Followers

Monday, June 01, 2015

சமாதி வழிபாட்டாளர்களான பரேலவியினர் மோடியை சந்தித்தனர்!



உத்தர பிரதேசம் பரேலவி, அஜ்மீர், டெல்லி போன்ற நகரங்களில் செயல்பட்டு வரும் பரேலவிகள் சில நாட்களுக்கு முன்பு நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர். சமாதி வழிபாட்டாளர்களான இந்த பரேலவிகள் நரேந்திர மோடியிடம் சில கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அது என்ன கோரிக்கை? சிலவற்றைப் பார்போம்

1. இந்திய மரபில் வார்த்தெடுக்கப்பட்ட சூஃபி இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வஹாபியத்தால் மதிப்பிழந்து வருகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

2. இந்த சவுதிய வஹாபிய இஸ்லாம் எங்களின் சமாதிய இஸ்லாமை அடிப்படையாகக் கொண்ட தர்ஹாக்கள், பள்ளி வாசல்கள், மதரஸாக்கள், உள்ளே ஊடுருவி தன் வசமாக்கிக் கொண்டுள்ளன. இதனை தடுக்க ஆவண செய்ய வேண்டும்.

3. நரேந்திர மோடி அமைச்சரவை செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் எங்களின் பரிபூரண ஆதரவு உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவைதான் இந்த சமாதி வழிபாட்டாளர்கள் மோடியை சந்தித்து கொடுத்த முக்கிய கோரிக்கைகள், வாக்குறுதிகள். இந்த சந்திப்பை 'தனக்கு முஸ்லிம் தலைவர்களுடன் ஓர் அருமையான சந்திப்பு நடந்தது' என்று மோடி தனது ட்விட்டர் தளத்திலும் சந்தோஷமாக குறிப்பிட்டுள்ளார். பரேலவிகளைப் போல எல்லா இஸ்லாமியர்களும் மாற வேண்டும் என்பதுதான் இந்துத்வாவின் கொள்கை. அதற்கு ஏற்றாற்போல இந்த சமாதி வழிபாட்டாளர்கள் மோடியின் அனைத்து செயல்பாட்டுக்கும் ஆதரவளிப்பதாக உறுதி மொழி கொடுத்துள்ளனர்.

ஷியா முஸ்லிமான முக்தார் அப்பாஸ் நக்வி சில நாட்கள் முன்பு 'மாட்டுக் கறி சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று விருப்பமுடையவர்கள் பாகிஸ்தான் சென்று விடலாம்' என்று சொன்னதையும் இங்கு நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பெரும்பான்மையோர் தர்ஹாவின் மூலம் தங்களின் வாழ்வை வளமாக்கிக் கொண்டிருப்போர். தவ்ஹீத் கொள்கைளை தற்போது இஸ்லாமிய இளைஞர்கள் பெரும்பான்மையோர் கையிலெடுத்திருப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற பயத்தினாலேயே தங்கள் கோரிக்கைளில் முக்கியமாக தர்ஹாக்களை இணைத்துள்ளனர்.

இஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகளில் தர்ஹா என்ற ஒன்று இல்லை என்பது இந்த இஸ்லாமிய புரோகிதர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் இத்தனை காலம் வளமாக வாழ்ந்து விட்டு இனி உழைத்து சாப்பிடுவதா? என்ற அகங்காரத்தினால் குர்ஆனின் சட்டங்களையும் தூரமாக்க துணிந்து விட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டே மோடியின் குஜராத் ஆட்சியை விமிரிசித்தது. 'நீரோ மன்னன்' என்ற பட்டத்தையும் கொடுத்தது. அந்த கலவரத்துக்கு இன்று வரை மன்னிப்பு கேட்காத மோடியை இந்த தர்ஹா வணங்கிகள், ஷியாக்கள் சென்று மோடியை சந்தித்ததன் மூலம் தாங்கள் யார் என்பதை இஸ்லாமிய சமூகத்துக்கு அடையாளம் காட்டியுள்ளனர்.

இஸ்லாம் நபிகள் நாயகத்தின் காலில் விழுவதற்கோ பெற்ற தாயின் காலில் விழுவதற்கோ தடை விதித்திருக்க இங்கு ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி 2500 முஸ்லிம்கள் கொன்று குவிக்க காரணமாயிருந்த அவர்களை தடுக்க திராணியில்லாத ஒருவரின் காலை தொட்டு வணங்குவதை பார்கிறோம். தர்ஹா வணங்கிகளான இந்த ஷியாக்கள் மற்றும் பரேலவிகள் தங்கள் உள்ளத்தில் யாரை உயர்த்தி வைத்துள்ளார்கள் என்பதை இந்த புகைப்படம் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. முக்தார் அப்பாஸ் நக்வி என்ற ஷியாவும் உடனிருப்பதை கவனியுங்கள்.




குர்ஆனும் நபி மொழிகளும் கடுமையாக எச்சரித்த தர்ஹாக்களை கட்டிக் கொண்டு அழும் இந்த பரேலவிகள் இன்னும் சில ஆண்டகளில் உண்மையான தவ்ஹீத் பிரசாரத்தின் மூலம் இருந்த இடம் தெரியாமல் முகவரியற்று போவார்கள். அத்தகைய சூழ்நிலையை நமது காலத்திலேயே இறைவன் நமக்கு காட்டுவானாக!

தகவல் உதவி:

தி ஹிந்து நாளிதழ், உணர்வு வார இதழ், டைம்ஸ் ஆஃப் இந்தியா



2 comments:

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் அரேபிய வல்லாதிக்கத்தை சவுதிகாரன்போல் உடை அணிவது உண்பது பெயா் வைப்பது வரலாறு படிப்பது அரேபிய நூல்களை படிப்பது வீடு கட்டுவது இந்துக்களை காபீா் என்பது போன்று வாழ மறுக்கும் முஸ்லீம்கள் பெருகி வருகின்றாா்கள். அரேபிய நூல்களில் மலிந்துள்ள மூட நம்பிக்கைகள் புதிய சிந்தனைமுறைக்கு முஸ்லீம்களைத் தூணடி வருகின்றது. சுவனப்பிாியன் கூட திருக்குறளுக்கும் திருமந்திரத்திற்கும் தாயுமானவா்பாடல்களுக்கும் தேவாரத்திற்கும் வருவது போல்தான். இன்னும் பொிய மாற்றம் ஏற்பட வேண்டும். இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் முஸ்லீம்கள் தங்களின் கலாச்சாரத்தை அடியொடு மாற்றிக் கொள்வாா்கள். சவுதிக்கு அடிமைகள் என்ற நிலை மாறி இந்திய முஸ்லீம்கள் தனித்துவமான கலாச்சாரத்தை - இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றாா்கள். விரைவில் அது முழுமைபெறும்.அது பொறுக்காத சவுதி அடிமைகள் கூப்பாடு போடுகின்றாா்கள். அரேபியா் சொல்வது வேதம் அல்ல. அறிவு அரேபியாவில் மட்டும் தேங்கிக் கிடக்கவில்லை.

Dr.Anburaj said...



வாழவில் சமயம் உட்பட எந்த துறையிலாவது அரேபியன் முதல் நிலையில் என்றும் இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை.1400 வருடங்களுக்க முநதைய நிலையை புகழ்வதிலே நியாயப்படுத்துவதிலே அவன் சக்தி வீணாகிக் கொண்டிருக்கின்றது.