//இந்து மத வேதத்துல சாதிபேதம் இருக்கிற ஒரேயொரு வரியை காட்டுங்க எசமான்.... இராஜாராம் மோகன்ராய்ல ஆரம்பிச்சு, விவேகானந்தர், காந்திக்கு அப்புறமா, அம்பேத்கரையும் தாண்டி இப்போ நானும் கேக்கேன்.....//
-Ram nivas
இதற்கு சற்று விரிவான பதிலையே காப்பி பேஸ்டாக தருகிறேன் :-)
இந்து மதம் என்று இன்று முன்னிருத்தப்படுகிற வேதங்களை ஒத்துக்கொள்ளும் எந்த தத்துவப்பிரிவும் மனிதனுக்கு எதிரானது. பெண்களையும் உள்ளடக்கியே! இதில் யோனி-லிங்க வழிபாடுகள், பெண்களை சக்தியாகவும், தெய்வமாகவும் சித்தரிக்கும் வழிபாடுகள் போன்றவை வேத மதங்களுக்கு எதிரானதாக உண்மையில் தோன்றிய தந்திரா வகை தத்துவங்களை சேர்ந்தவை. அதே போன்று வேத மதங்களை எதிர்த்தே 2300 ஆண்டுகளுக்கு முன்னேயே புத்தரும் தோன்றி இந்தத் துணைக்கண்டமெங்கும் மனித விரோத வேத மதங்களை (இன்றைய இந்து மதமாக முன் வைக்கப்படும் உள்ளீட்டை) வீழ்த்தி அப்புறப்படுத்தினார். இதற்காக அவர் மேற்கொண்ட விவாதங்கள், எதிர்கொண்ட சதிகள் போன்றவைகளை பெளத்த- சமண தத்துவங்களில் பரிச்சயம் கொள்ள முனையும் யாவரும் அறியலாம். தென்னிந்தியாவில் தோன்றி இருந்த உலகாயத்தை முன்வைத்த தத்துவப்பிரிவுகள் மிக எளிதாக பெளத்தத்தோடு இணங்கி, பரவிவந்த வேத அடிப்படை கருத்துக்களை எதிர்கொண்டதற்கான குரலை திருக்குறளிலும், மற்ற காப்பியங்களிலும் காணலாம். புத்தரின் இந்த வெற்றியைத் தொடர்ந்தே கர்ம காண்டமாகிய வேதமதங்கள் யாகம் போன்ற சுரண்டல் வழிகளை குறைத்துக்கொண்டன. சாதி என்ற வருண அமைப்பின் மீதான அதன் பிடி தகர்ந்துபோனது.
புத்த மத்தின் தாக்கங்களாலேயே ஞானமார்க்கங்கள் தளிர்விடத்துவங்கி உபநிடதங்கள் தோன்ற ஆரம்பித்தன. பெளத்த நெறிகளை வேராகவும் தந்திரா போன்ற வழிபாட்டு முறைகளை தனது உடலாகவும் கொண்ட சன்மதங்களை ‘பிரசன்ன பெளத்தராகிய‘ சங்கரர் ஸ்தாபித்து அவற்றின் மூலம் வேத மேலாண்மையை மீளக்கொண்ர்ந்தார். அதற்காக பிராமணீயம் அவருக்கு தீராத கடன்பட்டிருக்கிறது. வேத தத்துவங்களை அதன் மனித விரோத தன்மைக்காக புத்தர் தொடங்கி (புத்தருக்கு முன்பாகவே செயினர், சார்வாகர்கள், சாக்கியம், லோகாயத்தின் பலபிரிவுகளும் இந்த எதிர்ப்பைச் செய்திருந்தாலும்) பல நூற்றாண்டுகளாக பல ஞானிகளாலும், சித்தர்களாலும் எதிர்க்கப்பட்ட உழைக்கும் சமூக விரோத, ஆணாதிக்கச் சிந்தனைகள் என அடையாளங்காட்டப்பட்ட ஒன்றை அம்பேத்காரும், பெரியாரும் ஒழிக்க நினைத்தது, முயன்றது ஏதோ நேற்று நடந்த சமூக மாற்றமோ, ஒரு சாதிக்கு எதிரானதோ அல்ல. பாரத தேசத்திலே புத்தமதம் ஜீவகாருண்யம், சர்வஜன சமத்துவம் என்ற இரண்டு தர்மங்களையும் நெடுந்தூரம் ஊன்றும் படி செய்தது என்கிறார் பாரதி (பாரதியின் பகவத்கீதை). சாஸ்திரங்கள், இதிகாசங்களை முற்றாகப் புறக்கணித்து உபநிடதங்களின் மேலாக சாதி/ வருண மறுப்பைத் தொடர நினைத்த ஆரியசமாஜம் போன்ற செயல்பாடுகளும் வேதக்கொடுமைகளை ஒழிக்கக் கிளைத்தவையே. இந்த சீர்திருத்தங்களும் ஏனைய வேத மதங்களின் உள்ளேயே நடந்த மற்ற சீர்த்திருத்தங்களை (இராமனுஜர் போன்ற) போல வருணாஸ்ரமத்தையும், மனுவையும் தாங்கி நிற்கும் பகுதியினரால் வெற்றிகொள்ளப்பட்டன. இப்போது இரண்டு கேள்விகள் இருக்கின்றன. 1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? 2. இன்றைய இந்து மதமாகக் காட்டப்படுகிற நிறுவனத்துக்கு (அதைக்காப்பற்ற முனைகிறவ்ர்களுக்கு) வருணாசிரமத்தை, மனுநீதியை காப்புற்றும் முனைப்பும், அதை வலியுறுத்தும் வேலைத்திட்டமும் இருக்கிறதா?இவைகளைப் பார்ப்போம்.
