Followers

Thursday, June 11, 2015

தலித்களுக்கு நில பகிர்வு செய்த திப்பு சுல்தான்!



//திப்பு சுல்தான் வரலாறு பற்றி சொல்லுங்களேன்...// - ram nivas

தலித்களுக்கு நில பகிர்வு செய்த திப்பு சுல்தான்!

'200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திப்பு சுல்தானின் வரலாற்றை நாம் படிக்க வேண்டும். ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிட்டவன் அவன். ஆங்கிலேயருக்கு அடிமையாகி இருந்தால் தென்னகப் பகுதிகளுக்கே அவன் பெரிய மன்னராக ஆகியிருப்பான். 1782 - ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தான் மன்னர்களிடமிருந்து தானமாக நிலங்களை பெற்று வைத்திருந்த ஜமீன்தார்களிடமிருந்து நிலங்களை மீட்டு அதை ஏழை தலித் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்து 200 ஆண்டுகளுக்கு முன்பே நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்தியவன்.

அதனால்தான் பிராமணர்களும் ஆங்கிலேயர்களும் திப்பு சுல்தானை துரோகியைப் போன்று திரித்து தவறான வரலாற்றை எழுதியுள்ளனர். உண்மையான வரலாற்றை நாம்தான் வெளிக் கொணர வேண்டும்.

1782 முதல் 1799 வரை ஆட்சி புரிந்த திப்பு தான் அரசன் இல்லை: மக்கள் பிரதிநிதி என்று கூறிக் கொண்டவன்.

தவறு செய்பவர்களை சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு மாற்றுப் பணிகளை வழங்கி அதை வருமானமாக மாற்றியவன் திப்பு.

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட திப்பு மற்றவர்களைப் போல ஆடம்பரத்தை விரும்பாமல் மக்கள் நலனையும் ஆங்கிலேயரை விரட்டி அடிப்பதையும் தன் கடமையாகக் கொண்டிருந்தான்.

மேலும் கடைசி 6 மணி நேரத்துக்கு முன் எதிரிகள் படையெடுத்து வருவதையறிந்து அவர்களை எதிர் கொள்ள தன் படைகளை தயார் படுத்தினான் திப்பு. அந்த அளவுக்கு தகவல் தொடர்பு வசதிகளையும் அவன் வைத்திருந்தான்.

திப்பு சுல்தான் இறந்த பின் அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயர்கள் முதலில் திப்புவின் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரசீக மற்றும் சமஸ்கிரத மொழி நூல்களை லண்டனுக்கு எடுத்துச் சென்றனர். பின் அந்த நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டன.

அதன் பின்னரே விலை உயர்ந்த நகைகள் ஆபரணங்களை அவர்கள் அள்ளிச் சென்றனர்.

திப்புவின் அறிவும் செல்வமுமே இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்கு காரணம்.

ஆங்கிலேயர்களை எதிர்க்க ஹைதரபாத் நிஜாம், மராட்டிய மன்னர்களை ஒன்றிணைக்க திப்பு மேற்கொண்ட முயற்ச்சிக்கு இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த இணைப்பு நடைபெற்றிருந்தால் 1799- ஆம் ஆண்டே நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றிருக்கும்.

நம்நாடு முன்னேற கணிணி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவை மட்டும் துணை புரியாது. ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும்.

அமெரிக்கர்கள் நம் நாட்டில் விஞ்ஞானிகள் உருவாவதை விரும்பவில்லை. மென்பொருள் பொறியாளர்கள்தான் உருவாக வேண்டுமென விரும்புகின்றனர். நம் இளைஞர்கள் விஞ்ஞானிகளாக உருவாக அடிப்படை அறிவியலை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

திப்புவின் அறிவுத் திறன், தொழில் நுட்பம், நிர்வாகத் திறன் ஆகியவற்றை நாம் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.'

-தலகாடு சிக்கே ரங்க கௌட
திப்பு சுல்தான் பிரசார சமிதி தலைவர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் தஞ்சையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழாவில் பேசிய பேச்சைத்தான் நாம் மேலே படித்தது.

