
நம் ஊர் கடற் கரைகளை விபசாரம் செய்யும் இடங்களாக மாற்றி விட்டோம். ஒரு வாரம் முன்பு குடும்பத்தோடு சிதம்பரம் பக்கம் உள்ள பிச்சாவரம் கடற் கரைக்கு சுற்றுலா சென்றிருந்தேன். மிக ரம்மியமாக இருந்தது. அனைவரும் பார்க்க வேண்டிய இடம். கடலுக்கு மேல் காடு இங்குதான் நம்மால் பார்க்க முடியும். பொதுவாக உப்பு தண்ணீரில் எந்த தாவரங்களும் வளர வாய்ப்பில்லை. ஆனால் ஆச்சரியமாக அந்த உப்பு நீரிலும் அலயாத்தி காடுகள் வளர்ந்து அந்த இடங்களையே குளிர்கச்சியாக்கி வைத்துள்ளது. இது பற்றி தனியாக ஒரு பதிவே எழுதுகிறேன்.
ஆனால் இந்த இடத்திலும் அரவாணிகள் கும்பல் கும்பலாக உட்கார்ந்து கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபடுவதை பார்க்க முடிந்தது. சில போட்களில் கூட இது நடப்பதை பார்த்தேன். குடும்பத்தோடு வருபவர்கள் முகம் சுழிக்கும் வகையில் இந்த காட்சிகள் அரங்கேறுகிறது.
ஜெத்தாவில் கடற் கரை விடுதி ஒன்றில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த இருவரை காவல் துறை கைது செய்தது. இதனை விசாரித்த ஜெத்தா கிரிமினல் கோர்ட் அந்த இருவருக்கும் ஐந்து சவக் குழிகளை வெட்ட வேண்டும் என்று ஆணை இட்டது. அதன்படி அந்த இருவரும் தலா ஐந்து சவக் குழிக்களை வெட்டினர்.
அந்த நண்பர்களுடன் கொட்டமடித்த இரு பெண்களை மருத்துவ மனைக்கு அனுப்பி அவசர பிரிவு நோயாளிகள் 10 பேரை சென்று பார்க்க வேண்டும் என்று கோர்ட் ஆணையிட்டது. சிறு குற்றங்களுக்கு தண்டனை தருவதற்கு பதிலாக இது போன்ற மன நல சிகிச்சைகளைப் போன்ற தண்டனைகளை சவுதி அரசு தருகிறது. இதனால் குற்றவாளியும் திருந்த ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.
குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நம் நாடு சவுதியின் இந்த திட்டததை ஏன் அமுல்படுத்தக் கூடாது?
செய்தியை பிரசுரித்த தினமலர் நாளிதழுக்கு நன்றி! அத்தி பூத்தாற்போல் எப்போவாவது தின மலர் தனது குடுமியை மறைத்துக் கொண்டு நல்ல செய்திகளையும் வெளியிடும். அது போன்ற ஒன்றுதான் இந்த செய்தியும். :-)
1 comment:
நீதி எனற திரைப்படத்தில் லாாி ஒட்டுநா் மது போதைகயில் ஒருவரை கொன்று வீடுவாா்.அதற்குதண்டனையாக அவருத குடும்பத்தைக்காக்க வேண்டும்என்ற தீா்ப்பு வழங்கப்பட்டது. அவா் அந்த குடும்பத்தினரோடு படும் பாட்டை பாா்க்கலாம். விவாகரத்து கேட்ட இளம் தம்பதியினரை ஸ்ரீஅன்னை சாரதா தேவி பிறந்த ஜெயராமபாடி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஒரு மாதம் தங்கியிருந்து பின் நீதிபதியைச் சந்திக்க தீாப்பு கல்கத்தா நீதி மன்றத்தில வழங்கப்பட்டது.முடிவில் விவாகரத்து மனு வாபஸ் பெறப்பட்டது. இதுபோன்ற முயற்சிகள் அரசு செய்யலாம். ஏனோ வெள்ளைக்கார சட்டங்களை போதிய அளிவில் மாற்ற முடியாமல் நமது அரசு தவிக்கின்றது.
Post a Comment