
ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத்தில் வனஸ்தாலிபுரம் என்ற நகரின் சஹாரா காலனியில் யோகா தினத்தை யொட்டி நுற்றுக்கு மேற்பட்டோர் 'யோகா' பயிற்சியில் ஈடுபட்டனர். 61 வயது ஆயுர்வேத மருத்துவர் வீரா ரெட்டி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். யோகா பயிற்சியில் ஆயுர்வேத மருத்தவரான வீரா ரெட்டியும் கலந்து கொண்டார்.
யோகா பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வீரா ரெட்டி திடீரென மயக்கமாகி கீழே சரிந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே மூச்சு திணறலால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
தகவல் உதவி
The New Indian Express
21-06-2015
மருத்துவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். யோகா பயிற்சியினால் இன்று ஒரு உயிர் பிரிந்துள்ளது. எனவே யோகாவில் ஆர்வமுடையவர்கள் தங்கள் உடல் நிலை யோகாவுக்கு எற்றதுதானா என்பதை மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து விட்டு பயிற்சியில் ஈடுபடட்டும். உயிருக்கே உலை வைக்கும் யோகா போன்ற பயிற்சிகள் சாமான்யர்கள் அதிகம் வாழும் நமது இந்தியாவுக்கு தேவைதானா என்பதை இந்துத்வாவாதிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். சரியான வழிகாட்டுதல் இல்லாத சாமான்ய மக்கள் மோடியின் பயிற்சியை பார்த்து விட்டு தாங்களாகவே பயிற்சியில் ஈடுபட போய் தங்கள் உயிருக்கே உலை வைத்துக் கொள்ளப் போகிறார்களோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
தலைகீழாக நிற்கும் சிரசாசனம் எல்லா உடலுக்கும் ஏற்றதல்ல. அதே போல் மூச்சுப் பயிற்சியும் எல்லா உடலுக்கும் ஒத்து வரக் கூடியதல்ல. சாமான்ய மக்கள் விளம்பரங்களை கண்டு ஏமாந்து விடாமல் யோகா விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
2 comments:
என்ன சுவனப்பிாியன் தங்களின் முட்டாள்தனத்திற்கு அளவே இல்லையா ? எவ்வளவு பொிய முட்டாள் நீங்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
யோகா பயிற்சியினால் இன்று ஒரு உயிர் பிரிந்துள்ளது எனறு சொல்வது முட்டாள்தனத்தின் சிகரம். இவ்வளவு முட்டாள்தனமாக வேறு யாரும் பேசிக் கேட்டதில்லை. மருத்துவருக்கு என்ன வியாதிகள் எல்லாம் இருந்ததோ அது குறித்து மறைத்து விட்டு எப்படியோ இந்தியாவில் பிறந்த கலை உலக அளவில் புகழி பெற்று இந்தியாவிற்கு புகழி ஏற்படுவது பொறுக்காமல் வயித்தொிச்சல் காரணமாக -அரேபியாவிற்கு புகழ் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் உங்களுக்கு - இப்படியெல்லாம் அண்டப்புளுகு அவிழ்த்து வீடுவது ???? சீ முட்டாள் ஏமாற்றுக்கார நயவஞசகன் நீங்கள். திருந்துவீா்களா ?
சிரசாசனம் செய்வதை முற்றிலும் கைவிடுவது நல்லதுதான்.மூச்சுப்பயிற்சியில் எந்தவிதமான தவறும் இல்லை. மூச்சை நிறுத்தாது - உள்கும்பகம், வெளிகும்பகம் - -பிரணாயாமம் செய்வது அனைவருக்கும் உகந்தது.மலையளவு நன்மையிருக்கும் போது அதைக்குறித்து எழுதாமல் தலைகீழ் யோகம் என்று கிண்டல் அடிப்பது ஏன் ? இந்தியாவை உலக நாடுகள் மகிழ்ச்சியோடு பாராட்டும் முகமாக எட்டிப்பாா்ப்பது தங்களுக்கு பிடிக்கவில்லையா ? யோகாவின் நன்மைகளை எழுதுங்கள்.ஒவ்வொறு பயிற்சியிலும் முறையாக செய்வது பிரச்சனைகள் என்று எல்லா விபரங்களையும் யோக ஆசிாியா்கள் கற்றுக் கொடுப்பாா்கள். முஸ்லீம்கள் நிச்சயம் யோகா பயில்வாா்கள்.பயின்று கொண்டிருக்பாா்கள்.பகவத்கீதை போட்டியில் முஸ்லீம் சிறுமி முதல்பாிசு பெற்றுள்ளாா்களே! பெற்றோரும் மேற்படி மாணவியும் நமது பிரதமா் அவர்களைப் பாா்த்து பாராட்டியுள்ளாா்களே! படத்தை வெளியிடலாமே !.மேற்படி செிறுமியின் பெற்றோரைப்பாா்த்தால் நல்ல முஸ்லீம்கள் -போல தொிகின்றதே. இது போன்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மக்களை முட்டாளாக்காதீா்கள்
Post a Comment