ஆதாரம்
தினமணி
25-2-2007

இது போன்ற தலைவர்களின் உண்மை வரலாற்றை மறைப்பதன் மூலம் நம் நாட்டுக்கு நாமே தீங்கிழைக்கிறோம். இவ்வளவு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நாயகனின் சரித்திரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது 'இது ஒரு கற்பனைக் கதை. இதில் வரும் சம்பவங்கள் எவரையும் குறிப்பிடுபவை அல்ல' என்ற செய்தியோடு வெளியிட்டார்கள்.

அதே சமயம் ராமாயணமும் மகாபாரதமும் ஒளிபரப்பும் போது வரலாற்று காவியம் என்ற அடை மொழியோடு ஒளிபரப்புவார்கள். என்ன ஒரு நடுநிலைமை!

4 comments:

Dr.Anburaj said...

ஆங்கிலேயர்களை எதிர்க்க ஹைதரபாத் நிஜாம், மராட்டிய மன்னர்களை ஒன்றிணைக்க திப்பு மேற்கொண்ட முயற்ச்சிக்கு இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த இணைப்பு நடைபெற்றிருந்தால் 1799- ஆம் ஆண்டே நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றிருக்கும
தவறு.ஏற்கனவே இந்த மன்னா்களும் முகலாய மன்னா்களும் கொடுங்கோலாட்சிதான் செய்து மக்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தனா்கள். ஆகவேதான் தற்காலிக நிவாரணம் தேடி மக்கள் ஆங்கிலேயா்கள் வசம் ஆனாா்கள். திப்புவும் சமய பொறை இல்லாதவா்தான். படையெடுப்பில் இந்த ஆலயங்களை இடித்தவா்தான். இந்து பெண்களை குமுஸ் பெண்ணாக்கி கொடுமைபடுத்தியவா்தாம்.தாங்கள் சொல்வது போல் பல நல்ல குணங்கள் இருந்தாலும் அது ஆங்கீலேயா்களுக்கு எதிராக மக்களை திசை திருப்ப போதாது. வாழ்க திப்பு

அப்துல்லாஹ் said...

அம்பேத்கரும் பெரியாரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தில் போராடினர். இருந்தாலும் ஒரு முறையாவது இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்தனரா, இணைந்து போராடினரா என்பது கேள்விகுறியாக இருக்கிறது. ஆனால் ஒரு மாபெரும் தலைவனை சந்திக்க அம்பேத்கரும் பெரியாரும் ஒரு சேர ரயில் வண்டியில் பயணம் செய்து சென்றனர், அந்த தலைவனுடன் கலந்தாலோசிக்க இரண்டு நாட்கள் பம்பாய் ஹோட்டலில் தங்கியிருந்தனர் என்பது பலருக்கு வியப்பாக இருக்கும். யார் அந்த ஒப்பற்ற தலைவன்?. எதற்காக அவனை சந்தித்தனர்?.

சுட்டியை சொடுக்கவும்:
http://www.outlookindia.com/printarticle.aspx?281935

அப்துல்லாஹ் said...

"அம்பேத்கர் , பெரியார், அண்ணாதுரை, ஜின்னா சந்திப்பு - பாக்கிஸ்தானுக்குப் பிறகு, திராவிட நாடு" என 1940ல் பெரியாருக்கு ஜின்னா தந்த உறுதிமொழி:

ஜின்னா என்றுமே ஆங்கிலேருக்கு எதிராக போராடவில்லை. ஆங்கிலேயரின் உதவியில்லாமல் ஒரு நாட்டை உருவாக்க முடியாது என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவர் பார்ப்பனியத்துக்கெதிராக போராடினார். பார்ப்பனிய ஆதிக்கத்தை உடைக்க ஒரு இஸ்லாமிய நாடு தேவை என்று உரைத்தார். சொல்லப்போனால், அவருக்கு உருது சரளமாக பேச வராது. ஆனால் சர்ச்சில் போன்ற தலைவர்களே அவருடைய ஆங்கில புலமையையும், செவில்லி ப்ரான்ட் சூட்டு கோட்டு அணிந்து சுருட்டு ஊதும் ஸ்டைலையும் பாராட்டியதுண்டு.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் வக்கீலாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஜின்னா ஒருவருக்கு மட்டுமே, இங்கிலாந்து அரசியை சந்திக்க பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தின் உள்ளே வரை ரோல்ஸ்ராய்ஸில் செல்லும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பலமுறை ஜின்னாவை வரவேற்கவும் வழியனுப்பவும் பக்கிங்ஹாம் அரண்மனையின் வாசல்வரை இங்கிலாந்து அரசி வந்தார் எனும் கௌரவமும் ஜின்னாவுக்கு உண்டு. ஆகையால்தான், கத்தியின்றி ரத்தமின்றி பேனா முனையில் ஒரு நாட்டை உருவாக்கிய தலைவன் என ஜின்னாவை கவிக்குயில் சரோஜினி நாயுடு அம்மையார் பாராட்டினார். எந்த ஒரு மீட்டிங்கிலும், ஜின்னாவின் அருகில்தான் சரோஜினி நாயுடு அமர்வார். ஒரு கட்டத்தில் ஜின்னாவை அவர் திருமணம் செய்து கொள்வார் என்று கூட பேச்சு அடிபட்டது.

"காந்தியை அரைநிர்வாணப் பக்கிரியாக வைக்க, பல கோடிகளை நாங்கள் செலவு செய்ய வேண்டியதிருக்கு - To keep Gandhi in poverty, we have to spend millions" என சரோஜினி நாயுடு அம்மையார் அடிக்கடி சொல்வார். பார்ப்பனியத்தை குழி தோண்டி புதைத்து பாக்கிஸ்தானை ஜின்னா உருவாக்கினாரென்றால் மிகையாகாது. ஆகையால்தான் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் திராவிட நாட்டை உருவாக்க ஜின்னாவை மூன்று முறை சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கிஸ்தான் சுதந்திரம் அடைந்து ஒரே வருடத்தில் ஜின்னா இறந்துவிட்டார். அவர் மட்டும் சில வருடங்கள் உயிரோடு இருந்திருந்தால், இன்ஷா அல்லாஹ் திராவிட நாடு உருவாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

UNMAIKAL said...

இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் அனைவரும் வகுப்பு ஒற்றுமையைக் கடைப்பிடித்தனர்.

அவர்கள் ஆட்சி செய்யவேண்டியவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். இந்து கோயில்களை உடைத்தால் உடனே கலவரம் வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். ஒருவரும் கலவரத்தை விரும்பவில்லை.
முகலாயர்கள், ஆவாத் நவாபுகள், ஆர்காட் முர்ஷிதாபாத், திப்பு சுல்தான், ஹைதரபாத் நிஜாம் என்று ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் மத ஒற்றுமையை வளர்ப்பவர்களாகத்தான் இருந்தார்கள்.

உயர்ஜாதித் தீண்டாமை மற்றும் அடக்குமுறைக்கு எதிரானத் திப்புவின் சமூக சீர்த்திருத்த முயற்சிகள் அனைத்தும் இந்து மதத்துக்கு எதிரான செயல்பாடுகளாகத் திரிக்கப்பட்டதோடு, திப்பு ஒரு இந்து மதவிரோதி என்று பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்து கோயில்களுக்கு தொடர்ச்சியாக மானியங்கள் அளித்தும் தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளில் கலந்துகொண்டும் மத ஒற்றுமையை வளர்த்தனர். - மார்கண்டேய கட்ஜு. சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்தவர்.
***************

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு.

போர் என்றால் போர்க்களத்துடன் மட்டுமே இருக்க வேண்டும். அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கக் கூடாது. எதிரியின் குடும்பத்தாரும், குழந்தைகளும் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பது திப்புவின் கட்டளை.

மத சகிப்புத் தன்மை குரானின் அடிப்படை என்று பேசுவார்.

