
கனடாவில் உள்ள மிஸ்ஸிகா வில் உள்ள சய்யிதா கதீஜா சென்டர் பல வருடங்களாக மனித நேய பணிகளை செய்து வருகிறது. சென்ற பிப்ரவரி 21 ந் தேதி மிகப் பெரிய கூட்டம் ஒன்றைக் கூட்டியது இந்த தன்னார்வ அமைப்பு. இளவரசி மார்கரெட் புற்று நோய் மருத்துவ மனை மற்றும் எடோபிகோக் மருத்துவமனை இந்த இரண்டுக்குமான நன்கொடை வசூலிப்புக்காக இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இனம் மொழி நாடு பார்க்காது முஸ்லிம்கள் மனித நேயப் பணியை ஆற்றிட வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது. கடுமையான பனிப் பொழிவையும் பொருட்படுத்தாது அந்த அரங்கம் அனைத்தையும் மக்கள் வெள்ளம் ஆட் கொண்டிருந்தது. சென்ற வருடம் கதீஜா சென்டர் இஸ்லாமியரிடமிருந்து வசூலித்த தொகையானது ஒரு மில்லியன் டாலராகும். இமாம் டாக்டர் ஹமீது அவர்களால் 2005 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு பல சமூகங்களோடு கலந்து பல நலத் திட்ட பணிகளை செயல்படுத்த தொடங்கி இன்று மிக உயரத்தை எட்டியுள்ளது.
தொழுவது, நோன்பு வைப்பது மட்டும் ஒரு முஸ்லிமின் கடமையல்ல. இன மதம் பார்காமல் தேவையுடைய மக்களை தேடிச் சென்று உதவி செய்வதும் இஸ்லாமிய கடமைகளில் ஒன்று என்பதை கதீஜா சென்டர் நிரூபித்து வருகிறது. இது போன்று நாமும் மனித நேய பணிகளை அதிகமதிகம் செய்ய உறுதி பூணுவோம்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
12-03-2015
3 comments:
Al hamthulilah
Al hamthulilah
பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் கைர
Post a Comment