
'தலையில் தொப்பி போடாத, நெஞ்சில் கை கட்டும், விரலை ஆட்டும் நபர்களுக்கு இந்த பள்ளியில் தொழ அனுமதியில்லை' என்று தமிழகத்தின் பல பள்ளிகளில் மார்க்கம் அறியாத நிர்வாகிகளால் இன்றும் போர்டு வைக்கப்படுகிறது. இது முற்றிலும் இஸ்லாத்துக்கு விரோதம் என்று ஏனோ அவர்களுக்கு தெரியவில்லை. மறுமையில் இறைவன் எந்த ஆதாரத்தில் இப்படி ஒரு போர்டை வைத்தாய் என்று கேட்டால் என்ன பதிலை இவர்கள் வைத்திருக்கிறார்கள்.
அந்த போர்டை எடுத்து விட்டு இனி இது போன்ற வரதட்சணைக்கு எதிரான போர்டுகளை நிர்வாகிகள் வைப்பார்களா? மாற்றாரும் இஸ்லாத்தை ஏற்க இந்த வரதட்சணை பெரும் தடையாக உள்ளது. இது போன்ற போர்டை பார்த்தாவது வரதட்சணை வாங்குபவர்கள் திருந்த வாய்ப்புள்ளது. பள்ளி நிர்வாகிகள் இது போன்ற போர்டுகளை பள்ளிகள் தோறும் வைப்பார்களாக!
No comments:
Post a Comment