
'ஹிந்து நேஷனல் டெமாக்ரடிக் பார்டி' என்ற இந்துத்வா அமைப்பு நேபாளத்தை 'இந்து ராஷ்ட்ராவாக' அறிவிக்கச் சொல்லி கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஒட்டி பேரணியும் நடத்தியது. நேபாள பாராளுமன்றத்தை நோக்கி கோஷங்களை எழுப்பிச் சென்றது. ஆனால் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இந்துத்வா கோரிக்கைக்கு ஆதரவு இல்லை. மூன்றில் இரண்டு சதமான உறுப்பினர்கள் தங்கள் நாடு 'இந்து ராஷ்ட்ராவாக' மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளித்தனர். முடிவில் இந்துத்வாவாதிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மத சார்பற்ற நாடாகவே இனி நேபாளம் தொடரும்.
'இந்து ராஷ்ட்ராவாக' நேபாளத்தை மாற்றினால் மாடு அறுக்க தடை போடுவர். நேபாளிகளின் முக்கிய உணவே மாட்டுக் கறிதான். இதனை இங்கு சவுதியிலும் நான் நேரிலேயே பார்கிறேன். மேலும் பெரும்பாலான நேபாளிகள் தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்கின்றனர். புதிய பள்ளி வாசல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேபாளம் இந்து ராஷ்ட்ராவாக மாறினால் மத மாற்ற தடை சட்டத்தையும் கண்டிப்பாக கொண்டு வருவர். எனவே நேபாள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலை நாமும் வரவேற்போம்.
இந்துத்வாக்களின் கோரிக்கை தோல்வியடைந்த ஆத்திரத்தில் இந்துத்வாவாதிகள் பாராளுமன்றத்தை நோக்கி ஆக்ரோஷமாக வருவதைத்தான் நாம் புகைப்படமாக பார்கிறோம். பார்கிறோம். எந்த நாட்டிலும் இவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை.
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
14-09-2015
3 comments:
சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகளுக்கு இந்த உபதேசத்தைக் கூறுவீா்களா ? தவறு.தான் சாா்ந்த மதத்தை மதித்து மக்களை நல்வழிபடுத்துவது என்பது வெறு மதச்சாா்பற்றத்தன்மை என்ற பெயாில் கலாச்சாரம் பண்பாடுகளை இழந்து வாழ்வது வேறு. சமய சமரச நோக்கில் சமயம் சாா்ந்து வாழ்வது சிறந்தது. நேபாளத்தில் இனிமேல் பண்பாடு தேயும். இந்தியா போல்.
Check in youtube:
nepal animal sacrifice
----------
enjoy !!.
காலத்திற்கு ஏற்ப சமய கலாச்சாரம் மாறும் பாிணாமம் அடையும்.அதைஊக்குவிக்க வேண்டும். ஒன்றை புறக்கணிக்காது அக்கறை கொள்ளும் போதுதான் குறைகளை நீக்கி வளா்ச்சி காண முடியும். சமயசாா்பற்ற தன்மை என்பது சமயத்துறையில் ஒரு தேக்க நிலையை உருவாக்கி விடும். இன்று இந்தியாவில் உள்ள கலாச்சார சீரழிவிற்கு அரசியல் ஊழலுக்கு மதசாா்பற்ற தன்மை என்று இந்துமதத்தை உதாசீனப்படுத்தியதும் ஒரு காரணம். இந்நிலை நேபாளத்திற்கு வர வேண்டுமா ? முஸ்லீம் குழந்தைகள் முறையான சமய கல்வி பெறும் போது இந்து குழந்தைகளுக்கு அதை மறுக்கலாமா ?திருமூலாின் விவேகானந்தாின் ஞானதீபம் ஒவ்வொரு இந்துவின் மனதிலும்ஏற்றப்பட வேண்டும்.மனித வளம் பெறுக அதுதான் வழி.
Post a Comment