Followers

Saturday, June 13, 2015

திருப்பந்துருத்தியில் வரதட்சணை ஒழிப்பு மாநாடு!







சென்ற வெள்ளிக் கிழமை 12-06-2015 திருப்பந்துருத்தியில் நடந்த வரதட்சணை ஒழிப்பு மாநாட்டுக்கு நண்பர்களோடு சென்றிருந்தோம். அந்த ஊர் மூடப் பழக்கங்களில் அதிகம் ஊறிய ஊர். தர்ஹா வழிபாடு, மவுலூது, தட்டு, தாயத்து போன்ற இஸ்லாம் வெறுக்கும் செயல்களை மார்க்கமாக செய்து வருபவர்கள் அதிகம் கொண்ட ஊர். எனவே ஊரில் இந்த கூட்டத்துக்கு மிகவும் எதிர்ப்பு கிளம்பியது. ஊரில் கலவரம் வரும் என்று ஊரில் உள்ள பலரால் காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. கூட்டத்துக்கு அனுமதி வழங்கிய காவல் துறை தகுந்த பாதுகாப்பையும் கொடுத்தது.

எங்களை வரவேற்றதே காவல் துறைதான். வரிசையாக காவல் துறையினரின் அணி வகுப்பு. கூட்டம் நடக்கும் இடம் வரை இருந்தது. ADSP தலைமையில், 1 DSP, 6 INSPECTORS மற்றும் 100க்கும் அதிகமான காவல் துறையைச் சேர்ந்தவர்களின் கண்காணிப்பில் வரதட்சணை ஒழிப்பு மாநாடு மிக சிறப்பாக நடந்தேறியது. மவ்லூதின் தீமைகள், சமாதி வழிபாட்டில் உள்ள தவறுகள், வரதட்சணையினால் சமூகம் படும் சிரமங்கள் போன்றவற்றை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் யூசுஃபும், மாவட்ட பேச்சாளர் இமாம் அலியும் சிறப்பாக எடுத்துக் கூறினர். 10 மணி அளவில் கூட்டம் இனிதே நிறைவுற்றது. எங்கு திரும்பினாலும் இளைஞர்கள் கூட்டம். சினிமாவில் வாழ்வை தொலைத்துக் கொண்டு ஒரு பெரும் கூட்டம் தமிழகத்தில் உள்ளபோது அதே போன்ற இஸ்லாமிய இளைஞர் பட்டாளம் தங்கள் நெஞ்சில் குர்ஆனை சுமந்து கொண்டு பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருப்பதை பார்க்க சந்தோஷமாக இருந்தது.

மூடப் பழக்கங்களில் ஊறிய அந்த ஊரில் இனி தவ்ஹீன் செயல்பாடுகள் சிறிது சிறிதாக இறைவன் உதவியால் நிறைவேற்றப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே!

No comments: