Followers

Sunday, September 17, 2017

வீட்டுப் பணி பெண்ணை தன் பெண்ணாக பாவிக்கும் சவுதி!

20 வருடம் பக்கவாதத்தால்  பாதிக்கப்பட்டுள்ள  வீட்டுப்பணியாளரை, சகோதரி  போல் பாதுகாக்கும்  அரேபிய  முதலாளி! உண்மைச்  சம்பவம், அவசியம்  படியுங்கள் !!
--------------------------

கனவுகளோடு விமானம் ஏறுகின்றார் எத்தியோப்பியா பெண். சவுதி வந்து சேர்ந்த சில நாட்களில் உடல் நிலை முடியாமல் போகிறது. முதலாளி நல்ல முறையில் கவனித்தாலும், இன்னும் மோசமாகி பக்கவாதம் ஏற்பட்டு இரு கால்கள் மற்றும் ஒரு கை செயல் இழந்து விடுகின்றது.

இவரின் முதலாளி தன் நண்பர்களிடம் உதவி கேட்டு, மருத்துவ செலவுகளை கவனித்து வருகின்றார். அவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். உதவி செய்தவர்களில் அல் சயூபியின் குடும்பத்தினரும் ஒருவர்.

 நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை மேலும் இந்தப் பெண்ணின் விசா காலமும் முடியப்போகிறது.  முதலாளிக்கோ அதை மீண்டும் புதுப்பிக்கும் எண்ணம் இல்லை.

மருத்துவமனையில் இருந்த இந்த சகோதரி, முதலாளியின் நண்பர்களில் ஒருவரான அல் சயூபி மற்றும் அவரது குடும்பத்தினரிடம், "நான் இறந்தாலும் பரவாயில்லை... இங்கேயே இறந்து விடுகின்றேன். என்னுடைய விசாவை நீங்கள் புதுப்பித்து, உங்கள் பொறுப்பில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று கெஞ்சவே, அல் சயூபி தன் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து விட்டு, அந்தப் பெண்ணை தங்களின் பொறுப்பில் ஏற்றுக்கொள்கின்றனர்.

அல் சயூபியின் குடும்பத்தினர் தாம் இன்று வரை அந்தப் பெண்ணின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்கின்றனர். அல் சயூபியின் மனைவி தான் இவரைக் குளிப்பாட்டுவது, உணவு ஊட்டுவது  மற்றும் அவருக்குண்டான தனிப்பட்ட உதவிகளை, சொந்த சகோதரி போல் செய்து வருகின்றார்.

பொதுவாக நாம் இது போன்ற செயல்களை  விரும்புவதில்லை, தேவையில்லாத செயலாகத் தான் கருதுவோம் ஆனால் எந்தவித தொடர்பும் இல்லாமல் இந்தப் பெண்ணுக்கு உதவி செய்து வரும் அல் சயூபியின் குடும்பத்தினரோ இதை சிறந்த இறை அருளாகவே கருதுகின்றனர்.

இந்தப் பெண்ணை பாதுகாத்து வருவதால் எங்களின் செல்வம் பல மடங்காக பெருகிவிட்டது. வாடகை வீட்டில் வசித்து வந்த அல் சயூபியின் குடும்பத்தினர் இந்தப் பெண் வந்தவுடன் மிகுந்த செல்வம் பெற்று இருந்த அபார்ட்மெண்ட்டின் மொத்த கட்டிடத்தையே வாங்கிவிட்டதாக அல் சயூபி கூறுகின்றார்.

வீட்டு வேலைப் பணியாளர்களை கொடுமைப் படுத்தி வரும் முதலாளிகளுக்கிடையே, அல் சயூபி குடும்பத்தினரின் செயல் கலங்கரை  விளக்கமாக ஒளிர்கிறது .

யாருக்கு  எதன்மூலம் கண்ணியம்/செல்வம்  வழங்கவேண்டும்  என்பது  இறைவன்  மட்டுமே அறிந்த  நியதி


1 comment:

Dr.Anburaj said...


எல்லா மதங்களும் அற்புதமான ஆண்களையும் பெண்களையும் உலகிற்கு அளித்துள்ளது சுவாமி

விவேகானந்தா். Every religion has produced men and women of most exalted characters -

ஆப்பிாிக்கா கண்டத்தின் மிகவும் நாகரீகம் குறைந்த பகுதியில் வாழும் மக்களில் கூட பிறா்

பசிபொறுக்காத புண்ணியவான்கள் இருப்பாா்கள். நல்ல பதிவு.நன்று.பாராட்டுக்கள்.