1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? வேதத்தை மூலப்புத்தகமாகக் கொண்ட பல சாஸ்திரங்களும், சமயப்புத்தகங்களும் வருணாசிரமத்தை, சாதி அடிமைமுறையை, பலவேறு சாதிகளின் கடமைகளை பிராமணர்களின் மேலாதிக்கத்தைச் சொல்லுவன. இதில் குறிப்பாக மனுஸ்மிருதியைக் குறிப்பிடலாம். அது சூத்திரர்களின் வாழ்விடங்கள் மண்ணால் கட்டப்பட்ட்டிருக்கவேண்டும், உலோகங்களை பாத்திரங்களாக பயன் படுத்தக்கூடாது, மண்ணிற்கு அடியில் உள்ள கிழங்குகள் , வேர்களையே சாப்பிட வேண்டும், சூத்திரர்கள், பஞ்சமர்கள் இடுப்புக்கு மேல் உடையணியத் தடை, அத்தியாவசியத்தின் காரணமாக ஊருக்குள் நடக்கும் போது கைக்கொள்ளவெண்டியமுறைகள், பொது நீர்நிலைகளை பயன்படுத்த, கல்வி கற்க, இடம்பெயர செய்யப்படவேண்டிய தடைகள், அவை மீறப்பட்டால் கொடுக்கப்படவேண்டிய தண்டனைகள் போன்ற பலவற்றை விரிவாகப் பேசுகிறது. அது தவிர பெண்ணடிமைத்தனம், பால்யவிவாகம், பால்யவிவாகம் செய்யாவிட்டால் ஏற்படக்கூடிய பாதகங்கள், சதி (உடன் கட்டை ஏறல்) போன்ற கருத்துக்களையும் சொல்கிறது. இது தவிர பிராமணர்களுக்கான சலுகைகள், சிறப்புகள் போன்றவையும் குறிப்பிடப்படுகின்றன.
மனுவின் இந்த சட்டப்புத்தகம் மிக முக்கியமான ஸ்மிருதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்மிருதிகள் என்பவை நினைவில் வைக்கப்பட்டது என்று பொருள் படுபவை. இவை யுகங்கள் தோறும் மாறக்கூடியவை என்றாலும் யுகங்கள் பல நூற்றாண்டுகளைக் கொண்டதால் நடைமுறையில் அவை மாறாத தன்மைகொண்டவையாகவே இருக்கின்றன. மனு ஸ்மிருதி பல நூற்றாண்டுகளாக செல்வாக்கு செலுத்தி வருவது அப்படியே. மேலும் ஸ்ருதி (ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டவை என்று பொருள் கொள்ளலாம்; ஸ்ருதிகள் என்றும் மாறத்தன்மை கொண்டவை) என்றழைக்கப்படும் வேதங்களையும் இந்த ஸ்மிருதிகளையும் எந்தக்காரணம் கொண்டும் கேள்விக்குட்படுத்தக்கூடாது என்பது மனுவின் சட்டம் (மனு ஸ்மிருதி (பாகம் 2 சூத்திரம் 10).
