Followers

Monday, September 25, 2017

மோடி கார்ட்டூன் வரைந்த ராஜ் தாக்கரே!


மோடி கார்ட்டூன் வரைந்த ராஜ் தாக்கரே!

மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த விழாவில், மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர், ராஜ் தாக்கரே, தன்னுடைய அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தை அறிமுகம் செய்து வைத்தார். அந்த பேஸ்புக் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி குறித்த கார்ட்டூனை வெளியிட்ட ராஜ் தாக்கரே, அதை, தானே வரைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த கார்ட்டூனில், இந்தியாவுக்குள் நுழையும் நிழலுலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் கைகளை கயிற்றால் கட்டி, பாகிஸ்தானை நோக்கி, பிரதமர் மோடி இழுப்பது போன்றும், ஆனால், பிரதமர் மோடியை, இந்தியாவுக்குள், தாவூத் இழுத்து வருவது போன்றும் வரையப்பட்டுள்ளது. இந்த கார்ட்டூன், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர்
26-09-2017

இந்துத்வா ஆள் வரைந்ததால் இதோடு போனது. வேறு யாராவது வரைந்திருந்தால் பக்தாஸ் இதுவரை 'தேச விரோதி' பட்டம் கொடுத்திருப்பர்.

தாவூத் இப்றாஹீமை பொருத்த வரை அவன் ஒரு ஸ்லீப்பர் செல். மார்க்கப் பற்று ஏதும் இன்றி எப்போதும் இந்தி நடிகைகளின் பின்னால் சுற்றிக் கொண்டு நடிகர்களை மிரட்டி பணம் பறித்து வரும் நிழல் உலக தாதா. கள்ள கடத்தலும் செய்து வருபவன். இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒருவனை இஸ்லாமிய வட்டத்துக்குள் கொண்டு வருவதே இந்துத்வாவினர்தான். பாஜக பிரமுகர்கள் பலர் தாவூத் இப்றாஹீமுடன் இன்று வரை தொடர்பில் உள்ளதை முன்பே பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன.







No comments: