Followers

Sunday, June 21, 2015

என் உடல்நிலை சீராக இருக்க யோகாவே காரணம்: விஜயகாந்த்



தனது உடல்நிலை சீராக இருப்பதற்கு யோகாசனமே காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த தலைமை வகித்தார்.

விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இளைஞரணித் தலைவர் சுதீஷ், தேமுதிக கொறடா சந்திரகுமார் உட்பட தேமுதிக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதில் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர்.

விஜயகாந்த் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வெள்ளை உடை அணிந்திருந்தனர். காலை 6.40 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி சுமார் 40 நிமிடங்கள் நடந்தது. பத்மாசனம், பிராணாயாமா உள்ளிட்ட ஆரம்ப நிலை யோகாசனங்களை விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் செய்தனர்.

பின்னர் நிருபர்களிடம் விஜயகாந்த் கூறும்போது, "யோகா என்பது சாதி, மதம், மொழி என அனைத்துக்கும் அப்பாற்பட்டது. இந்தியாவின் பாரம்பரியமான யோகக்கலைக்கு ஐ.நா. அங்கீகாரம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

நான் தினமும் யோகா செய்து வருகிறேன். இதனால்தான் எனது உடல்நலம் சீராக இருக்கிறது. எனது கட்சிக்காரர்கள் சுபிக்‌ஷமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இனி ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்படும்" என்றார் விஜயகாந்த்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
21-06-2015

யோகா உடல் நிலையை சீராக வைத்துள்ளது என்பது ஏமாற்று வேலை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. விஜய காந்த் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு பிரச்னை வராமல் இருந்ததில்லை. தனது வேட்பாளரையே பல பேர் முன்னிலையில் அடிப்பார். கேட்டால் 'என் கட்சிக்காரன் நான் அடிப்பேன்' என்கிறார். பத்திரிக்கையாளர்கள் ஏதும் கேள்விகள் கேட்டால் அடிக்க வருகிறார். டெல்லிக்கு பிரதமரை சந்திக்க அனைத்து கட்சியினரும் சென்ற போது அங்கும் கோபப்பட்டுக் கொண்டு பாதியிலியே வெளியேறினார். சென்ற தேர்தலில் பொது மேடையில் ராஜ்நாத் சிங் மற்றும் வை கோபால்சாமி முன்னிலையில் இவர் பண்ணிய கூத்துக்களை நாமும் பார்த்து ரசித்தோம். எனவே யோகா தொடர்ந்து செய்து வரும் விஜயகாந்த் ஒருக்கால் அதனை நிறுத்தினால் ஓரளவு நார்மலான மனிதனாக இருப்பார் என்பது நமது எண்ணம்.

யோகா முறையினை அதிக உடல் வலியுடன் செய்தால் மன நிலை ஸ்திரத்தன்மை பாதிக்கும் என்றும், போலியான இறப்பு, சமாதி அடைதல், பைத்தியம், அமைதியின்மை, படபடப்பு, பய உணர்வு, தற்கொலை எண்ணம், தனக்குத் தானே ஊனம் ஏற்படுத்துதல் ஏற்பதுத்துதல் போன்றவை உண்டாக வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள்.

அத்துடன் தலை வலி, தற்காலிக கண் பார்வை இழத்தல், பிறப்பு உறுப்புகளில் வலி ஏற்படுத்துதல், மற்றும் ஆண், பெண் இணைந்து செய்வதால் சமூகப் பிரச்சனை ஏற்பட வழி வகுக்கும்.

யோகா 14 வயதிற்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு அறவே கூடாது என்று சொல்கிறது. ஏனென்றால் குழந்தைகளின் வளர்ச்சியினை அது பாதிக்குமாம்.

இது "சோமபான யோகா" எனும் பழம்பெரும் யோகா வகையை சார்ந்தது. வேதகாலத்தில், ஆரிய பார்ப்பன ரிஷிக்களூம் முனிவர்களூம் சோம பானம் அருந்திய பின் இந்த யோகாவை செய்து "காம ஆன்மீக பக்தி பரவசத்தில்" மூழ்கி திளைத்தனர். இன்று இது "டாஸ்மாக் யோகா" என நமது தமிழ்க் குடிமக்களால் பட்டி தொட்டியெங்கும் பரவலாக கடைபிடிக்கப் படுகிறது. அதாவது "பழைய கள், புதிய மொந்தை".