இந்நிலையில் மனு உலகத் தொடக்கம் பற்றிய பகுதியிலேயே மனிதனின் உருவாக்கத்தைப்பற்றி பேசும் போது“But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet.” (மனு ஸ்மிருதி பாகம் 2 சூத்திரம் 31) இப்படியாகக் குறிப்பிடுகிறார். இதில் நான் குறிப்பிடவிரும்புவது மனிதனைப் படைக்கும் போதே அவனை நால் வருணங்களாய் படைக்கிறார் என்பதைத்தான். செய்யும் தொழிலைக்கொண்டே வருணங்கள் பிரிக்கப்பட்டன என்று விளக்கமளிக்கும் ‘சமத்துவபுர ஜெண்டில்மேன்கள்‘, நவீன பெளராணிகர்கள் இதை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கலாம். இதை வருணாஸ்ரமத்துக்கான துவக்கப்புள்ளி என்பதால் (இந்தப்புத்தகத்தில்) குறிப்பிடுகிறேன். மற்ற சாதியக் கடமைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகள், பெண்களுக்கு எதிரான சதித்திட்டங்களை வாசகர்கள் படித்தறிய வேண்டுகிறேன். ஆங்கில மனுஸ்மிருதிக்கான சுட்டி கீழே உள்ளது; தமிழில் திரிலோக சீத்தாரம் மொழிபெயர்த்த (தமிழினி வெளியீடு என்று நினைக்கிறேன்) மனுஸ்மிருதியும் கிடைக்கிறது. இதைத்தவிர வேறு சில பதிப்புகளும் கிடைக்கின்றன. சரி மனுஸ்மிருதி மாறக்கூடியது. இடைக்காலத்தில் தோன்றியிருக்கலாம், மூலப்புத்தகமான வேதத்தில் இதற்கு ஆதாரம் உள்ளதா என்று நண்பர்கள் வினாவலாம். வேதங்களில் பழமையானதும், முதன்மையானதுமாகக் கருதப்படுவது ரிக். அதன்கண் உள்ள புருச சூக்தத்தில் (PURUSHA SUKTA, Verse 13) காணப்படுவதே மனுவினால் எடுத்தாளப்பட்டுள்ளது. 13 வது சம்ஹிதை இது.
brAhmaNo asya mukhamAseet | bAhoo rAjanya: krta: |
ooru tadasya yad vaishya | padbhyAm shoodro ajAyata || 12 ||
(asya) His (mukham) mouth (Aseet) became (brAhmaNa:)
the Brahmin, (bAhoo) his arms (krta:) were made (rAjanya:)
Kings. (yad) what were(asya ooru) his thighs, (tad) they were
made into (vaishya:) the merchants, (padbhyAm) and from his feet
(shoodro) were the servants (ajAyata) born.
அதாவது மாறக்கூடிய ஸ்மிருதியும், மாறாத ஸ்ருதியும் (வேதமும்) மனிதனை பிறப்பினால் பிரிக்கவே செய்கின்றன. மனிதனின் பலவேறு தொழிகளின் பேரில் இப்படி தோற்றம் பெற்றதாக யாரும் இதை ‘திரிக்க‘ முடியாது. ஏனெனில் உலகம் தோற்றம் பெறுகையிலேயே மனிதன் இப்படியான சாதிகளாக தோற்றம் பெறுவதாக மனுவும், புருஷ சூக்தமும் சொல்லுகின்றன. ஆனால் அறிவியலை நம்புகிறவர்கள் பரிணாமவளர்ச்சியில் மனிதனாகி, காட்டாளாகி, சமூகமாய் மாறுகையில் தான் இந்த வேலைஅடிப்படை பிரிவினைகள் தோன்றியிருக்கமுடியும் என்று அறிவார்கள். ஆனால் புருஷ சூக்தம் மற்றும் மனுவின் நோக்கம் மனிதனை அவனது சாதி அடிப்படையிலான பிறப்பே மிக இயல்பானதாகவும், கடவுளின் திட்டமாகவும், மாற்ற முடியாததாகவும் காட்டவும் அதனடிப்படையில் சாதியச் சுரண்டலை காலங்காலமாக நிலைநிறுத்தவும்தான் என்பதை கொஞ்சம் யோசிக்கத் தெரிந்த, நேர்மையான அணுகுமுறை கொண்ட எவரும் புரிந்துகொள்ள முடியும். இதனால் தான் வர்ணாசிரமத்தை இத்தனை ஆழமாகவும், ஆண்டுகளாகவும் இந்திய சமூகத்தில் காப்பாற்ற முடிந்தது. சமயச் சீர்திருத்தக்காரர்களால் (இராமானுஜர் போன்ற) நிலையான எந்த சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்குக் காரணமும் அவர்கள் வருணாசிரமத்தின் வேராகிய வேதத்தை மறுக்காததுதான்; ஒழிக்காததுதான். சரி, இந்த வேதமும், மனுவும் ஒழியட்டும். பதிலாக இன்று இந்துக்களின் புனித நூலாக காட்டப்படும் பகவத் கீதையாவது சுத்தமாக இருக்கிறதா என்றால் அதுவும் வருணாஸ்ரமத்தை வலியுறுத்துவதாயும், சாதிக்கலப்பு நடந்துவிடக்கூடாதென பதைப்பதாகவும் இருக்கிறது. பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலேயே பிறப்பதாக பெண்களைப்பற்றிய கருத்தை விதைக்கிறது. இது தொடர்பான ஜெயமோகனின் திண்ணை கட்டுரைகளும், அதைத்தொடர்ந்து நான் எனது பதிவில் எழுதிய கீதையின் பெயரில் சில கட்டுரைகளும் படிக்கத் தக்கன. தவிர வேதமும், மனுவும் சொல்லும் சம்ஸ்கிருத மேலாதிக்கத்தையும், மற்ற நீச பாசைகளைப்பற்றிய குறிப்புகளையும் அக்னிஹோத்ரம் இராமாஜ தத்தாசாரியார் இப்படிக் குறிப்பிடுகிறார்:
வைணவத்திலும் சரி… சைவத்திலும் சரி… தமிழ் இப்படி தள்ளிவைக்கப் பட்டதற்கு என்ன காரணம்?இதற்கு வேதங்களில் இருந்துதான் பதில் கிடைக்கிறது.
