'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, June 15, 2015
ஆர்எஸ்எஸ் துவம்சம் செய்த தலித் கிராமம்!- ஹரியானாவில்
டெல்லிக்கு அருகில் ஹரியானா மாநிலத்தில் சோனாபேட் மாவட்டத்தில் உள்ளது ராஜேந்திர நகர். இங்கு ஆர்எஸ்எஸ் அலுவலகமும் சற்று தள்ளி தலித்களின் குடியிருப்புகளும் உள்ளன.
வால்மீகி என்ற தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த தலித்தான ராஜீவ் குமார் சொல்கிறார் 'எனது மகன் கிரிக்கெட் தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். தவறுதலாக பந்தானது ஆர்எஸ்எஸ் வளாகத்தினுள் விழுந்து விட்டது. அதனை எடுக்க எனது மகன் ஆர்எஸ்எஸ் வளாகத்தினுள் நுழைந்துள்ளான். இதனை பார்த்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் எனது மகனை கண்டபடி திட்டி அடித்துள்ளனர். அடி தாங்காமல் அழுது கொண்டே எங்களிடம் வந்தான் எனது மகன். நடந்த விபரங்களை கேட்ட நானும் எனது தாயாரும் நியாயம் கேட்க ஆர்எஸ்எஸ் அலுவலகம் நோக்கி சென்றோம். எங்களைப் பார்த்தவுடன் கோபத்துடன் கிட்டத்தட்ட 50 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மூர்க்கத்தனமாக பாய்ந்து தாக்க ஆரம்பித்தனர். இரும்பு தடிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் லத்திகளைக் கொண்டு எங்கள் கிராமத்தையே தாக்கினர். நான் எனது தாயார் மற்ற உறவினர்கள் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இவ்வளவு அராஜகம் நடந்தும் மீடியாக்கள் இந்த செய்தியை வெளியிடவில்லை. போலீஸாரும் சாதாரண ஒரு எஃப் ஐ ஆர்ரையும் பதிய முன் வரவில்லை. ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை காப்பாற்றுவதிலேயே போலீஸார் கவனமாக உள்ளனர். நாங்கள் எதைச் சொன்னாலும் கேட்கும் நிலையில் போலீஸார் இல்லை. எங்களுக்கு உதவுவோரும் யாரும் இல்லை' என்கின்றார் பரிதாபமாக....
'எங்கள் மேல் இத்தனை குரூரமாக ஆர்எஸ்எஸ் இருக்க காரணம் நாங்கள் தேர்தலில் காங்கிரஸை ஆதரித்தோம் என்பதால்தான். தற்போது ஆட்சியையும் பிடித்துள்ளதால் எங்களை பழி வாங்குகிறார்களோ என்று எண்ணுகிறோம்' என்கின்றனர் அந்த கிராம வாசிகள்.
திட்டமிட்டு மீடியாக்களால் இவ்வளவு பெரிய அராஜகம் மறைக்கப்பட்டுள்ளது. காரணம் பாதிக்கப்பட்டது தலித்கள்.
ஆர்எஸ்எஸ் இந்து மதத்தை காக்க வந்த அமைப்பு என்று சொல்லிக் கொள்வர். ஆனால் உண்மையில் சித்பவன் பார்பனர்களால் அவர்களின் ஆளுமையை தக்க வைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுதான் உண்மையாகும். இதை உணராமல் சென்னி மலை ராம் நிவாஸ் போன்ற பிற்படுத்தப்பட்ட இந்துக்களும் விட்டில் பூச்சில்களாக ஆர்எஸ்எஸை ஆதரிப்பவர்களாக உள்ளனர். இவர்களும் ஒரு காலத்தில் இந்த பயங்கரவாத அமைப்பினால் பாதிக்கப்படும் பொதுதான் தாங்கள் எவ்வளவு பெரிய தவறை முன்பு செய்துள்ளோம் என்பதை உணர்வார்கள். அது வரை நாமும் பொறுப்போம்.
http://maheshrathiblog.blogspot.in/2015/04/rss-bares-its-anti-dalit-face-attack.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment