
ﺑَﻦْ ---- بً
பன் - BAN என்ற இரண்டு எழுத்தை சுருக்கி ஒரு எழுத்தாக இங்கு பார்கிறோம். இரட்டை பதஹ குறியை எழுத்தின் மேல் எழுதினால் அங்கு இரண்டு எழுத்துக்கள் மறைந்துள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம்.
كِتـَابًا (ki-taa-ban) கி - தா - பன் ---------- கிதாபன் என்று உச்சரிக்க வேண்டும்.
படம் ஒன்றில் உள்ள எழுத்துக்களை அன், பன், தன், ஸன், ஜன், ஹன்....என்று உச்சரிக்க வேண்டும்.
-------------------------------------------------
ﺑُﻦْ ----- بٌ
புன் - BUN என்ற இரண்டு எழுத்தை சுருக்கி ஒரு எழுத்தாக இங்கு பார்கிறோம். இரட்டை தம்மஹ் குறியை எழுத்தின் மேல் எழுதினால் அங்கு இரண்டு எழுத்துக்கள் மறைந்துள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம்.

படம் இரண்டில் உள்ள எழுத்துக்களை முறையே உன், புன், துன், ஸீன், ஜீன் என்று படிக்க வேண்டும்.
كِتـَابٌ (ki-taa-boon) கி - தா - புன் -------- கிதாபுன் என்று உச்சரிக்க வேண்டும்.
-----------------------------------------------
ﺑِﻦْ ---- بٍ
பின்- BIN என்ற இரண்டு எழுத்தை சுருக்கி ஒரு எழுத்தாக இங்கு பார்கிறோம். இரட்டை கஸர குறியை எழுத்தின் மேல் எழுதினால் அங்கு இரண்டு எழுத்துக்கள் மறைந்துள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம்.

படம் மூன்றில் உள்ள எழுத்துக்களை இன், பின், தின், ஸின், ஜின், ஹின்..... என்று அனைத்தையும் உச்சரித்து பழகுங்கள்.
كِتـَابٍ (ki-taa-bin) கி - தா - பின் ------- கிதாபின் என்று உச்சரிக்க வேண்டும்.
மேலே கொடுத்துள்ள உதாரணங்களை எழுதியும் படித்தும் வாருங்கள். மேலும் விரிவாக இறைவன் நாடினால் அடுத்த பாடத்தில் தொடர்வோம்......
1 comment:
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
Post a Comment