சுக்லயஜுர் வேதத்தில் ஒரு மந்த்ரம் பாருங்கள்.
“தஸ்மாது ப்ராம்மணேன
நம்லேச்சித வை
நம அபபாஷித வை…”
இந்த சின்ன வரிகள் தேக்கி வைத்திருக்கும் கருத்துகள் பெரியவை.
அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இதில் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நல்லவனை தேவன் என்றும் கெட்டவனை அசுரன் என்றும் வேதம் சொல்லியிருக்கிறது என்று. இதன்படி இந்த போரில் சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள். மிலேச்சபாஷை… அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள். எனவே, தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர்களின் கெட்ட பாஷை. மிலேச்ச பாஷை அதாவது தெய்வத் தன்மை யற்ற பாஷை… என்கிறது வேதம். இப்படிப்பட்ட வேதத்தை எளிமைப்படுத்துவதற்காக அவதரித்த மநுவும் தன் பங்குக்கு சொல்கிறார்.
“…தயோ ரேவ அந்ததம் கிரியோஹா
தேவ நதியோஹா யதந்தரம்
தம்தேவ நிர்மிதம் தேசம்
ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா…”
அதாவது… விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்… கங்கை, யமுனை நதிகள் பாயும்… இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும்தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத்தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும். அதனால்… இந்த பகுதியை தவிர… மற்ற பகுதிகள் தெய்வீகத்தன்மை இல்லாதவை….
2. இன்றைய இந்து மதமாகக் காட்டப்படுகிற நிறுவனத்துக்கு வருணாசிரமத்தை, மனுநீதியை காப்புற்றும் முனைப்பும், அதை வலியுறுத்தும் வேலைத்திட்டமும் இருக்கிறதா? இந்தகேள்விதான் முதல் கேள்வியைவிட முக்கியமானது. இதற்கான பதிலே இந்துமதத்தை அழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என சொல்லவைக்கிறது. இந்து மதமென்ற இன்றைய நிறுவனம் பலம் பெறும்போது அது வருணாசிரமத்தை, சாதிய படிநிலையை, பெண் அடிமைத்தனத்தை கண்டிப்பாக முன்னெடுக்கும், வலியுறுத்தும். வருணாசிரமத்தை நடைமுறைப்படுத்த அது எந்த வழிமுறையையும் கையாளத் தயங்காது என்பது பலமுறை நிரூபனமான ஒன்று. சமூக வரலாற்றை கூர்ந்து நோக்கும் எவரும் இன்றைய நவீன உலகில் கூட இதைச் செய்யத்தயங்காத இந்துத்துவ சக்திகளின் செய்லபாடுகளை அறியலாம். இது எங்கெங்கே எந்த விதத்தில் நடந்தது? பட்டியல் போட்டுக்காட்டுக என்று நண்பர்கள் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அவர்களும் தங்கள் அக்கறையின் பேரில் கொஞ்சம் உழைக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனப்படுத்தப்பட்ட இந்து மதத்துக்கு வருணாசிரமத்தை தூக்கிப்பிடிக்க வேண்டிய கடமையும் இருந்தது, அதற்காக மறைந்த சந்திரசேகர சரஸ்வதியின் தலைமையில் அது இந்திய துணைக்கண்ட (பாகிஸ்தானை உள்ளடக்கிய) அளவில் பாரிய முயற்சியை முன்னெடுத்தது என்பதை இங்கு சொல்லவிரும்புகிறேன். நேரு இந்தியாவின் பிரதமராக இருந்த காரணத்தால் தான் அது நடக்காமல் போனது. அது மட்டும் நடந்திருந்தால் சுதந்திர இந்தியாவில் வருணாசிரமம் சட்டபூர்வமாக (இன்று மட்டுமென்ன வாழுகிறது!) ஆக்கப்பட்டு சாதியச் சுரண்டலும் பெண்ணடிமைத்தனமும் செய்யபட்டிருக்கும். இதை வெகு முனைப்போடு செய்ய இந்திய அளவில் தமது திறனனைத்தையும் பயன்படுத்தியதால் தான் அவரை ‘மகா பெரியவர்‘ என்று அழைக்கிறார்கள் போலும். இதை யாரோ திகவில் இருந்தவரோ, பெரியார் அடிப்பொடியோ சொல்லவில்லை. வருணாசிரமத்தை சட்டப்பூர்வமாக்க மகாபெரியவரின் ஆக்ஞையை ஏற்று உழைத்த அக்னிஹோத்ரம் இராமாஜ தத்தாசாரியார் நக்கீரனில் எழுதிய ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற கட்டுரைத் தொடரிலேயே இதைப் பதிவு செய்துள்ளார். (அது இப்போது நூலாக வெளிவந்துள்ளது). வருணாசிரத்தை சட்டப்பூர்வமாக்க ஆடுதுறையில் நள்ளிரவில் அந்தணர்களைக் கூட்டி மீட்டிங் போட்டு செயல்திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் ‘மகா பெரியவர்‘. தாத்தாச்சாரியார் எழுதுகிறார்…