லிங்க பைரவி கடவுளை உருவாக்கிய யோக ஞானி ஜகத்குரு ஜக்கி சொல்கிறார்: "யோகாவின் சிறப்பு என்னவென்றால், யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் யோகா செய்யலாம். யோகா என்றால் உள்ளும் வெளியும் ஒன்றுதல் (union of inside and outside). யாருக்கும் எந்த தீதுமில்லாமல் உனக்குள் சந்தோஷமாக (internal joy) சும்மா படுக்கையில் படுத்திருப்பதும் யோகாதான்".

‘யோகா உங்கள் உடலை எவ்வாறு நாசமாக்குகிறது?’ என்ற தலைப்பில் வில்லியம் பிராட் எழுதிய புத்தகத்தின் பகுதிகளை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. யோகாசனம் செய்தவர்கள் கழுத்து, இடுப்பெலும்பு, முதுகெலும்பு நொறுங்குவது, மூளை நரம்பு வெடிப்பது, ரத்த நாளங்கள் தெறிப்பது, பார்வை இழப்பது போன்ற பயங்கர பாதிப்புகளுக்கு ஆளானதாக வில்லியம் பிராட் விவரிக்கிறார். தலைகீழாக நிற்பது, மொத்த உடலையும் கைகளில் தாங்கி நிற்பது போன்ற கடினமான ஆசனங்களை செய்தபோது பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரிகிறது.

சூரிய நமஸ்காரத்தால் கண்கள் எவ்வாறு பாதிப்படைகிறது என்பதை இந்த காணொளி விளக்குகிறது.



யோகாவினால் ஏற்படும் பாதிப்புகளை நியூயார்க் டைம்ஸ்ம் கார்டியன் இதழும் கட்டுரையாக வெளியிட்டுள்ளன. அதையும் படித்து விடுங்கள்.

http://www.nytimes.com/2012/01/08/magazine/how-yoga-can-wreck-your-body.html?_r=0

http://www.theguardian.com/lifeandstyle/2012/jan/14/yoga-can-damage-body-row

5 comments:

அப்துல்லாஹ் said...

உன் வழி உனக்கு, என் வழி எனக்கு - லகும் தீனுக்கும் வலியத்தீன்:

இந்த யோகாவை இஸ்லாமியர் எதிர்க்கக்கூடாது. சொல்லப்போனால், இது நமக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு. அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒருங்கிணைந்து:

"இந்த யோகாவை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். அனைத்து பள்ளி, கல்லூரி, பாடசாலைகளிலும் ஹிந்துக்களுக்கு கட்டாயப்பாடமாகவும் மற்றவர்களுக்கு விருப்பப்பாடமாகவும் இந்திய அரசாங்கம் அறிவிக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் ஹிந்துக்கள் யோகா செய்ய, இஸ்லாமியர் தொழுகை செய்ய, கிருத்துவர் பிரார்த்தனை செய்ய என அனைத்து மதத்தினருக்கும் முழு உரிமையும் பாதுகாப்பும் சட்டப்படி வழங்கப்பட வேண்டும். உன் வழி உனக்கு, என் வழி எனக்கு"

என அறிவிக்க வேண்டும். நமது உரிமையை நிலைநாட்ட நமக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு. எந்த இஸ்லாமிய தலைவர் முதல் அறிக்கை விடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அல்லாஹு அக்பர்.

முஹம்மத் அலி ஜின்னா said...

