Followers

Friday, June 19, 2015

ரமலானை முன்னிட்டு பாகிஸ்தானில் இந்தியர்கள் விடுதலை!




இஸ்லாமபாத் : இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்று தொடங்குவதை முன்னிட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 113 மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. இஸ்லாமாபாத்திலிருந்து தங்களுக்கு இது குறித்த உத்தரவு வந்துள்ளதாக கூறிய மலிர் சிறையின் துணை கண்காணிப்பாளர் முகமது ஹூசைன் செஹ்டோ, புனிதமான ரமலான் மாதத்தை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிக்குமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 113 மீனவர்களும் லாகூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பின்னர் வாகா எல்லையில் வைத்து அவர்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறையில் இருந்து வெளியே வந்த இந்திய மீனவர்களுக்கு பாகிஸ்தான் மீனவர்கள் சால்வையை பரிசாக தந்து அனுப்பி வைத்தனர்.

------------------------------------------------

KARACHI: Pakistan today released 113 Indian fishermen lodged in a jail here in a goodwill gesture, days after Prime Minister Narendra Modi called up his Pakistani counterpart Nawaz Sharif to greet him on the holy month of Ramzan.

"We have got orders from Islamabad that the fishermen have been released from Malir jail as a goodwill gesture on the occasion of the holy month of Ramzan starting tomorrow," deputy jail superintendent Muhammad Hussain Sehto told PTI.

NDTV
june, 18, 2015

1 comment:

பெரியார் said...

ஜின்னா சாஹிப் இருந்திருந்தால், திராவிட நாடு உருவாகியிருக்கும்:

ஜனாப். ஜின்னா சாஹிபை நான் பாரட்டுவதற்கு காரணம் தந்தை பெரியார். உருது பேசத்தெரியாத பெரியாரும் தமிழ் பேசத்தெரியாத ஜின்னா சாஹிபும் இந்திய விடுதலை அரசியலில் நெருங்கிய நன்பர்களயிருந்தனர் எனும் விஷயம் பார்ப்பன ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. ஆனால் பெரியார்-ஜின்னாவுக்கிடையே இருந்த நட்பின் ஆதாரங்களையும் கடிதங்களையும் திராவிடர் கழகம் அழியாமல் இன்றும் பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எதனால் இந்த நட்பு உருவானது என்பதை சிறிது கவனிப்போம்.

திராவிட நாட்டை உருவாக்க ஒரு தலை சிறந்த சட்ட வல்லுனரும் ஆங்கிலேயரால் மதிக்கப்படும் தலை சிறந்த அரசியல் தலைவரின் உதவியும் பெரியாருக்கு தேவைப்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில், இந்தியாவில் இந்த இரண்டு தகுதிகளும் கொண்ட ஒரே தலைவராக ஜனாப்.ஜின்னா சாஹிப் மட்டுமே இருந்தார்.

எந்த அளவுக்கு என்றால், விக்டோரியா மகாராணியின் குடும்ப சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகளுக்கு ஜின்னாவின் தீர்வை கிட்டத்தட்ட அனைத்து குடும்ப உறுப்பினரும் முழு மனதாக ஏற்றனர். வின்ஸ்டன் சர்ச்சிலும் விக்டோரியா மகாராணியும் ஜின்னா ஒருவரை சந்திக்க மட்டுமே வாசல்வரை வந்து வரவேற்றனர், வழியனுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால்தான் ஸ்டைலாக சூட்டு கோட்டு அணிந்து, கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுருட்டை ஊதிய வண்ணம் கத்தியின்றி ரத்தமின்றி ஜின்னாவால் பாக்கிஸ்தான் எனும் நாட்டை உருவாக்க முடிந்தது.

ஒரு நாட்டை உருவாக்க வேண்டுமானால், ஐ.நா சபையால் அது அங்கீகரிக்கப்பட வேண்டும். ஐ.நா வரை எடுத்துச் செல்ல வேண்டுமானால் சட்டம், பொருளாதாரம், ராணுவம் ஆகிய துறைகளில் நுண்ணறிவும் அதை செயல்படுத்தும் அறிவும், ஆற்றலும் ஒரு தலைவனுக்கு தேவை. இந்த திறமைகளெல்லாம் இல்லாத காரணத்தினால்தான், கிட்டத்தட்ட 20 வருடங்கள் தமிழ் ஈழத்தை ஒரு தனி மாகாணமாக நடத்தியும் அதனை ஒரு தனி நாடாக மாற்றமுடியாமல், நீ தலைவனா நான் தலைவனா என அடித்துக்கொண்டு விடுதலைப்புலிகள் செத்தனர்.

ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு என்பது போல், பதினைந்தே நாட்களுக்குள் சிங்களன் தமிழீழத்தை ஒட்டுமொத்தமாக அடித்து நொறுக்கி அந்த மண்ணின் மைந்தர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி விட்டான். இது தவிர, பாரதமாதா எனும் சூன்யக்கிழவி சிங்களனுடன் சேர்ந்து தமிழனுக்கு செய்த துரோகம் சொல்லி மாளாது.

ஆகையால்தான், சரியான அடிப்படையில்லாமல் தனித்தமிழ்நாட்டை உருவாக்க முனைந்தால் அது எந்த ஜென்மத்திலும் நடக்காது என்பதை நன்குணர்ந்த பெரியார், அண்ணத்துரை, அம்பேத்கர், முத்தையா செட்டியார், முதலியார் போன்ற தலைவர்கள் ஜின்னா எனும் அரசியல் மேதையை 1940 முதல் பல முறை சந்தித்து திராவிட நாட்டைப் பற்றி ஆலோசனை செய்தனர்.

ஆனால் பாக்கிஸ்தானை உருவாக்குதில் ஜின்னா முழு மூச்சாக இருந்ததால், திராவிட நாட்டுக்கு சட்ட ஆலோசனை தர அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இருந்த போதிலும், அவர் எப்படி பாக்கிஸ்தானை உருவாக்குகிறார் என்பதை பெரியாருடன் இருந்த அனைத்து திராவிட தலைவர்களும் நுண்ணிப்பாக கவனித்து வந்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில், தென்னிந்தியா முழுவதும் Madras Presidency எனும் அமைப்பின் கீழ் இருந்தது. அதைத்தான் திராவிட நாடு என தந்தை பெரியார் அழைத்தார் என்பதை நாம் மறந்து விடலாகாது.

கடைசியாக 1944ல் பாக்கிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்படும், அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என இங்கிலாந்து ராணியும், சர்ச்சிலும் ஜின்னாவுக்கு உறுதிமொழி தந்தனர். அப்பொழுது மெட்ராசில் மீண்டும் ஒரு முறை பெரியாருடன் ஜின்னாவை அனைத்து திராவிடத் தலைவர்களும் சந்தித்து திராவிட நாடு பற்றி பேசினர். அப்பொழுது ஜின்னா அவர்களிடம், பாக்கிஸ்தான் விடுதலைக்குப் பிறகு திராவிட நாட்டை உருவாக்க தனது முழு ஒத்துழைப்பையும் தருவதாக வாக்குறுதி அளித்தார்.

ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக இருந்தது. பாக்கிஸ்தான் விடுதலையடைந்த ஒரே வருடத்தில் 1948ல் உடல் நலம் குன்றி ஜின்னா மரணமடைந்தார். ஜின்னாவின் மரணத்தை கேள்விப்பட்ட தந்தை பெரியார் "அய்யோ, எனது இஸ்லாமிய சகோதரன் போய்விட்டானே" என்று வாய்விட்டு கதறி அழுதார்.

ஆம். ஜின்னா மட்டும் ஒரு சில வருடங்கள் உயிரோடு இருந்திருந்தால், இன்று நாம் திராவிட நாட்டில் இதைவிட பலமடங்கு நன்றாக வாழ்ந்திருப்போம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

References:
1. The Historic Meeting of Ambedkar, Jinnah and Periyar:
https://indianhistoriography.wordpress.com/2009/07/27/the-historic-meeting-of-ambedkar-jinnah-and-periyar/

2. File:Periyar with Jinnah and Ambedkar.JPG
http://commons.wikimedia.org/wiki/File:Periyar_with_Jinnah_and_Ambedkar.JPG

3. Dravida Nadu – Jinnah, Periyar and Ambedkar photo:
http://en.wikipedia.org/wiki/Dravida_Nadu