்று, மொபைல் போன் மூலம், செல்பி எடுத்து
கொண்டனர். அப்போது, விஸ்வாஸ் என்ற மாணவர் அவர்களை விட்டு பிரிந்து குளத்தின் மைய பகுதிக்கு சென்று
விட்டார். மற்ற மாணவர்கள் செல்பி எடுப்பதில் ஆர்வத்துடன் இருக்க, மாணவர் விஸ்வாஸ்
குளத்து நீரில் மூழ்கி இறந்தார். அவர்கள் குளத்து நீரில் தத்தளிக்கும் காட்சி கூட, செல்பி போட்டோவில்
பதிவாகியுள்ளது. ஆனால், மற்ற மாணவர்கள் இதை கவனிக்கவில்லை.
செல்பி எடுத்த பிறகே, மாணவர் நிவாஸ் நிலை குறித்து மற்ற மாணவர்களுக்கு தெரிய
வந்தது. தங்கள் தவறை மறைக்க, மாணவர் நிவாஸ்
கால் தவறி குளத்தில் விழுந்து இறந்து விட்டார் என கூறினர். எனினும், கல்லூரியில் இருந்த பேராசிரியர்கள், மாணவர்களின் செல்பி போட்டோவை வைத்து
உண்மையை கண்டுபிடித்தனர். கர்நாடகாவில் தற்போது இந்த மாணவர் மரணம் பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Dina malar
26-09-2017
1 comment:
மது புகை போல் இன்று கைபேசியும் வாடஸ்அப் மக்களை பாழாக்கி வருகின்றது.
Post a Comment