இப்போது மகாபெரியவரின் மீட்டிங்குக்கு வருவோம். இப்படியாக ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு, வர்ணாஸ்ரம தர்மங்களை சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள் போடப்பட்டிருந்தன. நம் தேசம் ஸ்வராஜ்யம் (சுதந்திரம்) அடைய இருந்த நேரத்தில்… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Parliamentary deligation ஒன்று நமது தேசத்துக்கு வந்தது. அதாவது… நமது தேஸத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு அது பற்றிய விவாதங்கள் நடத்துவதற்காக… எப்படி கொடுக்கலாம் என்று முடிவு பண்ணுவதற்காக… பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இங்கே வந்தது. அதுதான் Parliamentary deligation இந்த குழு வந்த காலகட்டத்தில்தான் அந்த ஆடுதுறை கூட்டம்.
“ஏற்கெனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண்ணிட்டா… இன்னும் என்னெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல அட்டாக் பண்ணப் போறாளோ… அதனால… இப்ப வந்திருக்குற அந்த டெலிகேஷன்கிட்ட… சனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு நாம சொல்லியாகணும்… என்ன சொல்றேள்?….”-என மகாபெரியவர் கேட்க… சிஷ்யாளோ… ‘ஸ்வாமி… இப்படியெல்லாம் அவாளை கேட்கறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல. அவா செய்தா செய்யட்டும்… சில விஷயங்களை மாத்தறது நல்லதுதானே…’ என்றனர். ஆனால்… சங்கராச்சாரியார் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தார். உட்கார்ந்திருந்த என்னிடம்…`தாத்தாச்சாரீ… நீரும் நானும் தான் மிச்சம்’ என்றார்.
என்ன ஸ்வாமீ?… என்றேன்.
“நான் சொன்னதை யாரும் ஏத்துக்கல. ஆனா இதை விடக்கூடாது. நம் சம்ப்ரதாயத்தை காப்பாத்தணும். இதுக்காக அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மைதான் செலக்ட் பண்ணியிருக்கேன்…” என்றார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை… `நீர் இதுக்காக டெல்லிவரை போக வேண்டியிருக்கும்…’ அதுக்கு முன்னால… டெலிகேஷனுக்கு நம் அபிப்பிராயத்தை தந்தி அடிக்கணும்.
அந்த ராத்திரி 11 மணிப்பொழுதில் தந்தி வாசகங்களை தயார் பண்ணினோம். ஒன்றா… இரண்டா?… நூறு தந்திகள். அந்தக் காலத்தில் ஒரு தந்தி அடிக்க வேண்டுமென்றால், ரொம்ப கஷ்டம். ஏனென்றால், பெரிய பெரிய நகரங்களில் தான் தந்தி ஆபீஸ் இருக்கும். ஒரு தந்தி என்றால் அடித்து விடலாம். நூறு தந்திகள். ஒரே இடத்திலிருந்து கொடுத்ததாக இருக்கக் கூடாது. தேஸத்தின் பல பகுதிகளிலிருந்தும் அனுப்பவேண்டும். `பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷ்டாங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக் கூடாது’ என்பதுதான் தந்தி வாசகம். இதை தேசத்தின் பல இடங்களிலிருந்தும் டெல்லிக்கு அனுப்பினோம். 100 தந்திகள்… அதுவும் வெவ்வேறு இடத்திலிருந்து. செலவை மகாபெரியவரே ஏற்றுக் கொண்டார். நான் உதவி செய்தேன். தந்தியடித்த பிறகு, மறுபடியும் என்னை அழைத்த மகாபெரியவர், `நாம அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ரதாயத்தை பத்தி பிரஸ்தாபிச்சு சனாதன மதத்துக்கு ஸ்வதந்த்ரம் கேக்கணும்… அதை நீர்தான் பண்ணணும்’ என்றார்.
