Followers

Sunday, April 05, 2015

திருக்குறளை அரபியில் மொழி பெயர்த்த ஜாகிர் ஹூசைன்!



திருவள்ளுவரால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய கலை மற்றும் கலாச்சார மையம் சார்பில் தம்மாமில் நடைபெற்ற கவிஞர்கள் மாநாட்டில் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் வெளியிடப்பட்டது. இந்த வியத்தகு சாதனையை நிகழ்த்தியிருப்பது மதரசாவில் கல்வி பயின்ற ஜாஹிர் ஹுசைன் பாகவி. தமிழகத்தின் கடைகோடி பகுதியிலிருக்கும் குமரி மாவட்டத்திலுள்ள தக்கலையை சார்ந்த இவர், சென்னை பல்கலைக் கழகத்தின் அரபுத்துறையின் தலைவராக பணியாற்றுகிறார்.

இவ்வெளியீடு குறித்து தெரிவித்த கவிஞர் ஜாஹிர் ஹுசைன் பாகவி, "திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது. நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம்" என்று கூறியுள்ளார்.

தகவல் உதவி
இந்நேரம்.காம்

தமிழரின் பொக்கிஷமாக விளங்கும் திருக்குறள் இனி அரபுகளின் கைகளிலும் தவழும். எல்லோருக்கும் பொதுவாக இறைவன் என்றே பல இடங்களில் கடவுளைப் பற்றி வள்ளுவர் கூறுகிறார். முன்பு தமிழர்களுக்கு கொடுத்த இறை வேதமாகக் கூட திருக்குறள் இருக்கலாம். இறைவனே அறிந்தவன்.

இஸ்லாமிய பார்வையில் தேவ மொழி என்று எதுவும் கிடையாது. உலகில் உள்ள அனைத்து மூல மொழிகளையும் தானே படைத்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகின்றான். எனவே புனித மொழி என்று எதனையும் நாம் வகைப்படுத்த முடியாது. தாய் மொழிப் பற்று இயற்கையாகவே எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அது மொழி வெறியாக மாறி விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சவுதியில் பல பள்ளி வாசல்களில் வெள்ளிக் கிழமை தொழுகையில் செய்யப்படும் பிரசங்கத்தை தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்து ஒலி வாங்கி மூலமாக பலரும் கேட்கும் வண்ணம் ஒலிபரப்பு செய்கின்றனர். மலையாளம் உருது போன்ற மொழிகளுக்கும் இடம் தருகின்றனர். அனைத்து மொழிகளையும் படைத்தவன் இறைவன்தான் என்ற உண்மையை உணர்ந்ததால்தான் சவுதி பள்ளிகளில் வேறு மொழிகளுக்கும் இடம் கிடைக்கின்றது.



----------------------------------------------------------


"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

- திருக்குறள் 5

பொருள்:

'இருளில் சேர்த்து விடும் இரு வினைகளையும் தவிர்த்து இறைவன் இட்ட கட்டளைப் படி தனது வாழ்வை அமைத்துக் கொள்வோரே புகழோடு வாழ்ந்தவராவார்'

அது என்ன இருளில் சேர்க்கும் இரு வினைகள்? நன்மை தீமையை சொல்கிறாரா வள்ளுவர்? இல்லை. ஏனெனில் இரண்டு வினைகளுமே நம்மை இருளில் சேர்த்து விடும் என்கிறார். நன்மையான காரியங்களை செய்பவரை எப்படி இருளில் கொண்டு சேர்பதாக வள்ளுவர் சொல்வார்? எனவே நன்மை தீமையை இங்கு வள்ளுவர் கூறவில்லை என்பதை அறியலாம். ஆனால் பல விளக்கவுரைகளில் நன்மை தீமை என்றே 'இருளில் நேர்க்கும் இரு வினைகளுக்கு' விளக்கம் அளித்துள்ளனர். கலைஞரும் சாலமன் பாப்பையாவும் கூட நன்மை தீமை என்றே மொழி பெயர்த்துள்ளனர்.

வள்ளுவர் சொன்ன அந்த இரு வினைகள் என்ன என்று பார்போம்.

ஒன்று ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனோடு சேர்ந்து வரும் இறைவன் விதித்த தீமையை அடிப்படையாக கொண்ட விதி. மற்றொன்று ஒரு மனிதன் பிறந்ததற்கு பிறகு இந்த பூமியில் அவன் இறக்கும் வரை செய்து வரும் தீய வினைகள். அதாவது தீய செயல்கள். இந்த இரண்டு தீய செயல்களையும் எவன் ஒருவன் வென்று விடுகின்றானோ அவனே பாக்கியசாலி என்கிறார் வள்ளுவர்.

இஸ்லாமும் இந்த இரு வினைகளைப் பற்றி பேசுகிறது. மனிதன் இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பு தாயின் வயிற்றில் ஒரு வானவர் மூலமாக அவனது அனைத்து காரியங்களும் பதியப்படுவதாக நபிகள் நாயகம் அறிவித்துள்ளார். நல்லவனா? தீயவனா? என்பது இங்கு தீர்மானிக்கப்படுகிறது. இது ஒரு வினை. தாயின் வயிற்றிலிருந்து அவன் வெளியேறியவுடன் இந்த உலகில் நன்மை தீமை இரண்டும் இறை வேதங்கள் மூலம் கொடுக்கப்படுகிறது. இந்த இறை வேதங்களை ஆராய்ந்து இறைவன் இட்ட கட்டளைப்படி நன்மை செய்து இறப்பவனுக்கு சொர்கம் தருவதாகவும், இறை கட்டளைகளை மீறுபவனுக்கு நரக வேதனை தருவதாகவும் குர்ஆன் கூறுகிறது. இது இரண்டாவது தீய வினை. இங்கும் இரண்டு தீய வினைகளைப் பார்கிறோம்.

1 comment:

C.Sugumar said...

திருக்குறளைப்படிக்கும் அரேபியன் ?குரானை தூரவிலக்கி வைப்பான். பிறன்மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்று சமூக ஒற்றுமைக்கு வழிகாட்டும் திருக்குறள் அரேபியாவிற்கு தேவை.பாவம் யுத்தம் செய்.ஆண்களைக் கொல்.பெண்களை குமுஸ்் பெண்ணாக்கி வைப்பாட்டியாக வைத்தக் கொள் என்று உபதேசிக்கும் குரான் எங்கே ? திருக்குறளின் முன் குரான் ஒளியிழந்து போகும்