"ஓ பார்ப்பனா !!. பள்ளிக்கூடங்களிலும் ஆபிஸிலும் நீ உனது யோகாவை செய்து கீதையை ஓதினால், நான் எனது தொழுகையை செய்து திருக்குரான் ஓத எனக்கு எந்த தடையும் இருக்காது. நீ பஞ்சகச்சம் கட்டி குடுமி வைத்து வாழ்ந்தால், நான் லுங்கி கட்டி தாடி தொப்பி வைத்து தாராளமாக வாழலாம். நீ உண்மையான காபிராக வாழ்ந்தால். நான் உண்மையான முஸ்லிமாக வாழலாம். எம்மதமும் சம்மதமென செக்யூலரிசம் பேசாதே. உன் மதம் உனக்கு , என் மதம் எனக்கு" .
*****************

எம்மதமும் சம்மதம் எனும் செக்யூலரிசம் இஸ்லாத்துக்கு எதிரானது. 1400 வருடங்களுக்கு முன்பு, அண்ணல் நபியிடம் அபு ஜஹல் ஒரு அருமையான செக்யூலரிச கருத்தை எடுத்து வைத்தான்: "6 மாதங்களுக்கு காபாவில் நீங்கள் அல்லாஹ்வை வணங்கி கொள்ளுங்கள், 6 மாதங்களுக்கு நாங்கள் எங்களூடைய சிலைகளை வணங்கிக்கொள்கிறோம். உங்களையே இந்த நாட்டின் மன்னாராக்கி விடுகிறோம். நமக்குள் அனைத்து பிரச்னைகளும் இனி முடிந்தது" என்றான்.

"ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும் நீ தந்தாலும், அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாமல் போகமாட்டேன்" என அண்ணல் நபி எடுத்துரைத்தார். அப்பொழுதுதான் "குல்யா அய்யுஹல் காபிரூன்" சூராவை அல்லாஹ் இறக்கினான் என்பது குறிப்பிடத்தக்கது.

*****
ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)
109:1. (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
*****

முஹம்மத் அலி ஜின்னா said...

விஸ்வாமித்திரர் முன் மேனகா செய்த யோகாவும் அதன் கர்மபலனும்:

ப்ரம்ம ரிஷி விஸ்வாமித்திரர் முன்பு மேனகை கையை காலை தூக்கி இடுப்பை வளைத்து யோகா செய்தாள். ப்ரம்ம ரிஷியின் ஆயிரம் வருட கடுந்தவம் காற்றிலே பறந்துவிட்டது. ஒரு ஆண்மகனின் முன்பு ஒரு பெண் குனிந்து வளைந்து கையை காலை தூக்கினால், என்ன நடக்குமென்பதை சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆகையால்தான் பெண்கள் ஆண்களுக்கு முன்னால் இமாமாக நின்று தொழுகை நடத்துவது இஸ்லாத்தில் செய்யப்பட்டுள்ளது. அப்புறம் யோகசாலையில் கற்பழிப்பு, வண்புணர்வு போன்ற செய்திகள் வந்தால் யாரால் என்ன செய்யமுடியும்?. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத பாப்பானை நினைத்து அழுவதா சிரிப்பதா?.

ஒரு வேளை விஸ்வாமித்திரரை மயக்கி மேனகா கைக்குள் போட்டதைப் போல, யோகா மூலம் பணக்கார அரபு ஷேக்குகளையும், வெள்ளைக்கார அமெரிக்க துரைகளையும் வலையில் வீழ்த்தும் திட்டம் "அவாளுக்கு" இருந்தாலும் இருக்கலாம். "கியாமத் நாள் நெருங்கும் போது பெண்களுக்கு வெட்கம் போய்விடும். ஆடையணிந்தும் ஆடையில்லாதது போல் காட்சி தருவர். கழுதையைப்போல் தெருக்களில் புணர்வர்" என்று நபிகள் நாயகம்(ஸல்) உரைத்தார். இறுதி நாள் நெருங்கிவிட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

முஹம்மத் அலி ஜின்னா said...

மன்னிக்கவும். மேலே உள்ள “விஸ்வாமித்திரர் முன் மேனகா செய்த யோகா..” எனும் பதிவில் திருத்தம்.

“ஒரு ஆண்மகனின் முன்பு ஒரு பெண் குனிந்து வளைந்து கையை காலை தூக்கினால், என்ன நடக்குமென்பதை சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆகையால்தான் பெண்கள் ஆண்களுக்கு முன்னால் இமாமாக நின்று தொழுகை நடத்துவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது”.

Dr.Anburaj said...

கிறு்க்கு பயில்களின் உளறல்.