மைசூர் சாம்ராஜ்ஜியத்தில் இந்துக்கள் அதிகம். குறைவான சதவீதமே முஸ்லிம்கள் வாழ்ந்தனர். ஓர் ஆண்டில் இந்துக் கோயில் மற்றும் அற நிலையங்களுக்கு 1,93,959 வராகன்களும், பிராமண மடங்களுக்கு 20,000 வராகன்களும், முஸ்லிம் ஸ்தாபனங்களுக்கு 20,000 வராகன்களுமாக மொத்தம் 2,33,959 வராகன்கள், சர்க்கார் கஜானாவில் இருந்து வழங்கப்பட்டு இருக்கின்றன. இது, அவரது மத ஒற்றுமையின் அடையாளம் போலவே உள்ளது.

மலபார் பகுதியில், பெண்கள் மேலாடை அணி யாமல் இருந்த முறையை மாற்றி, மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கினார் திப்பு சுல்தான்.

அதுபோலவே, குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தைத் தடுத்து சட்டம் இயற்றியுள்ளார்.

கோயில்களில் இருந்த தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டதுடன், மதுவிலக்கை அமல்படுத்தி, அதைத் தீவிரமாகக் கண்காணித்தார்.

168 கோயில்களுக்கு ஆண்டுதோறும் திப்பு சுல்தான் மானியம் வழங்கியிருக்கின்றார்

இந்துக்கள் தான் அவருடைய தலைமை அமைச்சரும், ராணுவத் தளபதியுமாக இருந்தனர். பல இந்துக் கோவில்களுக்கு ஆண்டு தோறும் திப்புவின் கருவூலத்தில் இருந்து கொடை முறையாகச் செல்லும்.
மூன்றாம் மைசூர் போர் காலத்தில் தேசுராம் பாவ் மரத்தா ராணுவம் சிருங்கேரியைக் கொள்ளையடித்தது. சாரதா தேவி சிலையை இடமாற்றியது.

இதை அறிந்ததும் திப்பு இருந்த இடத்திலேயே சாரதா தேவி சிலையை நிறுவிட பெத்தனூர் மாவட்ட அதிகாரிக்கு உத்தர விட்டார்.

தனது கடிதத்தில் 'சிரித்துக் கொண்டே தீயசெயல் செய்பவர்கள் பின்னொரு காலத்தில் அழுது கொண்டே அதற்காக வருத்தப்படுவார்கள்" என்ற வடமொழிக் கவிதையை சுட்டிக் காட்டி எழுதுகிறார்.

அக்கோவிலுக்கு இரண்டு பல்லக்குகள் திப்வுவால் பரிசளிக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்களுக்கு திப்பு கொடுத்த மரியாதையை இக்கடிதங்கள் மூலம் நாம் உணர முடிகிறது.

நஞ்சன் கூடு லட்சுமி காந்த கோவிலுக்கும், மேல்கோட்டின் நாராயணசாமி கோவிலுக்கும் யானை, நகை உட்பட ஏராளமான பொருள்களை வழங்கியுள்ளார்.

கோவில் மணிஓசைக்கும் மசூதியின் தொழுகை அழைப்பிற்கும் சம மரியாதை தந்தார்.

மசூதி அருகே அமைந்திருந்த நரசிம்ம கோயில், கங்காதரேசுவரர் கோயில் இரண்டிலும் தினசரி வழிபாடு எவ்வித இடையூறுமின்றி திப்பு ஆட்சிக் காலத்தில் நடந்தது.

சில இந்துக் கோயில்களில் ஏற்பட்ட உள்சச்சரவுகளைக் கூட திப்பு தலையிட்டு தீர்த்து அமைதிப்படுத்தியதாக அறிய முடிகிறது.

அவரது அரசாங்க உயர் பதவிகளில் ஏராள இந்துக்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். நிதி மற்றும் வருவாய் - பூர்ணய்யா, காசாளர் - கிருஷ்ண ராவ், சட்டம்ஒழுங்கு - சம அய்யங்கார், வெளி நாட்டுத் தூதரக அலுவல் சீனுவச ராவ், அப்பாஜி ராவ் என்று பட்டியல் நீள்கிறது. சாதி மதத்திற்கு அப்பாற் பட்டு பொருத்தமானவரைத் தேர்வு செய்தல் என்ற அணுகுமுறையை அவர் கடைபிடித்தார்.- விகடன்