Followers

Friday, June 12, 2015

பண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை அட்டூழியம்'



'பாலுறவுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வோம்' என்று கூறி, ஹைத்தி பெண்களிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை வீரர்கள் 'பண்டமாற்றுப் பாலுறவு' செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

வட அமெரிக்க நாடான ஹைத்தியில் வாழும் ஏழை மக்களுக்கான உதவிகளை கடந்த 2004-லிருந்து ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் அளித்த வந்தனர்.

இந்த நிலையில், தங்களது அமைதிக் குழு வீரர்கள் 'பண்டமாற்றுப் பாலுறவு' செயல்களில் ஈடுப்பட்டதை ஐ.நா. கண்காணிப்புக் குழு கண்டுபிடித்ததாகவும், அதன் விவரம் தங்களுக்கு தெரியவந்ததாகவும் 'தி அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.நா. அமைதிப் படைக் குழுவில் உலகெங்கும் சுமார் 125,000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் உலக நாடுகளில் நடக்கும் மோசமான சூழல்களில் அதன் மக்களுக்காக சேவை செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களது பணியை கண்காணிக்கும் பொறுப்பில் ஐ.நா. மேற்பார்வை குழு செயல்பட்டு வருகிறது.

மேற்பார்வை குழுவின் ஆய்வின்படி, வட அமெரிக்க நாடுகளில் மிகவும் ஏழ்மையான நாடான ஹைத்தியில், அமைதிக் குழு பணியாற்றியபோது அங்கிருக்கும் பெண்களுக்கு உணவு, உடை, தண்ணீர், குழந்தைகளுக்கான வசதிகள் என அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு கைமாறாக தங்களுடன் பாலுறவு கொள்ள வலியுறுத்தியதை மேற்பார்வை குழு கண்டறிந்துள்ளது.

"கிராமப்புற பெண்களுக்கு பசி, வாழும் இடம், குழந்தைகளுக்கான தேவைகள், மருத்துவப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என எதுவும் இல்லை. இதுபோன்ற தேவைகளை அளிப்பதற்கு மாறாக அந்தப் பெண்களிடம் உறவுகொள்ளும் வழக்கத்தை அமைதிக் குழுவினர் வைத்துள்ளனர்.

அவை மட்டுமல்லாமல், செல்போன், லேப்டாப், பணம் உள்ளிட்ட பொருட்களையும் அந்தப் பெண்களுக்கு குழுவினர் அளித்தனர்" என்று மேற்பார்வை குழுவின் விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைத்தியில் 231 பெண்களிடம் கடந்த வருடம் மேற்பார்வை குழுவினர் ஆய்வில் ஈடுபட்டதில் இந்த விவரம் அம்பலமானது. அதனை 'தி அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தச் செயல் எந்த சமயத்தில் நடந்தது, அதில் ஈடுப்பட்ட குழுவினரது விவரங்கள் என எதுவும் தெரியாத நிலையில் இது குறித்து பேச ஐ.நா. அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆனால், இந்த அதிர்ச்சிச் தகவல் தொடர்பான அறிக்கையை ஒரு சில மாதங்களில் ஐ.நா. வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
11-06-2015

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான். (மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொளளையடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 86 Buhari 6772

விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

(அல் குர்ஆன் 24:2)

1 comment:

Dr.Anburaj said...

குமுஸ் கலாச்சாரம் போதிக்கும் குரானைப் படித்தவா் இபபடி பேசுவது சாியா ? குரான் வழியா ? தீன்னா ? ஹலாலா ? ஹராமா ? மேற்படி சிப்பாய் குரான் படித்து மூளை கெட்டவராகியிருப்பாா்.இதுதான் குமஸ் பெண்கள் கிடைப்பாா்களா என்று அலைகின்றாா். பாவம் இராமாயாணம் படித்தால் மனக் கட்டுபாடு பற்றி நிறையவே தொிந்திருப்பாா்.பிரம்மச்சாியம் எகபத்தினி விரதம் என்ற வாா்த்தைகள் மனதில் விதைக்கபப்ட்டிருக்கும்.நல்ல எண்ணங்கள் மனதில் வந்திருக்கும். பாவம் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறைவா வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பாயாக !