
எனது தாத்தா நேற்று இறந்து விட்டார்!
சிறு வயதிலிருந்து என் மீதும் எனது சகோதர சகோதரிகளோடும் உறவினர்களோடும், ஊர் மக்களோடும் பாசத்தோடும் அன்போடும் வாழ்ந்து வந்த எனது தாயாரின் தகப்பனார் அதாவது எனது தாத்தா நேற்று இறந்து விட்டார். வயது முதிர்ச்சியினால் சில ஆண்டுகள் நோய் வாய்ப்பட்டிருந்த எனது தாத்தாவை நேற்று இறைவன் அழைத்துக் கொண்டான்.
இரவு பன்னிரண்டு மணிக்கு சீரியஸாக இருப்பதாக அழைப்பு வந்தது. உடன் தாயாரை நான் பிறந்த வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்றேன். மூச்சு மிக சன்னமாக வந்து கொண்டிருந்தது. துடிப்பும் மிக லேசாக இருந்தது. மருத்துவரை அழைக்கச் சென்றால் தூங்கும் நேரமாததலால் யாரும் வரவில்லை. திரும்பி வந்து பார்த்தால் முற்றிலுமாக மூச்சு நின்றிருந்தது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்........
ஒரு உயிர் சன்னம் சன்னமாக பிரிவதை அன்றுதான் உணர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் உடலும் ஜில்லிப்பானது. இறப்பை உறுதி செய்து கொண்டு ஊருக்கும் வெளி நாடுகளுக்கும் தகவல் கொடுத்தோம். மதியம் 4 மணிக்கு தாத்தாவின் உடலை அடக்கம் செய்து விட்டு வந்தோம்.
வாழும் காலங்களில் தனது மனைவியைக் கூட 'வாங்க .... போங்க' என்றுதான் எனது தாத்தா அழைப்பார். பெரும்பாலானவர்கள் தங்கள் மனைவியை 'வாடி... போடி' என்றும் 'வா... போ' என்றும் தான் அழைப்பார்கள். இவ்வாறு பார்த்தே பழக்கப்பட்ட எனக்கு தனது மனைவியை 'வாங்க ... போங்க' என்று மரியாதையோடு அழைத்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. எனது பாட்டி உடல் நலம் இல்லாமல் படுக்கையில் கிடந்தபோது அவருக்காக இரவு பகல் பாராமல் உழைத்து தேவைப்பட்ட நேரத்தில் மருந்து கொடுப்பது, மல ஜலம் கழிக்க உதவுவது அவரது துணிகளை தானே துவைத்து பொடுவது என்று பல ஆண்டுகள் மனைவிக்காகவே உழைத்தவர் எனது தாத்தா. ஐந்து நேர தொழுகைகளையும் தள்ளாத வயதிலும் பள்ளியில் சென்றே நிறைவேற்றியவர். 10 நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் படுத்திருக்கும் போது பள்ளியின் பாங்கு சப்தம் காதில் விழுந்தவுடன் குபீரென்று எழுந்து உட்கார்ந்து கொண்டார். 'என்னால் பள்ளிக்கு செல்ல முடியவில்லையே' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நான் 'இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல உங்களுக்கு கடமை இல்லை. உட்கார்ந்தோ படுத்துக் கொண்டோ தொழுது கொள்ளுங்கள்' என்று சொன்னேன்.
ஊர் பள்ளியின் நிர்வாகியாக பல ஆண்டுகள் திறம்பட பணி செய்தார். மலேசியாவில் ஜொஹூர் பாரு என்ற இடத்தில் ஒரு பெரிய பல் பொருள் அங்காடி வைத்து நடத்தி வந்தவர். நான் 10 வயதாக இருக்கும் போது தாத்தாவை அழைக்க நாகப்பட்டினம் சென்றிருக்கிறேன். முன்பெல்லாம் பெரும்பாலானவர்கள் கப்பலில் தான் வருவார்கள். தற்போதுதான் கப்பல் பயணமே அரிதாகி விட்டது.
எனது தாத்தாவின் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை இறைவன் மன்னித்து அவரை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக! எனது தாத்தாவின் நன்மைக்காக நீங்களும் இந்த ரமலானில் பிரார்த்தியுங்கள் நண்பர்களே!
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
(சூரத் அல் அன்பியா - 35)
இறைவா!
இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்து வாயாக..!
கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
4 comments:
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்........
இறைவா!
இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்து வாயாக..!
கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
ஆமீன். ஆமீன். ஆமீன்.
கபாின் வேதனை என்று ஒன்றும் கிடையாது..இது ஒரு அரேபிய மூடநம்பிக்கை. செத்தவா்கள்ின் உடல் அழுகி விடும். அப்பளவே.அரேபிய மூடநம்பிக்கையை அரேபிய அடிமைத்தனம் காரணமாக விடாது பிடித்துக் கொண்டு முட்டாளாகிக் கொண்டிருப்பது ஏன்?
எாித்தவனுககு கப்பா் வேதனை கிடையாதா ? என் அவரகள் அல்லாவை ஏமாற்றுகிறாா்களா ?
இல்லை அல்லா இயலாதவனா ?
o கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடி சிந்திக்கத் தெரியாத பார்ப்பன அடிமை சூத்திரன் Dr.Anburaj யிடமிருந்து இப்படித்தான் கருத்துக்கள் வரும்.
ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.
தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்றவன், மகளை மனைவியாக்கிக் கொண்டவன், ரிஷி பத்தினிகளைக் கற்பழித்தவன், அடுத்தவனின் மனைவியை அவளின் கணவன் வேடத்தில் சென்று கலந்து விடுபவன்; ஆடு, மாடு, கழுதை, குதிரை, நாய், தவளை இவற்றைப் புணர்ந்து பிள்ளையும் பெறுபவன் இந்து மதத்திலா? - வேறு எந்த மதத்தில்?
சுட்டிகளை சொடுக்கி படித்து சிந்திப்போமா?
.
>>> 1.இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1. <<<
.
>>> 2.இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2. <<<
.
>>> 3.இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.
<<<
.
>>> 4.இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள் இலை 4. <<<
.
>>> 5.வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள் பெருமாள்.. <<<
.
>>> 6.பக்தையை சூறையாடிய கடவுள் விஷ்ணு. பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன். கடவுளை கற்சிலையாக்கிய பக்தை. <<<
.
க்பாின் வேதனை கிடையாது.அது ஒரு அரேபிய மூடநம்பிக்கை என்பதை விவாதிக்க திாில் இருக்கா உண்மைக்கு.
Post a Comment