அப்போது… `பார்லிமெண்ட் டெலிகேஷன்’ மெம்பர்கள் பத்திரிகைக் கார்யாலயங் களுக்கெல்லாம் விஜயம் செய்து… ஸ்வராஜ்யம் பற்றி தேஸம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் சுதந்திர எழுச்சியைப் பல பத்திரிகைகள் தட்டி எழுப்பியபடி இருந்தன. அந்த வகையில்… சென்னைக்கு வந்தது பார்லிமெண்ட் டெலிகேஷன். அன்று தேஸத்தின் மிக முக்கிய பத்திரிகையான `தி ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகை ஆபீசுக்கு டெலிகேஷன் வந்திருந்தது. இதையறிந்த மகாபெரியவர்… உடனே என்னை அழைத்து அவர்களைப் போய் பார்க்கச் சொன்னார். நானும் `ஹிண்டு’ பத்திரிகை ஆபீசுக்குப் போனேன். அப்போது… `ஹிண்டு’வின் எடிட்டராக இருந்த சிறீ.கே. சீனிவாஸன் என்னை பார்லிமெண்டரி டெலிகேஷனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியென்றால் `இவர் மதாச்சாரியார்களின் பிரதிநிதி’ என்று.
டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதிரியாரும் நானும் பரஸ்பர வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம்.
நான் முதலில் 100 தந்தி விடயத்தை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். ‘oh’ என ஞாபகப்படுத்திக் கொண்ட சோரன்சன்… ‘We meet tonight’ என்றார்.
அன்று ராத்திரி பிரபல அட்வகேட் ஒருவரின் வீட்டில் இருந்த சோரன்சன்னை சந்தித்தேன். பத்து மணி ராத்திரிப் பொழுதில் எனக்கும், சோரன்சன்னுக்கும் நடந்த ஆங்கில உரையாடலை இங்கே தருகிறேன்.
சோரன்சன்: Welcome. What do you want?
நான்: We lives in India. But havings not any rights to follow our religion. We must need freedom to follow our “Dharma”.
சோரன்சன்: Oh… it is very serious matter… give me a memorandam and meet me in Delhi என்றார்.
நான் உடனே கும்பகோணம் விரைந்து மகாபெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன். சில அட்வகேட்கள் சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு… “வர்ணாஸ்ரம தர்மத்துக்கு முழு சுதந்திரம் வேண்டும்’’ என்ற மெமோரண்டத்தைத் தயார் பண்ணினோம். டெல்லிக்கு போய் நேரில் கொடுக்க இருந்தோம். அதற்குள் அந்த டெலிகேஷன் மெம்பர் அஸ்ஸாம் போய் அங்கே தேஸ நிலைமையை ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன்… மெமோரண்டத்தை அஸ்ஸாமுக்கே ஒரு காப்பி முதலில் அனுப்பி வைத்துவிட்டோம். பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவராவின் வீடு, பகல் 11 மணிக்கு காங்கிரஸ் தலைவர்களான அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் டெலிகேஷனை சந்திக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் பார்த்துவிட்டுப் போனவுடன், நான் சில அட்வகேட்களுடன் டெலிகேஷனை சந்தித்தேன்.
`வர்ணாசிரம மதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை வேண்டும்’ என்ற மெமோரண்டத்தைப் பார்லிமெண்ட்ரி டெலிகேஷனிடம் நேரடியாகவே கொடுத்தோம். வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள்.
இதன் பிறகு… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet deligation வந்தது. அந்த குழுவினருக்கும் தந்தியடித்தோம். மெமோரண்டம் கொடுத்தோம். அவர்களோ “உங்கள் அரசியல் சாசனத்தை உங்கள் தலைவர்கள்தான் உருவாக்கப் போகிறார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே பாருங்கள்’’ என சொல்லி விட்டார்கள். சரி… என சொல்லிவிட்டு நம் தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம். அவர்… மெமோரண்டத்தைப் பார்த்துவிட்டு… “சனாதன மதத்தைப்பற்றியும் மடங்களைப்பற்றியும் நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால், மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள். அவரவர்களுக்கும் அவரவர்களுடைய சிஷ்யர்களோடுதான் பழக்கம். வெளி உலகத்தோடு மக்களோடு உறவே இல்லை. மக்களின் பொதுவான பணிக்கோ, மதப் பணிக்கோ அவர்கள் முன்வரவில்லை.
முக்கியமாக ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும், மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குப் பணி செய்ய மதாச்சாரியார்களை வரச் சொல்லுங்கள்…’’ என்று கண்டிப்பாக என்னிடம் கூறினார் பட்டேல். நான்… `பழைய காலத்தில் அப்படி இருக்கலாம். புது பாரத தேசம் உருவாவதால் அவர்கள் பொதுப் பணிகளை நிறைவேற்றுவார்கள்’ என சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்… பட்டேல் ஒப்புக் கொள்ளவில்லை. இதை மகாபெரியவரிடம் சொன்னபோது… `ஆமாம் இது முழுவதும் உண்மைதான்’ என்றார். அடுத்து பண்டிட் நேருஜியை பார்த்தேன். ……………
ஏதோ நேரு உறுதியாக இருந்ததால் பிழைத்தோம். அப்புறமும் இந்து மடங்களின் உரிமைகளைக் காக்க (அதாவது வருணாசிரமத்தை அவை வலியுறுத்த இருக்கும் சுதந்திரத்தை, அதிகாரத்தை காக்க) அவர் நாடளாவிய மடாதிபதிகளின் கூட்டமொன்றைக் கூட்டினார். ஆனால் அந்த நேரத்தில் அவ்வளவு விழித்துக்கொள்ளாத வடநாட்டைச் சேர்ந்த மற்ற மடாதிபதிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. இப்படி நிறைவேறாமல் போன வருணாசிரமத்தை மீண்டும் சட்டப்பூர்வமாக நிறைவேற்றத்தான் பஜகவும் RSS உயிரைக்கொடுத்து (எடுத்து) உழைக்கின்றன.
உயிரைக் கொடுத்து எடுத்து உழைக்கின்றன***
நண்பர்களே இந்தவிசயமாக குறைந்தது 2500 வருடங்களாக வேலைகள் நடக்கின்றன. கண்ணைத் திறந்து பார்க்கவேண்டியதுதான் தேவை. அதே சமயம் இந்து சமயத்தில் அப்படி எதுவுமே இல்லை; அதைப்பற்றிய தவறான பிரச்சாரங்கள் பெரியாரின் சாதிய துவேசம் என்று சாதிப்பது புதியவர்களின் கண்ணைக்கட்டும் உத்திகளுள் ஒன்று. பெரியாருக்கு சாதித் துவேசம்? அம்பேத்காருக்கு? பாரதிக்கு? தயானந்த சரஸ்வதிக்கு (ஆர்யசமாஜம்)? சித்தர்களுக்கு? புத்தருக்கு? இன்னும் இன்னும் சமநீதி வேண்டிய போரில் கொல்லப்பட்ட உயிரோடு எரிக்கப்பட்ட, கழுவில் ஏற்றப்பட்ட ஆயிரக்கணக்கான பெயரற்ற, முகமற்றவர்களுக்கு? ***
சுட்டிகள்:
http://www.hindubook...riti/index.html
http://www.ramanuja....ukta-intro.html
http://balasthoguppu.blogspot.com/
நன்றி: http://www.yarl.com/forum3/index.php?/topic/15430-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE/
3 comments:
நான் ஏன் ஹிந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை தழுவினேன்?
கங்கை கரை தோட்டத்திலே, கன்னிப்பெண்கள் கூட்டத்திலே, கண்ணன் நடுவினிலே மெய்மறந்து கிடந்தான். அவனை சுற்றியிருந்த பொம்மனாட்டிகளெல்லாம் "கண்ணன் என்னை கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான், பூச்சரங்கள் சூடி தந்தான்" என்று கண்ணனின் புகழை பாடிக்கொண்டிருந்தனர்.
நான் நேராக கண்ணனிடம் சென்றேன். "கண்ணா நாட்டிலே அநீதி தாண்டவமாடுது. வந்து தருமயுத்தம் செய்" என்றேன். எனது சூம்பிப் போன நெஞ்சையும் காஞ்சி போன காம்பையும் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. "உன்னை யாரடா உள்ளே விட்டது பறப்பயலே, வெளியே போ" என்றான்.
"என்னிடமென்ன பொன்னழகு மேனியா இருக்கு, பூச்சரங்கள் சூடித்தருவதற்கு?. நான் வணங்கும் கடவுளே என்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டுகிறான். பொம்மனாட்டிகளோடு கூத்தடிக்கிறான். எனக்கெதிராக நால்வர்ண தருமத்தை படைத்த இவன், எனக்காக தருமயுத்தம் செய்வானா?. இவனெல்லாம் ஒரு கடவுளா?. அடச்சே" என நொந்து போய் வெளியே வந்தேன். வெளியே வந்ததும், அல்லாஹு அக்பர் எனும் பாங்கு சத்தம் கேட்டது. சரி, கண்ணன்தான் என்னை கைவிட்டுவிட்டான், இந்த அல்லா சாமி என்ன சொல்லுது பார்ப்போம் என்று பள்ளிவாசலுக்கு போனேன்.
அங்கிருந்த இமாம் பாய் என்னைக் கண்டதும் ஆரத்தழுவி "சகோதரா உள்ளே வா" என்றார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாய் போய்விட்டது. ஐயாயிரம் வருடங்களாக, நாங்கள் கோயிலுக்கு போனால் "உள்ளே வராதே, வெளியே நில், நீ தீண்டத்தகாதவன்" என்று உயர்ஜாதியினர் சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த இமாம், என்னை சகோதரா என்று நெஞ்சோடு அணைத்து வரவேற்கிறாரே என பிரமித்து போய் உள்ளே சென்றேன்.
அல்லா சாமி எங்கே என்று சுற்றி முற்றி பள்ளிவாசலில் தேடினேன். நான் தேடுவதைப் பார்த்த இமாம் "என்ன விஷயம்?" என்றார். அல்லா சாமிய பாக்கனும் பாய் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே "இந்த உலகில் அல்லாஹ்வை பார்க்க முடியாது, மறுமை நாளில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வை பார்க்கலாம், அப்படித்தான் எங்கள் திருக்குரான் சொல்கிறது" என்றார்.
"என்னங்க பாய், கண்ணனிடம் போனா வெளியே போடா பறப்பயலேனு சொல்லி விரட்டிவிட்டான். சரி அல்லா சாமியிடம் நம்ம கஷ்டத்த சொல்லி அழலாம்னு வந்தா, கண்ணுக்கே தெரியாத சாமிகிட்ட எப்படிங்க பாய் பேசறது?" என்றேன். உடனே பாய் திருக்குரானை எனது கையில் கொடுத்து "இதுதான் மனிதனுக்கு அல்லாஹ் தந்த மொபைல் போன். இதன் மூலம் அல்லாஹ்வோடு நீ பேசலாம், அல்லாஹ் உன்னுடன் பேசுவான். படித்துப் பார்" என்றார்.
திருக்குரானை படித்தேன். படித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். நேராக மீண்டும் கங்கை கரைத்தோட்டம் சென்றேன். அங்கே ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலையெல்லாம் திருடிக்கொண்டு மரத்தின் மேல் கண்ணன் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்து பெண்களெல்லாம் "நந்த லாலா, நந்த லாலா, புடவையைக் கொடு நந்த லாலா" என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். "புடவை வேண்டுமானால் ஆற்றைவிட்டு வெளியே வா, வாங்கிக் கொள்" என்று கண்ணன் அவர்களை மேலும் சீண்டிக்கொண்டிருந்தான்.
நேராக கண்ணனிடம் சென்றேன், அவனை நிமிர்ந்து பார்த்தேன்.
"நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்
நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கு ஏறிடுவாய்
அஞ்ஞான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்
அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்
அந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்"
என்று சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் பள்ளிவாசல் நோக்கி நடந்தேன். நன்றி.
அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும் மிகப் பொிய மூடநம்பிக்கை. கியாமத் நாள் என்று ஒரு நாள் சாத்தியம் அல்ல.ஒரு மனநோயாளியின் செக்குமாட்டுத்தனம்.
பழைய நம்பிக்கையை மீண்டும்உறுதி செய்வதுதான் செக்குமாட்டுத்தனம். கியாமத் நாள் உண்டு எனில் மனித இனம் தோன்றிய அன்றே சட்ட திட்டங்கள் முழுமையான வடிவில் புத்தகமாக அச்சடித்து அவனுக்கு படிக்க கொடுத்து மனதில் பதித்து இருக்க வேண்டும். எந்த சட்டப்படி கியாமத் நடக்கும் என்பதற்கு விளக்கம் தருவாா் யாரும் இல்லையே ?
கதை நல்லா இருக்கு. ஆனால் கோர்வையா இல்ல. நிறைய தப்பு இருக்கு. அதை பிறகு பார்ப்போம்.
கேள்விக்கு பதில் எங்கே இருக்கு உங்க பதிவில்?
Post a Comment